Wednesday, 6 June 2012

அதிர்ச்சியடைய வைத்த ரியாலிட்டி ஷோ – சொல்லுவதெல்லாம் உண்மை




குர்மளா சின்னசாமிவணக்கம்..

கேமிரா மேன்கட்..கட்..மேடம்..என்னாது இது..நார்மலா வணக்கம் சொல்லுறீங்க..வாழைப்பழத்துல வழுக்கி விழுந்த மாதிரி ஒரு வணக்கம் போடுவீங்களே..அது மாதிரி சொல்லுங்க

குர்மளா : வணணணக்க்க்க்க்க்ம்ம்ம்ம்ம்

கேமிரா மேன்அது..இப்ப ஆரம்பிங்க பார்ப்போம்..

குர்மளா : போட்டிகள் நிறைந்த இந்த உலகத்துல பார்த்திங்கன்னா, உயிர்வாழுறதுக்கே ரொம்ப போராட வேண்டியிருக்கு..ஆனாலும், அதையெல்லாம் தாண்டி, மனித உறவுகளுக்கிடையே எவ்வளவு வேறுபாடுகள்..சிலநேரம் அந்த வேறுபாடுகளின் விளைவாக வர்ற சண்டையைத் தான், இந்த நிகழ்ச்சி, அத்துவிடுது..இது..தீர்த்துவிடுது..இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கு வந்திருக்கிற இரண்டு மனிதர்கள்..குமாரு, ரமேஷ்..இந்த வேறுபாடுகளினால் வர்ற சின்னசின்ன பிரச்சனைகளால பாதிக்கப்பட்டவங்க..அவர்களைத்தான் நாம் சந்திக்கப்போகிறோம்..அவர்களுக்கு வயது 6…இந்த வயதிலயும் கடுமையாக உழைக்கிறாங்க..போராடுறாங்க..அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு பார்ப்போம்..ரமேஷ்....வாங்க உக்காருங்க..

குமாரு : யக்கா..சாக்லேட்டு தருவேல்ல

குர்மிளா : யக்கான்னாலும் கூப்பிடக்கூடாது..சாக்லேட்டு நிகழ்ச்சி முடிஞ்சப்புறம்தான்..

குமாரு : என்னாது..சாக்லேட்டு கொடுக்கமாட்டியா..ம்ம்ம்..(அழ ஆரம்பிக்கிறான்)

குர்மிளா : (கேமிராமேனிடம்) அழுறான் பாருங்க..நல்லா போகஸ் பண்ணுய்யா..டி, ஆர். பி எகிறும்..குமாரு..நீங்க மனஅழுத்தத்தாலே எவ்வளவு பாதிக்கப்பட்டிருங்கன்னு எங்களுக்கு தெரியும்..சொல்லுங்க..உங்களுக்கு என்ன பிரச்சனை..

குமாரு : (ம்ம்ம்..அழுதுகொண்டே) பக்கத்து பெஞ்சுப்பையன் ரமேஷ்ஷூ இருக்கானுலக்கா..அவன் என்னை தொடையில கிள்ளி வைச்சுட்டான்….ம்ம்ம்ம்

குர்மிளா : என்ன அராஜகம்..இது..ஸ்..யப்பா..எவ்வளவு போராட்டங்களை தாங்கியிருக்கிங்க..கேக்கவே மனசு கஷ்டமா இருக்குது..தொடையில கிள்ளுற அளவுக்கு நீங்க என்ன பண்ணுனீங்க..

குமாரு : என் மிட்டாயைத் திருடிட்டான்..அதனால நான் கோபமாகி, அவன் கையை கடிச்சி வைச்சிட்டேன்..

குர்மிளா : ..எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கீங்க..போலீசுக்கு போயிருந்தா என்ன நடந்திருக்கும் தெரியுமா….உங்க மேல எப்..ஆர் போற லெவலுக்கு போயிருக்கும்..அப்படி என்ன உங்க, மனசுக்குள்ள அழுத்தம்..ஏதாவது, மனக்குழப்பத்தால பாதிக்கப்பட்டு, தவறு செய்ற அளவுக்கு உங்களை கொண்டு வந்த, இந்த சமுதாயத்து மேல உங்களுக்கு அப்படி என்ன கோபம்..கமான்..அழுவுங்க..இது..கதறுங்க..சாரி..சொல்லுங்க..

குமாரு : யக்கா..சாக்லேட்டு வேணும்..(அழுகிறான்)

குர்மிளா : பார்த்தீர்களா நேயர்களே..இப்படித்தான் சமுதாயத்தில், ஒவ்வொரும் எவ்வளவு பிரச்சனைகளையும், அழுத்தங்களையும் தாண்டி வரவேண்டியிருக்கிறது..கண்டிப்பாக குமாரின் பிரச்சனைகள் இந்த நிகழ்ச்சியில் தீர்க்கப்படும்..இப்பொழுது குமாரின் நண்பன் ரமேஷ்ஷை கூப்பிடலாம்..ரமேஷ்ஷீ..

ரமேஷ் (மூக்கு ஒழுகிக்கொண்டு வந்து அமர்கிறான்)

ரமேஷ் : குட்மார்னிங்க் மிஸ்..டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..ஹௌ ஒண்டர்..

குர்மிளா : சொல்லுங்க ரமேஷ்..ஏன் அப்படி பண்ணுனீங்க..குமாரை அவ்வளவு மனகஷ்டத்துக்கு ஆளாக்குற அளவுக்கு, உங்களுக்கு என்ன மனநோய்..சொல்லுங்க..கமான்

ரமேஷ் : மிஸ்..அவந்தான், என்னை கிள்ளி, கிள்ளி வைக்கிறான் மிஸ்..

குர்மிளா : உங்க சைடும் தப்பு இருக்கில்லியா..நீங்க ஏன் அவன் மிட்டாயைத் திருடுனீங்க..சொல்லுங்க..இந்தப் பழக்கம் உங்களுக்கு பிறக்கும்போதே இருந்துச்சா..இல்லாட்டி, பின்னாடி பழகிக்கிட்டீங்களா..இல்லாட்டி, ஏதாவது, நண்பர்களோடு சேர்ந்து, அதனால், தீயபழக்கங்கள் பழகி..துரோகம் பண்ணி

கேமிரா மேன் : மேடம் அந்த மனஅழுத்தத்தை மறந்துட்டீங்க..

குர்மிளா: தேங்க்ஸ்..அது..அதனால வந்த மனஅழுத்தத்தால..திருட ஆரம்பிச்சீங்களா..சொல்லுங்க ரமேஷ்..

ரமேஷ் : மிஸ்..அவந்தான் எப்ப பார்த்தாலும், என்னை அடிச்சிக்கிட்டே இருக்கான் மிஸ்..கடிச்சு, கடிச்சு வைச்சிக்குறான் மிஸ்

குர்மிளா : மை காட்..வாட் க்ரைம்..குமார்..நீங்க கடிப்பீங்களா..

குமாரு : ஆமாக்கா..சாம்பிளுக்கு வேணா, ஒரு கடி உங்களை கடிச்சு காட்டவா..

குர்மிளா : நோ..என்ன ஒரு வன்முறை..எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது, அப்படின்னு இந்த நிகழ்ச்சி தீர்க்கமா நம்புதுஇன்னைக்கு கடிக்க நினைக்குற நீங்க..நாளைக்கு பாம் போட மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்..

ரமேஷ்: இவந்தான் மிஸ் எப்ப பார்த்தாலும் பாம் போட்டுக்கிட்டே இருப்பான்..கிளாஸ் ரூமே மூக்கைப் பொத்திக்கும்

குர்மிளா : ஐயோ..எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கிங்க, குமாரு..நீங்க செஞ்ச பாவத்துக்கு ரமேஷ்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்களா..

குமாரு : யக்கா சாக்லேட்டு

குர்மிளா : அது அப்புறம்..முதல்ல மன்னிப்பு கேட்குறீங்களா..இல்லைன்னா, காவல்துறையை நாடி, சுமூகமா, பிரியுறீங்களா..

ரமேஷ் : மிஸ்.,,.காவல்துறை கேப்டன் நடிச்ச படமுல்ல..விசயாகந்து கூட சூப்பரா சண்டை போடுவாருல்ல..நேத்து கூட கே.டி.வியில(சவுண்ட் ம்யூட் செய்யப்படுகிறது) போட்டாங்க...சூப்பர்..

குர்மிளா : பேச்சை மாத்தாதீங்க ரமேஷ்..நீங்க மன்னிப்பு கேக்குறீங்களா..இல்லாட்டி, இங்கயே சண்டை போடுறீங்களா(கேமிராமேனிடம்..ரெடில்ல..இன்னம் கொஞ்ச நேரத்துல, ஒரு வெட்டுகுத்து நடக்கும்..ரெடியாயிரு..எல்லாத்தையும் பிடிச்சுருணும்..)

குமாரு : யக்கா சாக்லேட்டு

குர்மிளா : ம்..ஹீம்..இனிமேல் உங்களிடம் பேசி பிரச்சனையில்ல..உங்க பேரண்ட்ஸ் எங்க இருக்காங்க..கூப்பிடுங்க..

(ரமேஷ், குமாரின் பேரண்ட்ஸ் வருகின்றனர்)

குர்மிளா : என்னங்க உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கா..இப்படி அசட்டையா இருந்திருக்கீங்களே..எவ்வளவு ஒரு சமுதாய வன்முறை, நடந்திருக்கு..உங்க பையன்கள் மேல் திணிக்கப்படிருக்கு

பேரண்ட்ஸ் : மேடம்..இதெல்லாம் ஒரு பிரச்சனையா,,கிள்ளிதான வைச்சான்

குர்மிளா..நோ..இப்படி எல்லாரும் அசட்டையா இருந்தா, நாங்க டி.ஆர்.பிக்கு..இது..பிரச்சனைகளுக்கு எங்க போறது..குமார் பேரண்ட்ஸ்..உங்க பையன் மேல ஒரு சமுதாய வன்முறையே நடந்திருக்குங்க..

குமார் பேரண்ட்ஸ் : என்னது..எங்க சமுதாயத்து மேல பிரச்சனையா

குர்மிளா : (ஆஹா..இது நல்லாருக்கே.)..ஆமாங்க..உங்க சமுதாயத்துமேல ஒரு வன்முறையே நடத்தியிருக்கு, எதிர் சமுதாயத்தை சேர்ந்த ரமேஷ்ஷை சார்ந்த சமுதாய்ம்..

குமார் பேரண்ட்ஸ் : டேய்ய்ய்ய்ய்..எந்த சாதிக்காரண்டா, எங்க சாதிக்காரன் மேல கைய வைச்சது..டேய்..வாங்கடா ரத்தம் பார்க்கமா போகமாட்டோம்டா

குர்மிளா : ரமேஷ் பேரண்ட்ஸ்..என்னங்க..உங்களுக்கு வெட்கம் மானம், ரோசம், எதுவுமே இல்லையா..சோறு தானே சாப்பிடுறீங்க..உங்க சமுதாயத்து மேல, வன்முறைய தூண்டுறாங்க..

கேமிராமேன் : மேடம் அந்த மனஅழுத்தத்தை மறந்துட்டீங்க

குர்மிளா : தேங்க்ஸ்..எஸ்..மனஅழுத்ததினால், உங்க சமுதாயத்து மேல ஒரு வன்முறையே நடக்குது..பார்த்துட்டு சும்மா இருக்குறீங்களே..உங்க சமுதாயமே இப்படித்தானா..

ரமேஷ் பேரண்ட்ஸ் : டேய்ய்..எங்க சாதியாவடா தப்பா பேசுறீங்க..

(என்று கத்தியை எடுத்து குமார் அப்பாவை ஒரே குத்தில் சாய்க்க..குமார் குடும்பம் டெர்ராகி, ரமேஷ் அப்பாவை போட்டுத்தள்ளுகிறது..அனைத்தையும் சுடச்சுட கேமிரா படம்பிடிக்க, கலவரபூமியில் குர்மிளா)

கேமிராமேன்: மேடம்..மேக்கப் கொஞ்சம் கலைஞ்சுருச்சு..போட்டிக்குரிங்களா..அப்படி, குத்துயிரும், குலையுயிருமா கிடக்குற, குமார் அப்பாவையும், குடல் சரிஞ்சு கிடக்குற ரமேஷ் அப்பாவையும் போகஸ் பண்ற மாதிரி, நடுவுல நின்னுக்கிட்டு ஸ்டைலா, நிகழ்ச்சித் தலைப்பை சொல்லுங்க பார்ப்போம்

குர்மிளா : (ஸ்டைலாக) சொல்லுவதெல்லாம் உண்மை..இது மக்களின் மனசாட்சி..

(டி.ஆர்.பி எகிற, குஜய் டி.வியும், பன் டிவியும் கடுப்பாகிறார்கள். அடுத்தநாள் குஜய் டி.வி விளம்பரம் : நடிகை லட்சுமியின் கதையல்ல நிஜம்..மீண்டும்..உங்களுக்காக என்று ஆரம்பிக்க, கோபிநாத் டென்சனாகி, “இதுக்கு ஏன்யா தனியா ஒரு நிகழ்ச்சி..நீயா நானாவுல இதைதானய்யா ரொம்பநாளா செஞ்சிக்கிட்டு இருக்கேன்என்று டென்சனாகிறார்..)

12 comments:

Anonymous said...

என்ன செய்ய கலிகாலம்

படிக்க இன்பம் வெளியில் இல்லை !

Anonymous said...

kodumaiyada saami thaangamudiyala
nandri

Simulation said...

http://simulationpadaippugal.blogspot.in/2006/03/blog-post.html

Anonymous said...

sema comedy ponga...

nice..

Unknown said...

நீங்க சொன்ன அத்தனையும் நிதர்சனமான உண்மை
அவர்களின் டார்கெட் எல்லாம் ஏழைகள் அறியாதவர்களின் அறியாமையை, பெரிதுபடுத்தி, பிரபலபடுத்தி அவர்களை குற்றுயுருமாய் குலையுருமாய் ஆக்கி அதில் பனம் பன்னி பிணந்திண்ணிகள்

LambertAnto said...

நீங்க சொன்ன அத்தனையும் நிதர்சனமான உண்மை
அவர்களின் டார்கெட் எல்லாம் ஏழைகள் அறியாதவர்களின் அறியாமையை, பெரிதுபடுத்தி, பிரபலபடுத்தி அவர்களை குற்றுயுருமாய் குலையுருமாய் ஆக்கி அதில் பனம் பன்னி பிணந்திண்ணிகள்

Viji said...

அண்ணா
என்னக்கு ஒரு uthavi,பதிவுலகத்தில் ஒரு பெண்மணி(newzealand இல் இருந்து)நெறைய கோவில்களை பற்றி எழுதி கொண்டு இருந்தார்கள்.அவரகளுடைய வலைபூ முகவரி மறந்து விட்டது.இந்தோனேசியா போயிடு வந்துடு பற்றி எல்லாம் அருமையாஇ எழுதுவார்கள்.உங்களுடைய வலைபூ வையும்,அவர்கலடுயத்தையும் தவறாமல் படித்து கொண்டு இருந்தேன்.ஒரு வருடமாக படிக்கச் வில்லை.இப்பொழுது அவர்களுடைய வலைபூ முகவரி மறந்து விட்டது.கொஞ்சம் தெரிந்தால் சொல்லவும.

Anonymous said...

@Viji, I guess you are looking for thulasidhalam dot blogspot dot in.

அவிய்ங்க ராசா said...

நன்றி ஆரணன்,
நன்றி அனானி நண்பர்
நன்றி சிமுலேஷன்
நன்றி அனானி நண்பர்
நன்றி ரவி,
நன்றி ஆண்டோ
நன்றி விஜி, உங்களுக்கு நண்பர் பதிலளித்துள்ளார்
நன்றி அனானி நண்பர்

Viji said...

annaa
உங்களுக்கும் அந்த நண்பர்க்கும் மிக்க நன்றி.கூகுள் தேடி கிடைக்காதது உங்க வலைபூ ல தேடியதும் கிடைத்தது.மிக்க நன்றி.

vijay said...

dear

vijay said...
This comment has been removed by the author.

Post a Comment