Monday 11 February, 2013

ஏர்டெல் கர்நாடிக் சிங்கர்



காலையில 1 மணியிலிருந்து காத்திருக்கேன் சார்..”

இந்தவாட்டி கண்டிப்பா வாங்கியே தீருவேன்..”

இதோட மூணுமுறை டிரை பண்ணினேன்..முடியலை..இந்தவாட்டி கண்டிப்பா வாங்கிருவேன்..”

இதெல்லாம் அமெரிக்க விசா வாங்குவதற்கு க்யூவில் நிற்பவர்கள் அல்லது சாப்ட்வேர் கம்பெனி வேலை வாங்குவதற்கு க்யுவில் நிற்பவர்கள் சொன்னதல்ல. விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கருக்காக முதல் ரவுண்டில் செலக்ட் ஆவதற்கு காலை 1 மணிக்கெல்லாம் கண்முழித்து நின்று, காலையில் மேக்அப் போட்டு மைக்கை நீட்டிய நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் திருவாய் மலர்ந்த வார்த்தைகள்..

ஒவ்வொருவர் கண்ணிலும் எப்படியாவது, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஆகவேண்டும் என்ற வெறி, தூக்க கலக்கத்தை மீறி தெரிந்தது. அதிலும், சிலபேர், முந்தைய நாளே மைதானத்தில் வந்து டெண்ட் போட்டதை பெருமையாக சொல்லியபோது, “அட..நம்ம தமிழ்நாடு சூப்பரோ சூப்பர் சிங்கராக மாறுதுங்கோஎன்று தெருப்பக்கம் வந்து கத்தணும்போல ஆசையாக இருந்தது..எவனாவது சுருதி..இது..சுதி சரியா இல்ல..நொவான்சிஸ் சரியா இல்லைன்னு குத்தம் சொல்லிருவாய்ங்களேன்னு பயம் வேற..

ஒருவிதத்தில், இதுபோன்ற சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிகள், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர வாய்ப்பாக இருக்கிறது, என்று சந்தோசப்பட்ட போதிலும், “நாலு ஸ்வரம் மேல பாட மாட்டிங்குறாய்ங்க எங்க 3 வயசுபையன்என்று எதிர்வீட்டு அக்கா கம்ப்ளெயின் செய்யும்போது ஜெர்க் அடிக்கவைக்கிறது..

நமக்கெல்லாம் கமல் பொண்ணு சுருதி தவிர எதுவும் தெரியாது என்பது வேறு விசயம். சரி, இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து , கேள்வி ஞானத்தை வளர்த்து கொள்ளலாம் என்று பார்க்க ஆரம்பித்தால், நடக்கும் கூத்துகளால், நமக்கும் காதல் தண்டபானி குரல் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது

தமிழ்நிகச்சியில் தமிழிசைக்கு ஏதாவது இடம் இருக்கிறதா என்று தேடினால், “தேடினாலும், கிடைக்காது..” என்கிறார்கள்..கர்நாடக இசைப் பாடல் பாடுபவர்களுக்கு கிடைக்கும் அங்கிகாரம், தமிழிசை பாடல்கள் பாடினால் கிடைக்கிறதா என்றால், விடைகிடைக்காத கேள்வியே….

சரி..யாராவது மண்மணக்கும் எங்கள் கிராமத்து பாடல்களை பாடுகிறார்கள் என்றால்..அடப்போங்க சார்..குத்துபாட்டு என்றால் கூட..தண்ணி தொட்டு தேடிவந்தஎன்ற பாடல்தானா..ஏன் எங்கள் கிராமத்துப்புறங்களில் துள்ளலிசை பாடல்களுக்கா பஞ்சம்..அல்லது, அப்படிப்பட்ட திரையிசை பாடல்களே இல்லையா..அப்படி பாடினால், அவர்களைப்ளூப்பர்என்று கூப்பிட்டுவைத்து கிண்டல் செய்யும் கொடுமை வேறு

கேள்விஞானத்தை வைத்து கொண்டு, முயற்சியாவது செய்யலாம் என்று தன்னம்பிக்கையோடு வருபவர்களுக்கு,

சாரி சார்..நுவான்சிஸ் சரியில்லை..”
ரெண்டாவது வரியில் சுதி சர்யில்லை..”
தாளம் தப்புது சார்..”
கமகம் இன்னும் நல்லா வரணும்..”

என்று அவர்களின் கனவில் புல்டோசர் வைத்து ஏற்றுவது என்ன நியாயமோ..

எனக்கு ஒன்று தெரியவில்லை..ஒருவர் பாடகராக ஆகவேண்டுமானால் கண்டிப்பாக கர்நாடக இசை தெரிந்திருக்கவேண்டுமா..நன்றான குரல்வளமும், சற்று கேள்விஞானமும், தமிழை நன்றாக உச்சரிக்கும் திறமையும் போதாதா..அப்படி தெரியாவதர்கள், முதல் அல்லது இரண்டாவது ரவுண்டிலே துரத்தியடிக்கப்படுவதை பார்க்க முடிந்தது

வழக்கம்போல, இந்த தடவையும் ஏதொ ஒருஸ்ரீராமோ”, “நாராயணனோ” “அஸ்வினோஅல்லது ஏதாவதுமேனன்தான் சூப்பர் சிங்கர் டைட்டில் வாங்கப் போகிறார்கள். ஆனாலும் எங்க ஊர் கணேசனோ, முருகனோ ஒருமுறையாவது, தவறி டைட்டில் இல்லை அட்லீஸ்ட் இரண்டாவது ரவுண்டுக்காவது வந்துவிடுவோனோ என்று தேடிகொண்டிருக்கிறேன்…..ம்..ஹீம்..தமிழ்நாட்டில் அல்லவா பிறந்திருக்கிறோம்

Saturday 2 February, 2013

கடல் – செத்தாண்டா சேகரு…


படத்தில் ஒரு வசனம் வருகிறது..பள்ளிக்கூடம் பக்கம் கூட நெருங்காத படத்தின் நாயகன், சர்ச் பாதரைப் பார்த்து..

பாதர்..நீங்க என் குரு..என் வாழ்க்கையில நீங்க எந்த பாதையை தேடுனீங்கன்னு எனக்கு தெரியல..அதுகூட என்னால வரமுடியலை..ஆனா, எனக்கு அந்த பாதையை ஒரு தேவதை காட்டுனா..அவ பின்னாடியே அந்த பாதையில கையபிடிச்சுக்கிட்டு நடந்துருவேன்..”

நல்லா பார்த்துக்க்குங்கண்ணே..பள்ளிக்கூடம் பக்கம் கூட நெருங்காத பயபுள்ள, பாதரை பார்த்து, இலக்கியத்தரமா மேலே உள்ள டயலாக்கை பேசுராறாம்மா..

மேலே உள்ள டயலாக்குதுதான் ஒரு பருக்கை..இப்ப ஒரு பானை சோறு எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சுக்குமே..அதான்..கடல்புறத்து படம் என்று சொல்லிவிட்டு, கடல்புறத்து வாழ்வியல் எங்க இருக்குன்னு கேட்டீங்கன்னா, பின்நவீனத்துவ கோவம் வந்துரும்..ஜாக்கிரதை..

அதாவதுண்ணே..நம்ம மணிரத்னம் சார்..பார்த்துருக்காரு..என்னடா ஹிட்டு குடுத்து ரொம்ப நாளாயிருச்சே..என்ன பண்ணலாம்னு, அசிஸ்டெண்ட் டைரக்டர்சோட காபிடேல உக்கார்ந்து யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப.,

எக்ஸ்க்யூஸ்..மீ..சார்..கேன் வீ கேவ் சம் சீ புட்....மீன்..பிஷ்..”

அப்படின்னு ஒரு பயபுள்ள மீனு சாப்பிட ஆசைப்பட்டு சொல்லியிருக்கும்..உடனே டய்ங்க்ன்னு, பல்ப் எறிய, “எடுடா அந்த கொக்ககோலா கேனைஅப்படின்னு ஒரு மாசம் நம்ம தூத்துக்குடி இல்லாட்டி நம்ம நாகர்கோவில் பக்கம் கேம்ப் அடிச்சிருப்பாய்ங்க..ஜீன்ஸ் போட்டுக்கிட்டு மை காட்..வாட் ஸ்மெல்அப்படி சொல்லிக்கிட்டே, சென்னையில இருந்து வந்திருக்கும், ஜீன்ஸ் போட்ட யுவதிகளுக்கும், யுவன்களுக்கும் லைட்டா, ஒரு கோட்டு கருப்பு பெயிண்ட் அடிச்சா..கடல் புறத்து மக்களாம்..ஆஹா..ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுதே..ஆங்க்..”ஏலே..மக்கா..வாலே இந்தப்பக்கம்..” அதாவது கடல்பாஷை பேசுறாங்களாமாம்..

அப்ப்புறம்சூசை..தாமஸ்(தொம்மை), பெர்ணாணடஸ்….கிறிஸ்டின் பெயர் வைச்சா..6 மாதத்தில்கடல்படம் ரெடி..இட்ஸ் சிம்பிள்

என்னது படத்தின் கதையா..சரி..கேட்டுத் தொலைங்க..அம்மா இல்லாமல் வளரும் கவுதம், சர்ச் பாதரான அரவிந்த் சாமியால் வளர்க்கப்படுகிறார்..ரவுடி மாதிரி இருக்கும் நாயகனை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கையில், சூழ்ச்சியால் அவரை கவிழ்க்கிறார் அர்ஜூன்..காரணம் என்னவென்றால், பழைய பகை..ஒரே மிஷுனரியில் படிக்கும், அரவிந்த்சாமி அர்ஜுன் ஒரு தவறு செய்யும்போது, காட்டி கொடுத்துவிடுகிறார்..அதற்கு பழிவாங்குறாராம்..என்னதுநாயகி பத்தியா..அடப்போங்கையா..

கடல்புறத்து வாழ்வியல் இப்படியா இருக்கும்..வேர்வையால் நனைந்து போன உடம்பு, எங்கும் வீசும் மீன்வாடை, கருவாட்டு வாசம்..உள்ளுக்குள்ளே அடங்கிகிடக்கும் சோகம்..என்று வெளியே வரும்போது, சட்டையை மோந்து பார்த்தால், மீன் கவிச்சி அடிக்கவேண்டாமா..ம்..ஹூம்பாரின் செண்ட் வாசம்தான் வருகிறது..

கடல்புறத்து வாழ்வியலா..கிலோ என்னவிலை என்று கடல் பற்றிய படத்தில் கேட்கவைத்திருப்பதுதான் கொடுமை..கொஞ்சம் ஆறுதலளிப்பது அரவிந்த்சாமிதான்..நன்றாக நடித்திருக்கிறார்..அர்ஜீன்..வில்லனா....மை..காட்..

படத்தில் கவுரவவேடத்தில் தோன்றியிருக்கும் நாயகன் கவுதமும், நாயகி துளசியும் படத்திற்கு ஒன்றும் உதவியதாக தெரியவில்லை...ஆர் ரகுமான் பாடல்கள், ஆடியோவாக கேட்க நன்றாக இருந்தாலும்..சாரி..சார்..எங்கள் கடல்புறத்து பாடல்கள் இப்படி இருக்காது..அதுவும் கடைசியாக, கிளைமாக்சில் அரவிந்த்சாமி பாடும் பாட்டு, ஏதோ அமெரிக்க சர்ச்சில் கேட்பது போல் இருக்கிறது.. ராங்க் சாங்க் பிரம் ராங்க் பிலிம்

நாவலுக்கு எழுதவேண்டிய வசனத்தை, படத்துக்கு எழுதினால் என்ன கதி என்பதற்கு படத்தின் வசனம் சான்று..வசனம் ஜெயமோகனாம்..படத்தின் ஒரே ஒரு ஆறுதல், ஒளிப்பதிவு..இதெல்லாம் நம்ம ஊருலயா இருக்குது என்று விசனப்படவைத்திருக்கிறார், ராஜீவ்மேனன்..அதுவும், மேல் எழும்பும் கடல்நீர் நம்மேல் தெளிப்பது போல் ஒரு பிரமை..மிகநன்று..

முடிவாக, கடல்புறத்து வாழ்வியலுக்கும், இந்தப் படத்துக்கும், கடலளவு தூரம்..மணிரத்னம், ஓய்வுபெறவேண்டிய நேரம் நெருங்கிவிட்டதோ


கவுதம் அப்பா நடிகர் கார்த்திக் பாணியில் சொல்லவேண்டுமென்றால்..

(வெத்தலையை வாயில் போட்டு நன்றாக குதக்கி கொள்ளவும்)

ம்..ஹே....இது..இட்ஸ்..அது வந்து........இட்ஸ்....இட்ஸ். மொக்கை..அது வந்து..இட்ஸ் ஒரு மொக்கைப் படம்...