Tuesday, 16 October 2012

நமீதாவின் திகைப்பூட்டும் கவர்ச்சி



இப்படியெல்லாம் தலைப்பு போடுபவனல்ல நான்..ஆனால், இந்தப் பதிவை எல்லோரையும் படிக்கவைக்க வேறு வழியில்லை. ஏனென்றால், “டெங்குவை தவிர்ப்பது எப்படி”, அல்லதுடெங்கு பரவ யார் காரணம்என்று தலைப்பு போட்டால் யாரும் ஓபன் பண்ணி கூட பார்ப்பதில்லை. ஆனால் அதேநமீதாவின் கவர்ச்சிப்படம்என்று தலைப்பிட்டால், டெங்கு காய்ச்சல் வந்து, கையை தூக்கமுடியாமல் இருந்தால் கூட, காலால், இந்த லிங்கை கிளிக் பண்ணி பார்ப்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள். நானும் அந்த லிஸ்டில் இருப்பேன் என்று சொல்ல தயக்கமும் இல்லை. தப்பு என்று சொல்லவில்லை..ஆனால், அதே நேரத்தில் விழிப்புணர்வு பதிவுகளையும் படிப்பதில் அக்கறை கொண்டால், மிகுந்த மகிழ்ச்சி..

நீங்கள் என்னை திட்டுவதென்றால், இப்போதே திட்டிவிடலாம். ஆனால் இந்தப் பதிவு, ஒரு இரண்டு உயிரை காப்பாற்றுமென்றால், அந்த திட்டுக்களை வாங்க நான் தயார்.

போனமுறை ஊருக்கு வந்திருந்தபோது, டெங்கு காய்ச்சல், இன்று பெண் சாப்ட்வேர் இஞ்சினியர்கள் ஆபிசுக்கு வருவது போல, தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்ததுஅதுவும் திருநெல்வேலி பகுதிகளில் ஆடிய ஆட்டத்தில் சாவு எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருந்தது. என்னுடைய மாமனார் வீட்டிற்கு செல்வதற்காக, திருநெல்வேலி செல்லவேண்டிய நிர்பந்தம்.

எனக்கு என்ன கவலை என்றால், எனக்கு டெங்கு வந்தால் கூட, சமாளித்துவிடுவேன்…(அதாவது நாங்கெல்லாம் விசயகாந்து மாதிரி..புல்லட்டு தன்னை நோக்கி வந்தாக்கூட திருப்பி விட்டுருவோம். அதனால டெங்கு காய்ச்சல் வந்தா கூடஇவண்ட ஏண்டா வந்தோம்னுயோசிக்கும். ஆனால் ஒன்னும் தெரியாத பச்சப்புள்ளைக்கு வந்தா

எனக்கு என் மகனை திருநெல்வேலிக்கு கூட்டிகொண்டு வர பயமாக இருந்தது. அதனாலேயேமுடியாதுஎன்று சொல்லிவிட்டேன். ஆனால் முதல்முறையாக என் பையனைப் பார்க்க சொந்தக்காரர்கள் மிகவும் ஆசைப்படுவதால், ஒருவித பயத்துடனேயே வந்தேன்

ஆனால் அங்கு இருந்த ஒவ்வொரு நாளும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்த மாதிரி இருந்தது. அதற்கேற்றார்போல, பக்கத்து ஊரில், டெங்குவினால் இருவர் இறந்துபோக, எப்படி இருக்கும் எனக்கு..

எரியும் நெருப்பில் என்னை ஊற்றினார் போல, என் மகனுக்கு உடம்பு முழுவதும் தடிதடிப்பாக ஆனது. லைட்டாக வயிற்றுபோக்கும், காய்ச்சலும் வர, மனதால் செத்தே விட்டேன்..என் பையனை தூக்கி கொண்டு ஓடினேன்..எவ்வளவு வரம் வாங்கி, இந்தப் பையனை பெற்றிருகிறோம்..என்னால், ஒரு நிமிடம் கூட என் பையன் இல்லாமல் இருக்க முடியாது..

டாக்டரிடம் போய் கெஞ்சினேன்….சில டெஸ்டுகள் எடுக்கவேண்டும் என்று என்னை காத்திருக்க சொன்னார்..நான் காத்திருந்த அனைத்து நிமிடங்களும் நரகவேதனை..கடைசியாக வந்து என்னிடம் அவர் சொல்லிய வார்த்தைகள் தான் என் வாழ்க்கையை எனக்கு திருப்பி கொடுத்தது..

“ஒன்னும் இல்ல சார்..சாதாரண கொசுக்கடிதான்..அலர்ஜி மாதிரிதான்..”

யப்பா..எனக்கே இப்படி இருந்திருந்தால், டெங்கு நோயினால் தங்கள் பிள்ளைகளை இழந்த மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்..எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள்..என்னவெல்லாம் சீராட்டி இருப்ப்பார்கள்..அனைத்தும் ஒரு நொடியில் போயிருக்கும்..ப்ச்…

மிகவும் மனக்கலக்கத்தோடு, மதுரை சென்றேன்..அண்ணன் வீட்டுக்கு..அங்கு நான் பார்த்த காட்சிதான், எனக்கு இந்த பதிவு எழுத தூண்டியது..

வீடு நன்றாகத்தான் கட்டியிருந்தார்..ஆனால் வீட்டிற்கு முன்பாக ஒரு பெரிய காலி இடம்..அந்த காலி இடம் முழுவதும் சாக்கடைத்தண்னி..அது முழுக்க கொசுக்கள் ஆய்ந்து கொண்டிருந்தது..அந்தப் பக்கம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி..கார்ப்பரசேன் குப்பைத் தொட்டி..முழுக்க குப்பை..வழிந்து கொண்டிருக்க, தெரு முழுக்க பாராபட்சமில்லாமல் இறைந்து கொண்டிருந்தது..அதுமுழுக்க கொசுக்களும், ஈக்களும்..இனி, என் அண்ணனுக்கும் எனக்கு நடந்த உரையாடல்..

“ஏண்ணே..என்னண்ணே, இப்படி கிடக்கு..”

“என்ன..எப்படி..”

“இல்ல..இப்படி சாக்கடை தேங்கி நிக்குது..முழுக்க கொசுவா ஆயுது..அதுமில்லாம, குப்பைய வந்து அள்ள மாட்டாய்ங்களா.தெரு முழுக்க சிந்திருக்குது..அதுலயும் கொசு..பின்ன இப்படி இருந்த டெங்குவராம என்ன செய்யும்..”

“அடங்கொன்னியா..அமெரிக்காவுல இருந்து வந்திருக்கீங்களாமா..டேய்..இந்த தெரு என்னைக்குடா நல்லா இருந்துச்சு..எப்பதுமே இப்படித்தானடா இருக்கு..”

“அடக்கொடுமையே..நான் வேணா அலும்பு பண்ணுறதா இருக்கட்டும்..உங்க தெருவுக்குன்னு ஒரு கவுன்சிலர் இருப்பாருல்ல..அவர் என்ன பண்ணுறாரு..புகார் கொடுக்க வேண்டியதுதானே..”

“அவர, ஓட்டு போடுறப்ப பார்த்தது….”

“யாரு..இந்த தெருவை சிங்கப்பூரா மாத்துவேன்னு சொல்லிட்டு போனரே..அவரா..”

“ஆமாண்டா..தெரு சிங்கப்பூர மாறுதோ இல்லையோ..அவரு ரெண்டு தடவை சிங்கப்பூர் போயிட்டு வந்துட்டாரு..எல்லாம் கமிஷன் காசுதான்…”

“சரி..நீங்கெல்லாம் ஒன்னு பண்ணலாம்ல..”

“என்ன..”

“இந்த தெருவுல உள்ளவங்கல்லாம், ஆளுக்கு ஒரு ஐநூறு ரூபா போட்டு, ஒரு பெரிய குப்பைத்தொட்டி வாங்கி வச்சிட்டு, எல்லாரும் அதிலேயே போடலாம்ல..யாராவது ஒருத்தர், மாநகராட்சிகிட்ட பேசி, இந்த தெருவை க்ளீன் பண்ணச்சொல்லலாம்ல..”

“ஓ..அமெரிக்க ரிட்டர்னாம்மாம்…இதெல்லாம் நடக்குற காரியமா..தம்பி..40 வருசமே இப்படியே வாழ்ந்துட்டோம்..அப்படியே இருப்போமே..என்ன கேடு கெட்டது..”

சொல்லுங்கள்..இனிமேல் என்ன நான் பேசமுடியும்..ஒன்னு சொல்லுறேண்ணே..டெங்கு காய்ச்சலை கவர்மெண்டு ஒழிக்கலை, ஒழிக்கலைன்னு கோஷம் போடுறதை நான் ஒத்துக்கவே மாட்டேன்..தப்பு முழுக்க நம்ம பேருல வைச்சுக்கிட்டு, கவர்மெணடையே குற்றம் சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி..

தெரு முழுக்க, சாக்கடையை தேங்கவிடுறோம்..சாக்கடை மேலேயே குப்பையக் கொட்டுறோம்..தெரு முழுக்க குப்பை நாறி கிடந்தாலும், நாய், எலி செத்து நாத்தம் புடிச்சு கிடந்தாலும், மூக்கைப் பொத்திக்கொண்டு ஓடுகிறோம்..என்னைக்காவது, இதையெல்லாம் அப்புறப்படுத்த, அல்லது, மீண்டும் குப்பையாக்காமல் இருக்க நம்மாளான ஏதாவது செஞ்சுருக்கமோ..இல்லையே..பின்ன டெங்கு என்ன, பன்னி காய்ச்சல், மலேரியா, வாந்திபேதி..எல்லாம், அட்டெண்டன்ஸ் போட்டுக்கிட்டு வராம என்ன பண்ணும்..

எவ்வளவோ வெட்டியானதெல்லாம் படிக்கிறோம்….பதிவுலகத்துல மணிக்கணக்கா சண்டை போடுறோம்..அப்படியே தயவுசெய்து, கீழே தட்ஸ்தமிழில் உள்ள, இந்த லிங்கை கிளிக் பண்ணி, பத்து நிமிஷம் ஒதுக்கி படிச்சிருங்கண்ணே..டெங்குவின் அறிகுறி என்ன.டெங்கு வந்தால் என்ன செய்யவேண்டும்னு அருமையா சொல்லியிருக்காய்ங்கண்ணே..


இதப்படிச்சு, பத்துபேரு கூட வேணாம்னே..ஒரு உசுரு காப்பற்றப்பட்டால் போதும்ணே…நான், இந்தப்பதிவு எழுதனுக்கு ஒரு அர்த்தம் கிடைச்சுரும்ணே..அப்படியே அந்த லிங்கில் உள்ளத நாலு பேருக்கு பேசுறப்ப சொன்னிங்கன்னா, அவிங்களுக்கு, ஒரு விழிப்புணர்ச்சி வரும்ணே..செய்விங்கதானே..

இனிமேல் ஒரு உசுரு கூட டெங்குனால போகக்கூடாதுண்ணே…..

(அம்புட்டையும் படிச்சுட்டு..”ஏண்ணே.நமீதா கவர்ச்சிப் படம் எங்கண்ணே..போட மறந்துட்டீங்க..அப்படின்னு எந்த பயபுள்ளையாவது கேட்டீங்கன்னா, அதுக்கும் பதிலு இருக்கு..மேலே இருக்குற கொசு பேரு நமீதாவாம்..கவர்ச்சியா இல்ல..ஹி..ஹி..)

3 comments:

அமுதா கிருஷ்ணா said...

நமிதா கொசு இந்த கலர்ல இருக்கு.சேப்பா இல்லை.

எங்க வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி குட்டியாய் இருக்கும் போது கொண்டு வந்து யாரோ விட்டுட்டு போன 15 பன்றிகள் இப்போ நன்கு கொழு கொழுவென்று வளர்ந்து மேய்கின்றன. யாருக்கு கம்ப்ளெய்ண்ட் செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்.

Unknown said...

அண்ணே இப்டி ஏமாதிடின்களே

பராசக்தி said...

நமீதாவிற்கு அழகி பட்டம் ஜப்பான் நாடு கொடுக்கப்போவதாக முன் கூட்டியே தெரிந்து விட்டதா? "நமீதாவின் பெயரில் தலைப்பு"

Post a Comment