Saturday, 15 December 2012

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – சொர்க்கமே என்றாலும்???



ஆபிசிலிருந்து கிளம்பும்முன் செல்பேசி அழைத்தது..மனைவிதான்..

ஏங்க..ரொம்ப பசிக்குது..நைட்டு சாப்பாடு பண்ணுறதுக்கு லேட் ஆகும்..வர்றப்ப பீட்சா வாங்கிட்டு வர்றீங்களா..”

எனக்கும் பீட்சா சாப்பிடவேண்டும்போல இருந்தது..பீட்சா என்னுடைய பேவரிட் இல்லையென்றாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது சாப்பிட்டுவிடுவேன்..ஆனால் வீட்டிற்கு போகும்முன்பு வாங்கிவிடவேண்டும்..குறைவான நேரம்தான்..என்ன செய்வது..யோசித்து கொண்டே இருந்தவன்..சரி..நம்மிடம்தான், செல்பேசியில் இண்டெர்நெட் உள்ளதே என்று எடுத்தேன்..

பிட்சா ஹட்இணையதளத்துக்கு சென்றேன்..என்ன மாதிரியான பீட்சா வேண்டுமென்று செலக்ட் செய்யுங்கள் என்றார்கள்..ம்..சிக்கன்..ஆனியன்..டொமேட்டோ..ஹேண்ட் மேட் பிரட்.நோ சீஸ்..க்ரீன் பெப்பர்..ஜலீப்பினோ, ரெகுலர் ஜாஸ்..” எல்லாற்றையும் க்ளிக் செய்தேன்..10 டாலர் என்று வந்தது..அருகிலுள்ள பிட்சா ஹட்டுக்கு சென்று 08:15 அமெரிக்க நேரத்தில் சென்று வாங்கி கொள்ளும்படி சொன்னது

வாவ்..அமெரிக்கதான் என்ன மாதிரி சொர்க்கம்..நினைத்துக்கொண்டேன்..நினைத்ததும் கையில் கிடைக்கிறது..அதுவும் 10 நிமிடத்தில்அனைத்தும் டெக்னாலஜி..மனைவி பசிக்குது என்று சொன்னாலே என்று சற்று வேகமாக காரை இயக்கினேன்

எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை..இந்த ஊர் போலிஸ் செவ்ரோலட் காரில் வந்து பின்னாடி லைட் போட்டு காண்பித்தார்கள்..இப்படி லைட் போட்டு காண்பித்தால்..ஓரமாக வண்டியை நிறுத்திவிடவேண்டும்..காரை விட்டு அவர் சொல்லும்வரை இறங்ககூடாது..கையை ஸ்டிரியங்க் மேல் வைத்துகொள்ளவேண்டும்..சந்தேகம் வரும்போல எந்த அசைவும் செய்யக்கூடாது..மீறினால், போலீஸ் ஆபிசர் துப்பாக்கியை எடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் உண்டு..அப்படியே செய்தேன்..

என் கார் அருகில் வந்தவர், கண்ணாடியை இறக்கும்படி சொன்னார்

குட் ஈவினிங்க்

குட் ஈவினிங்க்..”

நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக வந்துள்ளீர்கள்..ஒப்பு கொள்கிறீர்களா..”

வேறு வழி..ஒப்பு கொண்டுதான் ஆகவேண்டும்..இல்லையென்றால் கோர்ட்டுக்கு செல்லவேண்டும்..

எஸ் ஸார்..”

உங்கள் டிரைவிங்க் லைசன்ஸ், ரெஜிஸ்டிரேஷன்., இன்சூரன்ஸ்..ப்ளீஸ்..”

கொடுத்தேன்..

“5 மினிட்ஸ் சார்..”

அவருடைய காருக்கு சென்றவர்..3 நிமிடத்தில் வந்தார்..

உங்களுடைய 150 டாலர் அபராதம் விதிக்கிறேன்..இதுதான் உங்களுடைய ரிசிப்ட்..நீங்கள் இணையதளத்திலேயே கட்டிவிடலாம்..நன்றி..”

என்று கிளம்பிவிட்டார்..எனக்கு டாலர் போனது பற்றி கவலையில்லை..ஆனால் எவ்வளவு அழகாக பிஹேவ் செய்கிறார்கள்..ஒரு கடுப்பு இல்லை..லஞ்சம் இல்லை..கை சொரிதல் இல்லை..”ஸ்டேசனுக்கு போனா 1000 ரூபாய்..சைடுல கவனிச்சாஎன்ற அநியாயம் இல்லை..அனைத்தும் 10 நிமிடங்களில்ல்ல்..வாவ்….

போனை எடுத்தேன்மனைவிக்குத்தான்..நடந்ததை சொன்னேன்

அடியே..அமெரிக்கா..அமெரிக்காதாண்டி..சே..இதே நம்ம ஊரா இருந்தா, அநியாயத்துக்கு லஞ்சம் வாங்கிருப்பாய்ங்க..எவ்வளவு டீசண்டா இருக்காய்ங்க தெரியுமா…”

அன்று பீட்சா ஹட் நெருங்கும் வரை, ஒரே அமெரிக்க புராணம்தான்..என்னுடைய மனைவி ஒரு கட்டத்தில்விடுங்க..காது வலிக்குதுஎன்று சொல்லிவிட்டாள்..பீட்சா ஹட்டுக்கு சென்றேன்..அங்கு, பெரிய ஒரு டிஸ்பிளேயில் என்னுடைய பீட்சா தயாரிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லியது..3 நிமிடங்கள் ..குக்கிங்க்..2 நிமிடங்கள்..கட்டிங்க்..1 நிமிடம் பைனட் டச்சிங்க்..இதோ தயார்வாங்கி கொள்ளவும் என்றது டிஸ்பிளே..

மாலை வணக்கம் சார்..உங்கள் பீட்சா ரெடி..வாங்கி கொள்ளுங்கள் சார்..” என்றார்..

என்னையறியாமல் அவளிடம்..

வெள்ளைக்காரன் வெள்ளைக்காரந்தாய்யா…” என்றேன்..

வாட்..”

நோ..நோ....ஆம் ஜஸ்ட்..பிளாப்பரிங்க்..” என்றேன்..சிரித்தாள்..

பீட்சாவை வாங்கி கொண்டு அவசரம் அவசரமாக வீடு வந்தேன்மனைவியிடம் கொடுத்துவிட்டு திரும்பவும் அமேரிக்க புராணத்தை ஆரம்பித்தேன்..

..வாட் கண்டிரிஎல்லாமே சுலபமாக கிடைக்கிறது தெரியுமா..எவ்வளவு நாகரிகம்எவ்வளவு டெக்னாலஜி..எவ்வளவு பணிவுகஸ்டமர் சாடிபிகேசன்மனுசனை மனுசனா மதிக்கிறாய்ங்க தெரியுமாநம்ம ஊருல இதெல்லாம்..சே..சேபேசாம இங்கேயே செட்டில் ஆயிரலாம் போல இருக்கு..” என்றேன்

ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள்

பீட்சா சாப்பிடுங்க..” என்று டி.வியை ஆன் பண்ணினாள்

பீட்சா சாப்பிட்டுக்கொண்டே..டிவியை பார்த்தவன் அதிர்ந்தே போனேன்..நீயுயார்க் அருகிலுள்ள கனெக்டிகட் என்ற ஊரில் ஒரு பள்ளியில் புகுந்த ஒருத்தன் பிஞ்சு பாலர்கள் என்று கூட பாராமல், 20 குழந்தைகளை அலற அலற சுட்டுதள்ளியிருக்கிறான்..அனைவருக்கும் ஐந்து வயதிலிருந்து 10 வயதுதான் இருக்கும்..எவ்வளவு கனவுகள்..எவ்வளவு ஆசைகள்..என்ன என்ன மனக்கோட்டைகள்..அனைத்தும் மண்ணோடு மண்ணாக..பெற்றவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்..பள்ளிவிட்டு வரும் குழந்தைகளை அணைத்து முத்தம் கொடுத்த பெற்றோர்களுக்கு, தன் கண் முன்னாலேயே, குழந்தைகள் சடலமாய்..அதுவும் துப்பாக்கி துளைத்த சடலமாய்..என்னுடைய இருதயம் ஒரு செகண்ட் நின்றுவிட்டது..பிட்சா அப்படியே கையிலிருந்து கீழே விழுந்தது..என்னை அறியாமல்

டாடி……” வீட்டின் மூலையில் எங்கேயோ விளையாடி கொண்டிருந்த என்னுடைய 2 வயது மகன்..ஓடிவந்தான்..

டாடிடிவிங்க்க்க்கிள்டிவிங்க்க்க்க்கிள்…”

என்றான்அப்படியே அவனை கட்டிகொண்டேன்..என்னால் அழகூட முடியவில்லை….அவனுடைய கன்னத்திலும், கையிலும் முத்தமிட்டவன்..திரும்பி முதல்முறையாக, மனைவியைப் பார்த்து கேட்டேன்

பேசாம, ஊருக்கு போயிடலாமா…”

4 comments:

Unknown said...

ராசா நகைசுவையா ஆரம்பிச்சு கலங்க வட்சுடிங்க என்ன பன்றது அங்க வுள்ளவங்க கிருகங்களா இருகாங்க துப்பாக்கி கமர்கட்டு விக்கிற மாறி விக்கிரங்க என்ன செய்ய?

Santhose said...

What do you say when you see lot of bomb blast in India?

This happened to every where in the world.

மாதேவி said...

நிகழ்வுகளைப் பார்த்து வருத்தப்பட வேண்டியதுதான்.

Savitha said...

“பேசாம, ஊருக்கு போயிடலாமா…”

Very good decision.

India is morally far better than anything else.

Post a Comment