Friday 31 December, 2010

2010 – பதிவுலக விருதுகளும் பதிவுலகத்தின் பராசாக்தியும்

பதிவுலகம்..விசித்திரம் நிறைந்த பல பதிவர்களை சந்தித்திருக்கிறது. மொக்கையான பல பதிவுகளை கண்டிருக்கிறது..ஆனால் நான் எழுதப்போகும் பதிவு ஒன்றும் விசித்திரமானது அல்ல..அல்லது இந்தப் பதிவை எழுதப்போகும் நானும் ஒன்றும் மொக்கைராசு அல்ல. பதிவுலகத்திலே சர்வசாதாரணமாக பிளேடு போடும் பதிவர்களிலே நானும் ஒருவன்.

நானே கேள்வி பதில் என்று பதிவு ஆரம்பித்து இன்னொரு ஐ.டி யில் இருந்து “காத்தால எத்தனை மணிக்கு பல்லுவிளக்குறீங்கோ..” என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகேட்டு மறந்தார்போல “அவிங்க ராசா” என்று போட்டுள்ளேன்.

“இன்னைக்கு உங்க பதிவு படிச்சு மெய்மறந்துவிட்டேன், உங்கள் பதிவால்தான் நான் மூச்சுவிடுறேன்.. உங்கள் பதிவை படித்தவுடன் தான் இன்னைக்கு காலையில் வெளிக்கி போகவே சென்றேன்” என்று நானே வாசகர்கடிதம் மாதிரி எழுதி அதை என் பதிவிலேயே வாசகர் கடிதம் என்ற பெயரில் போட்டேன்.

படத்தை பார்க்காமலேயே இந்த படம் தமிழ்சினிமாவின் ஒரு மயில்கல்லு, குருவிகல்லு என்று எழுதி “மீ த பர்ஸ்ட், ஊசிப்போன வடை எனக்குதான்” என்று நானே எனக்கு கமெண்ட் போட்டிருக்கிறேன்

குற்றம் சாட்டப்படிருக்கிறேன் இப்படியெல்லாம். ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை, நிச்சயமாக இல்லை. கேள்வி பதில் என்று எனக்கு நானே பதிவு எழுதிக்கொண்டேன். ஏன், கேள்வி பதில் என்று பதிவு ஆரம்பித்தால் மரியாதைக்காகவது ஒரு பயலாவது கேள்வி கேட்கவேண்டும். ஆனால் வரும் ஒரே கேள்வி “எப்ப கரண்ட் பில்லு கட்டுவீங்க..” என்று.

வாசகர் கடிதம் என்று என்னை நானே பாராட்டி கடிதம் எழுதிக்கொண்டேன். வாசகர் கடிதமே யாரும் போடவில்லை என்பதற்காகவா, இல்லை. எழுதிய ஒரு வாசகரும் “எப்ப ராசா, எழுதுவதை நிறுத்துவீங்க..அன்னிக்குதான் எங்களுக்கு தீபாவளி” என்று எழுதியதற்காக.

படமே பார்க்காமல் விமர்சனம் எழுதினேன்..ஏன், தியேட்டரில் மூட்டைப்பூச்சி கடி என்பதற்காகவா..இல்லை, ஒரு பயலும் ஓசியில படத்துக்கு கூட்டிக்கிட்டு போகமாட்டுறாயிங்க என்பதற்காக..

உனக்கேன் இந்த அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். எனது சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது. என்னை குற்றவாளி என்கிறீர்களே. நான் குறுக்கால வந்த வழியைப் பார்த்தா ரொம்ப கலீஜாக இருக்கும்

கேளுங்கள் என் ஸ்டோரியை. ஓடுவதற்கு முன்பு என்கதையை கேட்டுவிட்டு ஓடுங்கள். பாசக்கார பயலுக வாழும் இடமான மதுரையில் பிறந்தவன் நான். கிழிஞ்சு போன டைரியில் எழுதிக்கொண்டிருந்த நான் ஓசியில் கிடைக்கிறது என்பதற்காக ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன். பதிவுலகம் என்னை “போடா மொக்கை” என்றது. என் பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப்போட்ட ஒரே பயபுள்ளையும் “சாரி..நண்பா..கை தவறி ஓட்டுபட்டையில் பட்டுடுச்சு..” என்றான். மீனம்பாக்கத்துக்கு வந்தால் செருப்பால அடிப்போம் என்றார்கள். என் பெயரோ அவிங்க ராசா..செம லொட்டையான பெயர். நான் நினைத்திருந்தால் ஒரு குழு ஆரம்பித்து மாறி மாறி ஓட்டுபோட்டுக்கொண்டு சூடான இடுகைகளில் வந்திருக்கலாம். அல்லது சாரு வாழ்க என்று ஜால்ரா இடுகை எழுதி அவருடைய பதிவுகளில் என் பதிவை வரச்செய்து ஹிட்ஸ் தேத்தியிருக்கலாம். அல்லது ஹிட் கவுண்டரில் 99,99,999 என்று செட்செய்து, ஒரு ஹிட் வந்தவுடனே “ஒரு கோடி ஹிட்ஸ் கொடுத்த வாசகர்களுக்கு நன்றி..உங்களால்தான் இது முடிந்தது” என்று சொல்லி செண்டிமெண்ட் கண்ணீர் விட்டிருக்கலாம்.

ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த பதிவுலகம். தலைவனைப் பற்றி எழுதியதற்காக “*****” போட்டு கெட்ட வார்த்தை கமெண்ட் போட்டார்கள். எழுதினேன். பதிவை போடுவதற்கு முன்பே மீ த பர்ஸ்ட் கமெண்ட் போட்டார்கள். எழுதினேன். மைனஸ் ஓட்டுக்களாக தபால்தலையின் மேல் குத்துவது போல் குத்தினார்கள். எழுதினேன், எழுதினேன். லேப்டாப் கீ தேயும் வரை எழுதினேன். “தயவு செய்து நிறுத்திருடா” என்று லேப்டாப் கதறும்வரை எழுதினேன்.

“காலையில உனக்கு சோறு இல்லடி” என்று மனைவி சொன்னதால் நிறுத்திவிட்டேன்.

இதற்கு மேல் எழுதினால் சாவடி அடிப்பீங்க என்று தெரியும்.போன வருடம் பதிவுலகத்தில் நான் என்று என்னையே திரும்பி பார்க்க ஆசை என்றாலும், திரும்பி பார்த்தால் சாக்கடை நாத்தம் நாறுது என்பதால் இப்போதைக்கு வுடு ஜூட்டு..

(ஆஸ்காருக்கு நிகரான அவிங்க ராசாவின் பதிவுலக விருதுகள் அடுத்த பதிவில்..எல்லோரும் வீட்டுல இருக்குற சாக்குப்பைய எடுத்து ரெடியா வைச்சுக்கங்கோ…)

14 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செம நக்கல் பாஸ் உங்களுக்கு. யார் யாரை சொன்னீங்கன்னு எனக்கு தெரியும். ஹிஹி

சேலம் தேவா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..!! கலக்கல்ண்ணே..!!

Anonymous said...

Ivan thollai thanga mudiyillaiye.....

சண்முககுமார் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

Prathap Kumar S. said...

//பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப்போட்ட ஒரே பயபுள்ளையும் “சாரி..நண்பா..கை தவறி ஓட்டுபட்டையில் பட்டுடுச்சு..//

//சாரு வாழ்க என்று ஜால்ரா இடுகை எழுதி அவருடைய பதிவுகளில் என் பதிவை வரச்செய்து ஹிட்ஸ் தேத்தியிருக்கலாம்//

//பதிவை போடுவதற்கு முன்பே மீ த பர்ஸ்ட் கமெண்ட் போட்டார்கள்//

hahaha.... இந்த லைன் படிச்சு சிரிச்சு முடில ராசாண்ணே..... கலக்கல்ஸ்.....

jothi said...

New year wishes rasa

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

a said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்............

சிரிச்சி சிரிச்சி வயிரு வலிக்கிது பாஸ்..............

Anonymous said...

Kalakiteenga Vazhakkam Pola.

Wish you Happy New Year Rasa....Bala

Philosophy Prabhakaran said...

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

ஆனந்தி.. said...

ஹ ஹ...செம லொள்ளு தான் ....:)))

குட்டிப்பையா|Kutipaiya said...

:D :D :D

Sundar said...

rombavum rasichi padichen boss! keep it up..

பாவா ஷரீப் said...

சான்சே இல்ல ராசண்ணே
செம காமெடி

Post a Comment