கடந்த மூன்று தீபாவளி கொண்டாடும்போது, பெற்றோர் அருகில் இல்லையே என்று ஏங்கியது உண்டு, இந்தமுறையும் அப்படியே. ஆனாலும், ஏதோ, அம்மா, அப்பா அருகில் இருப்பதுபோன்ற உணர்வு. இந்த முறை எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. ஒரு பயபுள்ளையாவது தமிழில் “தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று சொன்னால் மட்டும்தான் திரும்பவும் வாழ்த்து சொல்வதென்று சபதம் செய்தேன். தூங்கப்போகும் முன் “நண்பேன்டா” என்ற ரிங்க்டோன் கேட்டு அவசரமாக எடுத்தால் நம்ம கோவாலு..
“ராசா..”
“சொல்லுடா..”
“கேப்பி டீவாளி..”
“அப்படின்னா..”
“அதுதாண்டா..கேப்பி டீவாளி..”
“அடங்கொய்யாலே..அப்படின்னா என்னடா..”
“அதுதாண்டா..டீவாளி..”
“ஓ..”
“நீ திரும்பவும் சொல்லமாட்டேங்குற..”
“சொல்லுறேன்..”
“போடாங்க..முதல உனக்கு சொன்னேன் பாரு..நான் போயி நமீதா பேட்டி பார்க்கணும்..வைச்சுறேன்..”
வைத்துவிட்டான்..அட்லீஸ்ட் ஒருஆள் கேப்பி டீவாளி..அய்யோ..தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்லுவானான்னு பார்ப்போம் என்று நினைக்கும் வேளையில் வூட்டுக்காரம்ம கூப்பிட்டாள்..
“என்னங்க..உங்களுக்கு வாழ்த்து சொல்லணும்னு நினைச்சேன்..மறந்து போயிட்டேன் பாருங்க..”
ஆஹா..நம்ம வூட்டுக்காரி தமிழிலுல தான் சொல்லுவான்னு நினைச்சு, நம்பி அவளைப் பார்க்குறேன்..
“கேப்பி டீவாளிங்க..ஹி..ஹி..”
“அடியே..வால்மார்ட் போனா, பில் போடுறவியிங்க கூட தமிழுல பேசுவேயேடி..இப்ப என்ன கேப்பி டீவாளி..”
“எல்லாரும் சொல்லுறாயிங்க..அதுதான்..”
இனிமேல் என்னத்தை பேசுறதுன்னு பீல் பண்ண, வீட்டிலிருந்து போன் அழைப்பு..ஆஹா..அம்மா..கண்டிப்பாக தமிழில்தான் சொல்லுவார்கள். அம்மாவுக்கு ஆங்கிலம்வேறு தெரியாததால், எனக்கு நம்பிக்கை இருந்தது, போனே எடுத்தேன்..
“ராசா..”
“அம்மா..”
“கேப்பி டீவாளிப்பா..””
வெறுத்தே போய்விட்டேன்..
“யம்மா..நீங்களுமா..”
“ஏம்மா..எதுவும் தப்பா சொல்லிட்டேனா..”
“இல்லீம்மா..எப்போதும் தமிழிலதான பேசுவீங்க..”
“அய்யா..அப்ப..கேப்பீ டீவாளிங்குறது தமிழ் இல்லையா..எல்லாப் பேரும் சொல்லுறாயிங்களேப்பா..”
வைத்துவிட்டேன். சரி டீ.வியைத் ஆன் செய்தால், நமீதா சிரித்துக் கொண்டே சொன்னார்.,.
“மச்சான்ஸ்..ஹேப்பி டீவாளி..”
ஆப் செய்துவிட்டேன். மனைவி பொறுக்கமாட்டாமல் கேட்டே விட்டாள்..
“என்னங்க..யார் வாழ்த்து சொன்னாலும் திரும்ப, சொல்லமாட்டுங்குறீங்க..என்ன ஆச்சு..”
“ஒருத்தராவது தமிழுல சொல்லமாட்டுங்குறாயிங்களே..”
“என்னங்க….பேசுறப்பவே 10 வார்த்தையில 8 வார்த்தை இங்கிலீஸூல பேசுறீங்க..அப்ப மட்டும் என்னவாம்..கேப்பி டீவாளின்னு சொன்னா என்ன,தீபாவாளி நல்வாழ்த்துக்கள்னு சொன்னா என்ன, மனசார சந்தோசத்தோடு சொல்லுறாயிங்களா..அது போதுங்க..அத விட்டுட்ட ஏதாவது குதர்க்காம யோசிச்சீங்க, மதியானத்துக்கு சாப்பாடு கிடைக்காது பார்த்துக்குங்க..”
ஆஹா..இது ரொம்ப டேஞ்சராச்சே என்று எல்லாருக்கும் போன் பண்ணி வாழ்த்து சொல்லலாம் என்று செல்போனை எடுத்தேன்.
ஆஹா..அவசரத்துல ஒன்னு சொல்ல மறந்துட்டனே..
“கேப்பி டீவாளிண்ணே..”
14 comments:
தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி(கேப்பி டீவாளி) நல்வாழ்த்துக்கள்!
எங்கும்... கேப்பி டீவாளி.:))
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
சரி அண்ணே வெளிச்சம் வரிசை வாழ்த்துக்கள்
=)) இனிய தீபாவளி வாழ்த்துகள்
////////////////////
எஸ்.கே said...
தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி(கேப்பி டீவாளி) நல்வாழ்த்துக்கள்!
4 November 2010 8:26 PM
//////////////////////
நன்றி எஸ்.கே. இனிய திருநாள் வாழ்த்துக்கள்..
////////////////
மாதேவி said...
எங்கும்... கேப்பி டீவாளி.:))
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
4 November 2010 8:55 PM
////////////////////////
கேப்பி டீவாளி..))
///////////////////////////
nellai அண்ணாச்சி said...
சரி அண்ணே வெளிச்சம் வரிசை வாழ்த்துக்கள்
4 November 2010 10:43 PM
///////////////////////
இனிய வாழ்த்துக்கள்..
////////////////////////
வானம்பாடிகள் said...
=)) இனிய தீபாவளி வாழ்த்துகள்
4 November 2010 10:46 PM
/////////////////////////
இனிய நன்னாள் வாழ்த்துக்கள் ஐயா..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி(ஏப்பி டீவாளி) நல்வாழ்த்துக்கள்!
ஹேப்பி டீவாளி Raja
அண்ணே
தீபாவளி வாழ்த்துக்கள்
நாங்களும் இப்படி தான் பிறந்தநாள் ல இருந்து பண்டிகைகள் வரை தமிழ் தான் வாழ்த்தறது.
இது வவது பரவாயில்லை அண்ணே நம்ப சொந்த பந்தம் நட்பு எல்லாம் ஊருல இருக்குற வரைக்கும் நல்ல பேசறாங்க,இங்க வந்ததும் மருந்துக்கு கூட தமிழ் பேச மாட்டேன்ட்ரங்க.
வலுகட்டயமா அமெரிக்கான மாறிட்டு இருகாங்க,ஒரு வேலை அப்படி இருந்த கிரீன் கார்டு குடுதுடுவங்கனு நேனைபோ?நம்ப கிட்டயாவது தமிழா பேசலாம்ல?
பி.கு
அடுத்த வருஷம் பொண்ணோட கொண்டடுவீங்கள?
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
முடிந்த வரையில் அவரவர் மொழியிலே வாழ்த்துக்கள் தெரிவிப்பது எனது வழக்கம்!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
-
வெங்கடேஷ்
/////////////////////////
ஜெய்லானி said...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி(ஏப்பி டீவாளி) நல்வாழ்த்துக்கள்!
5 November 2010 3:54 AM
Mullai said...
ஹேப்பி டீவாளி Raja
5 November 2010 6:45 AM
Viji said...
அண்ணே
தீபாவளி வாழ்த்துக்கள்
நாங்களும் இப்படி தான் பிறந்தநாள் ல இருந்து பண்டிகைகள் வரை தமிழ் தான் வாழ்த்தறது.
இது வவது பரவாயில்லை அண்ணே நம்ப சொந்த பந்தம் நட்பு எல்லாம் ஊருல இருக்குற வரைக்கும் நல்ல பேசறாங்க,இங்க வந்ததும் மருந்துக்கு கூட தமிழ் பேச மாட்டேன்ட்ரங்க.
வலுகட்டயமா அமெரிக்கான மாறிட்டு இருகாங்க,ஒரு வேலை அப்படி இருந்த கிரீன் கார்டு குடுதுடுவங்கனு நேனைபோ?நம்ப கிட்டயாவது தமிழா பேசலாம்ல?
பி.கு
அடுத்த வருஷம் பொண்ணோட கொண்டடுவீங்கள?
5 November 2010 10:20 AM
பாலகுமார் said...
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
5 November 2010 9:22 PM
Anonymous said...
முடிந்த வரையில் அவரவர் மொழியிலே வாழ்த்துக்கள் தெரிவிப்பது எனது வழக்கம்!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
-
வெங்கடேஷ்
6 November 2010 12:24 AM
///////////////////////////
நன்றி ஜெய்லானி,முல்லை, விஜி(ஆண் குழந்தைங்கோ..),பாலா,வெங்கட்
Post a Comment