Monday, 7 January 2013

உலக அழிவு ஆரம்பம்



கல்லூரி முடித்து மும்முரமாக வேலை தேடி கொண்டு இருந்த நேரம். என் நாடி நரெம்பெல்லாம்வேலை வேண்டும்என்ற வெறியே மேலோங்கி இருந்தது..என் கால்படாத கம்பெனிகளே இல்லை எனலாம்..

அப்படி சென்ற ஒரு கம்பெனியில் மனிதவளத்துறை சம்பந்தமான இன்ட்ரிவியூற்கு செல்ல நேர்ந்தது..உங்கள் மனதை சோதிக்கும் பல கேள்விகள் கேட்கப்படும்.அப்படிபட்ட ஒரு கேள்வி

இப்ப நீங்க எங்க கம்பெனியில் ஜாய்ன் பண்ணிவிட்டீர்கள்..பிசினஸ் சம்பந்தமாக 9 மணிக்கு ஒரு மீட்டிங்க்..அதை மிஸ் பண்ணிவிட்டால் பல கோடி ரூபாய் நஷ்டம்..அவசரமாக காரில் வருகிறீர்கள்..வழியில் ஒருவர் அடிபட்டு கிடக்கிறார்..நீங்கள் என்ன செய்வீர்கள்..பலகோடி ரூபாய் கம்பெனிக்கு நஷ்டமானாலும் பரவாயில்லைன்னு, அவருக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா..இல்லை..உங்கள் காரை எடுத்துக்கொண்டு ஆபிசுக்கு வந்து கம்பெனிக்கு உதவுவீர்களா..”

நான் உடனே

ஹெல்ப் பண்ணுவேன் சார்..உயிர்தானே முக்கியம்..”

என்றேன்..அவசரமாக..உடனே இண்டர்வியூ பண்ணுபவர் சடக்கென்று..

அப்ப, மாசாமாசம் சம்பளம் தர்ற கம்பெனி முக்கியமில்லை..?”

என்றார்..சருக்கென்றிருந்தது

என்ன சார்..இப்படி சொல்லுட்டீங்க…” என்றேன் கொஞ்சம் சங்கடமாய்..

சிரித்தார்..

ஹே..மேன்.. ஆம் ஜஸ்ட் டெஸ்டிங்க் யூ..” என்றார்..

பின்னர் எனக்கு அந்த வேலை கிடைக்காவிட்டாலும் அந்த கேள்வி சற்று என்னை யோசிக்கவைத்தது

சரி..கம்பெனியில் கூட ஜாய்ன் பண்ணவேண்டாம்..அன்று காலை வாக்கிங்க் செல்லும்போது, இப்படி ஒருவர் அடிபட்டு கிடந்தால் என்ன செய்வேண்டும்..அம்மாவிடம் கேட்டேன்

நமக்கு எதுக்குப்பா, போலீஸ் கேஸ் எல்லாம்..ஏதாவது பிரச்சனைனா, போலீஸ், கோர்ட்டு, கேஸ் எல்லாம் அலையணும்..அதெல்லாம் தேவையா..” என்றார்கள் பயத்துடன்..

உம் பையன் அப்படி அடிபட்டு கிடந்தாலும் அப்படிதானாம்மா..”

என்றேன்..

ஐய்யோ..ராசா.அப்படியெல்லாம் ஆகாதுப்பா..” என்றார்கள்..

அம்மாவை சொல்லியும் குற்றமில்லைநம் தேசத்தில் அப்படியே பழகிவிட்டோம்….நமக்கு என்ன பிரச்சனை வராதவரைக்கும், யாருக்கு என்ன நடந்தால் என்ன, எனக்கென்ன கேடு

ஆனால் அதுவே நமக்கு நடந்தால்..”ஐய்யோ.உங்களுக்கு மனசாட்சி இல்லையா..என்ன தேசம் இது..” என்ற கூப்பாடு

கற்பழிக்கப்பட்ட பெண்ணோடு தூக்கி எறியப்பட்ட ஆண்நண்பரின் பேட்டியை படித்தபின்பு..”சேநமெக்கெல்லாம், இதயம் என்பதே மறத்துவிட்டதாஎன எண்ணத் தோன்றியது..

அரை மணிநேரம் ரோட்டில் கிடந்தார்கள்..எந்த டிவிசனில் வருகிறது என்று டிஸ்கஸ் பண்ணினார்களாம்..அப்படி டிஸ்கஸசனில் ஈடுபட்ட ஒருத்தரின், மகனோ, மகளோ, அப்படி கிடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்..”ஐயோ..பாவம்டாஎன்று உச்சுகொட்டி அந்தப் பக்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மக்களின் குடும்பத்திலிருந்து ஒருவர் அப்படி கிடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்

பணம் முக்கியம்தான்..ஆனால் வரவர நம்நாட்டில் பணம்மட்டுமே முக்கியமாக இருக்கிறதோ என்ற பயம் வருகிறது..அதை சம்பாதிப்பதற்காகவே, மனித மனங்களை கல்லாக்கி கொள்கிறோம்..இருக்கும் கொஞ்சநஞ்ச மனிதநேயத்தை பணத்துக்கு அடகுவைத்துவிட்டோம்..

அந்த இதயம் கல்லானதால் தானே, கதற கதற அந்த பெண்ணை கற்பழிக்கமுடிந்தது.அந்த இதயம் கல்லானதால்தானே., அந்தபெண்ணும் நண்பரும் ரோட்டில் கிடந்தபோது, “எந்த டிவிசன்என்று டிஸ்கஸ் பண்ண முடிகிறது..அந்த இதயம் கல்லானதால்தானே “10 மணிக்கு மேலே அந்த பெண்ணுக்கு எதுக்கு வெளியேஎன்று கூச்சமில்லாமல் பேசமுடிகிறது..அந்த இதயம் கல்லானதால்தானே 4 வது படிக்கும் சிறுமியை கற்பழிக்க முடிகிறது..

எனக்கென்னமோ உலகம் அழியும் என்ற விதி சற்று தள்ளி போடப்பட்டிருக்கிறதோ என்று தோணுகிறதுஇயற்கை சீற்றங்களாலோ, அல்லது, சூரியனாலோ இந்த உலகம் அழியப்போவது இல்லை..மனிதர்களால்தான் இந்த உலகம் அழியப்போகிறது..அதுவும் கல்நெஞ்சக்காரர்கள் நிறைந்த மனிதர்களால்..பணத்திற்காக, எல்லாரும் அடுத்தவர்களை அடித்து கொல்லப் போகிறோம்..அப்படி ஒவ்வொருவராய் அடித்து கொன்றபின்பு, கடைசியாக இருக்கும் மனிதனுக்கு கோடி, கோடியாய் பணம் இருக்கும்ஆனால், அதைவைத்து கொண்டு ஒன்றும் செய்யமுடியாமல், அதை வெறித்து பார்த்துகொண்டே செத்துவிடுவான்….

என்னது மனிதநேயமா..அதற்குதான் முதல் கல்லறையே..அதை எப்பவோ கட்டியாகிவிட்டது..இனிமேல், அடித்துகொள்ளும் படலம்தான்..ஆரம்பமாகட்டும்

4 comments:

PUTHIYATHENRAL said...

sariyaa sonneengal....

அமுதா கிருஷ்ணா said...

புலம்புவதை தவிர என்ன செய்வது?

Unknown said...

சரியாக சொன்னிங்க

Robert said...

உண்மைதான். நாம் தான் மனிதநேயத்தை மறந்து மாமாங்கமாகி விட்டதே. பிறகு இதை பற்றி சிந்திக்கவா நமக்கு நேரமிருக்கிறது. நம் வீடு தீப்பிடிக்காதவரை சரிதான் என்ற மனநிலையில் இருக்கிறோம். தனி மனித மனமாற்றம் மட்டுமே இதற்கு ஒரு நல்ல தீர்வாக அமையும். அதுவரை ஆதங்கத்தோடு.....

Post a Comment