“சார்..குட்ஈவினிங்க்..திஸ் இஸ் ஸ்வேதா.இஸ் திஸ் ராஜா..”
“எஸ்..மேடம்..நாந்தான் சொல்லுங்க...”
“சார்..சமீபத்துல, கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்ல ஏதாவது கூப்பன்
பில் பண்ணியிருந்தீங்களா..”
“ஆமா..வி.ஐ.பி படம் போறப்ப, யாரோ ஒருத்தர், டீடெய்ல்
கேட்டிருந்தார்...கொடுத்திருந்தேன்...”
“கங்கிராட்ஜ்லெசன்ஸ் சார்..நீங்க லாட்டுல செலக்ட்
ஆகியிட்டிருங்கீங்க...உங்களுக்கு சுமார் 40,000 மதிப்புள்ள கிப்ட்
காத்திருக்கு....ஒய்ப்போட வந்து கலெக்ட் பண்ண முடியுமா..இன்னைக்கு ஐந்து
மணிக்குள்ள **** மாலுல வந்து கலெக்ட் பண்ணிக்குங்க..”
“இன்னைக்கு முடியாது..பட் உண்மையத்தான் சொல்லுறீங்களா..”
“சார்..அப்சல்யூட்லி சார்..இந்த வீக் எண்ட் வந்து கலெக்ட்
பண்ணிக்குங்க..ஆனா கண்டிப்பா ஒய்ப்போட வரணும் சார்...”
“ஓகே மேடம்..”
“ஏங்க சுடிதார் போட்டுக்கவா..இல்ல சாரி கட்டவா..போட்டோ எல்லாம்
எடுப்பாய்ங்கள்ள..பேப்பருலாம் போடுவாய்ங்களா..”
“தெரியலையேப்பா..”
“நாப்பதாயிரம் மதிப்புன்னு சொல்லுறாய்ங்கள்ள..என்ன
குடுப்பாய்ங்கன்னு கேட்டீங்களா..”
“அவிங்க சொல்லைலியே..”
“என்ன்ங்க..நீங்க..இவ்வளவு அலட்சியமா இருக்கீங்க..ஏதாவது,
பிரிட்ஜ், வாஷிங்க்மெஷினுன்னு இருந்தா, எப்படி தூக்கிட்டு வரமுடியும்..ஏதாவது
லாரி, வேனு அரேஞ்ச் பண்ணனுமா..”
“அடியே..அவிங்க என்ன கொடுப்பாய்ங்கன்னு தெரியாது..எதுனாலும்
அங்க போயி பார்த்துக்குருவோம்..”
“ஏங்க..நாம ஏற்கனவே வைச்சிருக்குற திங்க்
கொடுத்தாய்ங்கன்னா..நாம வேணாம்னு சொன்னா, பணமா கொடுத்திருவாயிங்க்ளா..”
“தயவு செஞ்சு வரியா..5
மணிக்கே வர சொல்லிரிந்தாய்ங்க..லேட்டா போனா கேன்சல் கீன்சல் பண்ணிரப் போறாய்ங்க...”
“எக்ஸ்க்யூஸ்மி..மிஸ் ஸ்வேதா இருக்காங்களா..கால்
பண்ணியிருந்தாங்க..ஏதோ, கூப்பன் செலக்ட் ஆகி, கிப்ட் கொடுக்குறதா...”
“அப்சல்யூட்லி சார்..அங்க ரிசப்சன்ல உக்காருங்க சார்..எங்க
மேனேஜர் வந்து எக்ஸ்ப்ளெயின் பண்ணுவார் சார்..”
“ஓகே சார்...”
“மிஸ்டர் ராஜா..”
“எஸ்..”
“ஐ.ஆம் தினேஷ்..மேனேஜர்..க்ளாட் டூ மீட் யூ..”
“தேங்க்யூ..”
“வாங்க..கான்பிரன்ஸ் ரூம்ல பேசுவோம்..”
“கண்டிப்பா..”
“ஸார்..உங்களுக்கு நாலு கிப்ட் ரெடியா இருக்கு..”
“சார்..என்ன சொல்லுறீங்க..நாலு கிப்டா......டெலிவரி எப்படி
சார்..நீங்களே ஏற்பாடு பண்ணுவீங்களா..இல்ல நாங்க ஏற்பாடு பண்ணுமா..வேணாம்
சார்..நாங்களே ஏற்பாடு பண்றோம் சார்..”
“சார்..வெயிட்..அதுக்கு முன்னாடி, ஒரு ஒன் ஹவர்
பிரசெண்டேசன் ஏற்பாடு பண்ணியிரிக்கோம் சார்..அது முடிஞ்சு நீங்க உங்க கிப்ட்
வாங்கிக்கலாம் சார்..”
“கண்டிப்பா சார்..”
“ஓகே..சார்..இது ஒரு சின்ன சர்வே மாதிரிதான்..நீங்க *****
டூர்ஸ் அண்ட் ப்ராப்பர்ட்டீஸ் கேள்விப்படிருக்கீங்களா..”
“இல்ல சார்..”
“ஓ..இட்ஸ் வெரி பாப்புலர் சார்..எங்க ரிசார்ட் அண்ட்
பிராப்பர்டிஸ் 30 கண்ட்ரில இருக்கு...”
“ஓ..எனக்கு தெரியாது சார்..”
“ஓகே சார்..இப்ப மேட்த்துட்ட ஒரு கேள்வி..ஹாய் மேடம்..உங்க
ஹஸ்பெண்ட் எத்தனை தடவ உங்களுக்கு டூர், வெக்கேசன் கூட்டியிட்டு போயிருக்காரா..”
“ஏது என்னைக்கு சார்..ஆறு வருசம் ஆச்சு..இது வரைக்கும்
பெரிய டூர் எதுவும் போனதில்ல..சார்..இந்த கிப்டு..”
“ஏன் சார்..பாருங்க உங்க மிசஸ் எவ்வளவு கண்கலங்குறாங்க
பாருங்க..நீங்க ஆபிசுக்கு போயிரீங்க..அவுங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க பாருங்க..பேமிலி
டூரெல்லாம் ரொம்ப முக்கியம் சார்..அதுவும் இந்தியா மாதிரி நாடுல, பேமிலி
டூரெல்லாம் இல்லைன்னா குடும்ப அமைப்பே சிதைஞ்சுரும் சார்..”
“சரிங்க சார்..கண்டிப்பா கூட்டிட்டு போயிரேன் சார்..இந்த
கிப்டு...”
“அதுக்கு தான் சார் நாங்க இருக்கோம்..”
“எதுக்கு..”
“அதாவது சார்..எங்க டூர்ஸ் அண்ட் ரிசார்ட் கிளப்ல
மெம்பராயிட்டிங்கன்னா...உங்களோட லைப் டைம் டூர்ஸ நாங்க பார்த்திருக்கோம்
சார்..நீங்க நாலு டைப் கார்டு வாங்கிக்கலாம்..”
“என்னாது..”
“அதாவது சார்..நீங்க தாய்லாந்து, சிங்கப்பூர்..சுவிஸ்..இந்த
மாதிரி டூர் போறீங்கன்னு வைச்சிக்குங்க..”
“சார்..நான் கடைசியா போன டூர் மகாபலிபுரம்தான் சார்..இந்த
கிப்டு..”
“இல்ல சார்..பிற்காலத்துல கண்டிப்பா போவீங்க..சார்..உங்க
ஒய்பை நீங்க கண்கலங்க விடமாட்டீங்கன்னு தெரியும்..அப்படி போகுறப்ப, ஒரு 5 ஸ்டார்
ஹோட்டலுல டிக்கெட் புக் பண்ணிணீங்கன்னா, ஒரு லட்சம் ஆகும்..இப்படி வாழ்நாளுல
இருபது டூர் போனிங்கனா..சுமார் இருபது லட்சம் ஆகும்..”
“அதுக்கு..”
“நீங்க..எங்க கிளப்ல கோல்டு மெம்பர் ஆயிட்டின்னீங்கனா..உங்களுக்கு
எந்த சிரமும் இல்லாம நாங்க பாத்திருக்குவோம்..”
“ஆயிருவோம் சார்..அப்புறம் இந்த கிப்டு..”
“எப்படி சார்..கேசா..கிரெடிட் கார்டா..கிரெடிட் கார்டுனா,
10% டிஸ்கவுண்ட் இருக்கு சார்..”
“புரியலையே..நீங்க எப்படி கிரெடிட் கார்டு...”
“இல்ல சார்..கோல்டு மெம்பர் ஆகணும்னா..ஜஸ்ட் , 1 லட்சம்
இருபதாயிரம் கட்டிட்டீங்கன்னா, மெம்பர்சிப் கார்டு உடனே கொடுத்திருவோம் சார்..”
“சார்..புரியலையே..நான் 1 லட்சம் கட்டணுமா..”
“ஆமா சார்....உங்களுக்காகதான் சார்..இந்த
ஆபர்..தெரிஞ்சவங்களா வேற ஆயிட்டிங்க..”
“தெரிஞ்சவங்களா..பத்து நிம்சம் தான் சார் உங்க கிட்ட
பேசிருக்கேன்..”
“அதாலென்ன..என்ன சார்..இவ்வளவு
யோசிக்கிறீங்க..சரி..சார்..உங்களுக்கு வேணாம், எனக்கும் வேணாம்..இது மாதிரி யாருக்கும்
டிஸ்கவுண்ட் கொடுத்த்தில்ல..நீங்க ரொம்ப லக்கி சார்..80 தவுசண்ட் மட்டும்
கட்டிடுங்க....ராம்..அந்த பார்ம் கொண்டுவாங்க..சாருட்ட கொடுத்து பில்லப்
பண்ணிக்கிங்க..சார்..கேஷா கார்டா சார்..”
“சார்..ஒன்னும் புரியலயே..இதெல்லாம் எங்க மாதிரி
மிடில்கிளாசுக்கெல்லாம் ஒத்து வராது சார்..ஊட்டிதான் நாங்க அதிகபட்சம் போற டூரு..”
“என்னது ஊட்டியா..”
“ஆமாங்க சார்..எங்களுக்கெல்லாம் உங்க கிளப் மெம்பர்ஷிப்
எல்லாம் ஆகாது சார்..ஆமா, இதெல்லாம் கால் பண்ணுறப்பயே ஏன் சார் சொல்லல..”
“அதுக்கென்ன சார்..உங்களுக்கெல்லாம் இந்த மாதிரி ஆபரெல்லாம்
நினைச்சாலும் கிடைக்காது சார்..கடைசியா என்னதார் சொல்லுறீங்க..ஒரே ஆபர்
சார்..60,000...பார்ம்ல சைன் போடுங்க...ராம்..அந்த பார்ம் கொண்டு வர இவ்வளவு
நேரமா..”
“சார்..இருங்க..பார்ம் எல்லாம் வேணாம்..சாரி..”
“ஓ..மை..காட்..உங்களுக்காக 30 நிமிசம் என் டையத்த செலவு
பண்ணியிருக்கேன் சார்..”
“அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்..இதெல்லாம் கால்
பண்ணிருக்கப்பயே சொல்லிரிக்கணும்..”
“ராம்..அந்த பார்ம் அப்படியே வைங்க..சார்..உங்க கிப்ட
வாங்கிக்கிட்டு நீங்க கிளம்புங்க..”
“இல்ல சார்..உங்க கிப்டும் வேணாம், ஒன்னும் வேணாம்..நாங்க
கிளம்புறோம்..”
“சார்..வாங்கிட்டு கிளம்புங்க..இந்தாங்க கிப்ட்
கூப்பன்..அப்புறம் ஒரு கிச்சன் வேர்..”
“இது என்ன கிப்ட் கூப்பன்..”
“ஒரு வருசத்துல எப்பனாலும் யூஸ் பண்ணிக்கலாம்..கோவா..ஒன்
வீக் எங்க ரிசார்டுல தங்கிக்கலாம்....ப்ரீ அக்காமெடெஷன்...அட்மின் பீஸ் மட்டும்,
ஜஸ்ட் ஒரு நாளைக்கு 3000 ரூபா தான்..புட், 20% டிஸ்கவுண்ட்..ஸ்விம்மிங்க் பூல்,
ஜிம் யூஸ் பண்ணிக்கலாம்..அப்புறம்..இந்தாங்க..இந்த கிட்சன்வேர்..கடுகு,
சீரகமெல்லாம் இந்த ஒரே டப்பால போட்டுக்கலாம்..”
“ஏண்டி..இந்த வேன் ஏதோ அரெஞ்ச் பண்ண்ணும்னு சொன்ன, ஒரு வேன்
போதுமா..இல்லாட்டி லாரி, கீரி ஏதாவது அரேஞ்ச் பண்ணவா...”
“சார்..நீங்க வெளியே போய் பேசிக்குங்க..அடுத்த கஷ்டமரை
நாங்க மீட் பண்ண்ணும்..ராம்..”
கூப்பனை கையில் வாங்கி வெளியே வந்தேன்..வெளியே ஒரு
எலக்ட்ரானிக்ஸ் கடையில் சதுரங்க வேட்டை டிரெயிலர் ஓடிக்கொண்டிருந்த்து..
“ஒருத்தன
ஏமாத்தணும்னா..கஷ்டமே படவேண்டியதில்ல..அவன் ஆசையை தூண்டிவிடணும்...”
மேற்கூறிய சம்பவம் துளியளவு கூட கற்பனை இல்லை..எனக்கு
நேற்று நடந்த உண்மையான நிகழ்வு.....40,000 ரூபாய்க்கு அநியாய ஆசைப்பட்ட எனக்கு
கிடைத்த்த்து ஒரு கடுகு டப்பா..உபயோகிக்க நினைக்கவே முடியாத விலையில் டூர் கிப்ட்
கூப்பன்..
செலவு..
சிறுசேரியில் இருந்து வேளச்சேரி போய் வந்தற்கான பெட்ரோல்
செலவு – 140 ரூபா..
“யப்பா..பர்கரு வேணும்...அப்படியே கோக்கு,,,..ஏங்க..எனக்கு
ஒன்னு..” – 350ரூபா
“மால் பார்க்கிங்க் கட்டணம் – 100ரூபா..”
“வந்த்து வந்தாச்சு..அப்படியே ஹாட்சிப்ஸ்ல டின்னர்
முடிச்சுருவோம்க..- 290 ரூபா...
“இன்னா சார்..மழை பெய்யதுன்னு தெரியுதுல்ல..அப்புறம் ஏன்
சார்..ரிஸ்க் எடுத்து ஓட்டுறீங்க..பாருங்க..வண்டி அடி வாங்கியிருக்கு..சரி பண்ண
300 ரூபாவது ஆகும் சார் – 300ரூபா..
“ஏங்க..போட்டோ எல்லாம் எடுப்பாய்ங்கள்ள...பக்கத்து வீட்டுல
எதுவும் நகை வாங்கி போட்டுறவா...’ – மன உளைச்சல்..
“யப்பா சுஸ்ஸூ வருது..வண்டியை நிப்பாட்டு..இல்லைன்னா உம்மேல
பேஞ்சு விட்டுருவேன்..” - பயமுறுத்தல்
“ஏங்க..லைட்டா தலைவலிக்குது....மழைக்காத்துல
அலைஞ்சோம்ல..சாரிடான் நாலு வாங்குங்க....நாளைக்கும் கண்டினியூ ஆச்சுன்னா, டாக்டரப்
பார்த்துருவோமோ..”
எதிர்பார்க்கும், பிள்ட் டெஸ்ட், எக்ஸ்ரே..யூரின்
டெஸ்ட்..ஸ்கேன்..அதிலயும் கண்டுபிடிக்க முடியலைன்னா, மண்டைய ஓபன் பண்ண ஆபிரேசன் மற்றும்
ஹாஸ்பிடல் எதிரே, முட்டைபோண்டா, டீ க்கான செலவு, ஜஸ்ட் சுமார் – 2,42,544 ரூபாய் ஒன்லி...
3 comments:
Nice boss
This happened to me also.Same blood...
Balaji
Same blood. Me too...
Post a Comment