Tuesday, 13 November 2012

துப்பாக்கி – விமர்சனம்



இந்த தீபாவளி, விஜய்யின் துப்பாக்கி படத்தோடு துவங்கியது. .ஆர்.முருகதாஸ், விஜய் காம்பினேஷன் என்றபோது, சற்றுபயம் இருந்தது நிஜம். ஏனென்றால், “ஏழாம் அறிவுபடத்தில் சூர்யாவின் ஸ்டில் ஒன்றை பார்த்தபோது, முனியாண்டி விலாஸில், உரித்த சிக்கன் ஒன்று தொங்கி கொண்டிருந்ததும், சுருதிஹாசனின்தமிழன்னா, அவ்ளோ இலக்கார்ராமா..” என்று கொலைவெறி தமிழும் சேர்ந்து அடிவயிறை கலக்கியிருந்தது. இதில்வேறு, விஜய் டிரெய்லரில்.ஆம் வெயிட்டிங்க்என்று சொன்னபோது, ஒருவேளை தியேட்டருல கதவை பூட்டி வைச்சுருவாய்ங்களோ என்று திக் வேறு.

சற்று மிரட்சியுடன் படம் பார்க்க ஆரம்பித்தேன். விஜய்யின் வழக்கமான இண்டொரடக்சன் சாங்க்(இத விடமாட்டீங்களாய்யா..) ஒன்றுடன் ஆரம்பித்தபோதுசரித்தான்இனிமேல் உசுருக்கு உத்தரவாதம் இல்லை…” என்று நினைத்து எழமுயற்சித்தபோது, “யோவ் கஸ்மாலம், உக்காருய்யாஎன்று சத்தம் வராத குறையாக, பின்சீட்டுக்காரர் முறைக்க, சரி..நமக்கு விதிச்சது என்றுதான் பார்க்க ஆரம்பித்தேன்

ஆனால், இன்ப அதிர்ச்சியாக படம் அமைந்தது எனக்கு பெரும் வியப்பு. கதை இதுதான்(படம் பார்க்க முடியாதவர்கள் அண்ணன் உண்மைத்தமிழன் விமர்சனம் படிக்கவும்). மிலிட்டரி கேம்பில் இருந்து மும்பை வரும் விஜய் கையில் எதேச்சையாக ஒரு தீவிரவாதி மாட்ட, அவனை வைத்து, மும்பையில் பல இடங்களில் குண்டுவைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவருகிறது. இண்டெலிஜன்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் விஜய், எப்படி அதை கண்டுபிடித்து, எதிரிகளையும், அதன் தலைவனையும் அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை..

படத்தின் கதை விஜய்காந்த் படம் போல் இருந்தாலும், எடுத்த விதத்தில் முருகதாஸ் வித்தியாசப்படுத்தியுள்ளார். படத்தில் நூல்பிடித்தாற்போல் செல்லும், திரில்லிங்கை, கடைசி வரைக்கும் மெயிண்டெயின் பண்ணியிருப்பது சிறப்பு

குறிப்பாக, தீவிரவாதிகள் 12 பேரை, ஒரே நேரத்தில் விஜய் போட்டுத்தள்ளும் காட்சியும், கடத்தப்பட்ட தங்கையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் காட்சியிலும், இயக்குநர் அண்ட் டீமின் உழைப்பு பளிச்.. கிளைமாக்ஸ் காட்சி வழக்கம்போல் கிளிஷேவாக இருந்தாலும், விஜய் படத்தில் இதைத்தானே எதிர்பார்க்க முடியும் என்பதால், மனம் சமாதானம் அடைகிறது.

வழக்கம்போல் பஞ்ச் டயலாக் பேசாமல், அண்டர்பிளே பண்ணி நடித்திருக்கும் விஜய், இந்தப் ப்டத்திற்கு பலம். சில ஸ்டைலிஷான ஷாட்டுக்கள், மூவ்மெண்டுகள், விஜய்க்கு, இன்னொரு பரிமாணத்தை கொடுக்கிறது. இண்டெர்வெல்லில் தலையை சற்று சாய்த்துக்கொண்டு ஆம் வெயிட்டிங்க்என்று சொல்லும்போது, “மாஸ்என்றே சொல்லத் தோன்றுகிறது. இப்படியான படங்களில் விஜய் நடித்தாலே போதும்..

வழக்கம்போல கவர்ச்சிக்கு காஜல், சிரிப்புக்கு ஜெயராம், சத்யன் என்று ஒன்றும் பெரிதாய் சொல்லுவதற்கில்லை. அவர், அவர்கள் கொடுத்த வேலையை செய்கிறார்கள். கேமிராமேன் சந்தோஷ்சிவனின், கேமிரா ஆக்சன் பேசியிருக்கிறது. ஆனால், இது சந்தோஷ்சிவனின் ஷாட் என்று சொல்லுவதற்கு என்று எதுவும் வித்தியாசப்படுத்தி சொல்ல முடியவில்லைஏனென்றால், தமிழ் திரையுலகம் முழுவதும் சந்தோஷ் சிவன்களால் நிரம்பிவிட்டதால்..

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கும் வேளையில், காட்சியமைத்தலை நன்றாக செய்திருக்கிறார்கள். ஆனால் என்னை கேட்டால், படத்தில் லெட்டவுன் பாடல்கள் என்று சொல்லுவேன்..அதாவது பாடல்கள் குறை என்றல்ல..ஆனால் இப்படி ஒரு ரேசியான படத்தில், ஏன் இவ்வளவு பாடல்கள்.. பாடல்களையும், காதல் காட்சிகளையும், கிளிஷக்களையும் குறைத்து, விஜய்யின் ஆக்சன் காட்சிகளையும், மெயின் ப்ளாட்டையும், இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால், விஜய்க்கு இந்த படம்காக்க காக்கபோன்று அமைந்திருக்கும்..

ஆனாலும், படம் துவக்கத்திலிருந்து, இறுதிவரைக்கும், செமஸ்பீடாக கொண்டு சென்று, ஸ்டைலிஷான விஜய்யை காட்டியிருப்பதால், படம்

விஜய்ய்யின்தீபாவளி மாஸ்கண்டிப்பாக ஹிட் அடிக்க வாய்ப்புகள் அதிகம்

15 comments:

பாவக்காய் said...

nandri thalai.. US-il parthengala or maduai-aa?

கவிதை வானம் said...

நல்ல நகைச்சுவையான எழுத்து நடை....அப்ப அவிங்கள அடுத்த முதலமச்சர்னு சொல்லிடலாமா...?
சும்மா தமாஸ்க்கு...

Unknown said...

துப்பாக்கி, விறு விறு துப்பாக்கி

Unknown said...

துப்பாக்கி மொக்கை படம்........

Free Web Hosting India said...

உங்க விமர்சனம் படிச்சதிலிருந்து, கண்டிப்பா துப்பாக்கி படத்தை பார்துடனும்கிற எண்ணம் உருவாகிவிட்டது. மிக்க நன்றி...!

VIGNESH said...

விஜய்ய்யின் – தீபாவளி மாஸ்

VIGNESH said...

விஜய்ய்யின் – தீபாவளி மாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

செம ஹிட்...

Madhavan Srinivasagopalan said...

// துப்பாக்கி மொக்கை படம்........//

Why to be specific.. say it in general as "Viyay படம் = மொக்கை படம்"

Anonymous said...

susi ni dhan mokka.....

jscjohny said...

pathivukku nanri nanbaa!!!!!!

Anonymous said...

படம் சுமார் தான்... ஏ.ஆர் .முருகதாஸ் ரமணா, கஜினி மாதிரி இது ஒரு தெளிவான திரைக்கதை இல்லை.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. விஜய்யின் நடிப்பும் தோற்றமும் நன்றாக இருக்கிறது...
மற்றபடி இது ஒரு சுமாரான படம் தான்....
இது தான் உண்மை.

8h8dnwrs4t said...


நண்பனுக்கு அடுத்து துப்பாக்கி இன்னும் ஒரு flop படம் தான் விஜய்க்கு. மாயாஜால் திரையரங்கில் காட்சிகளை முதல் வாரத்திலேயே குறைத்துவிட்டார்கள். இந்திய முஸ்லிம்களை தேச துரோகிகளாய் சித்தரித்து கெட்ட பெயர் சம்பாதித்தது தான் மிச்சம்.

படம் ஒரு மரண மொக்கை. வில்லன் யார் என்று 20 நிமிடத்திலேயே சொல்லிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்துக்கு துரத்தும் படலம் தான் கதை. இதை விட பல மடங்கு சிறப்பாக வால்டர் வெற்றிவேல், புலன் விசாரணை, குருதிப்புனல் திரைக்கதை அமைந்திருக்கும். முருகதாசுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது.

Anonymous said...

//Saikrishna said...


நண்பனுக்கு அடுத்து துப்பாக்கி இன்னும் ஒரு flop படம் தான் விஜய்க்கு. மாயாஜால் திரையரங்கில் காட்சிகளை முதல் வாரத்திலேயே குறைத்துவிட்டார்கள். இந்திய முஸ்லிம்களை தேச துரோகிகளாய் சித்தரித்து கெட்ட பெயர் சம்பாதித்தது தான் மிச்சம்.

படம் ஒரு மரண மொக்கை. வில்லன் யார் என்று 20 நிமிடத்திலேயே சொல்லிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்துக்கு துரத்தும் படலம் தான் கதை. இதை விட பல மடங்கு சிறப்பாக வால்டர் வெற்றிவேல், புலன் விசாரணை, குருதிப்புனல் திரைக்கதை அமைந்திருக்கும். முருகதாசுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது.
//

saikrishna ,
திட்டுறதுகே ஒரு id ய create பண்ணின மாதிரி கீது ....


SAMPATH said...

VIJAY MASS HERO.............. YEN DA PORUKI NAYA INTHA OPENING FILDAP...... PADAM THAN SUPER HIT.................... VIJAY MASS HERO..............

Post a Comment