Monday, 4 January 2010

ஹேப்பி நீயூ இயர்

இந்த புத்தாண்டை நீங்கள் எங்கு கொண்டாடி இருப்பிர்கள்..?? மெரினா ரோட்டில்?? ஆலயத்தில்??? நட்சத்திர ஹோட்டல்களில்??? நண்பர்களுடைய வீட்டில்??? நான் எங்கு கொண்டாடினேன் தெரியுமா? மருத்துவமனையில். உறவினர் நண்பர் ஒருவருக்கு 31 ஆம் தேதி, அவசர அறுவைச் சிகிச்சை நடந்தது. புத்தாண்டு பற்றிய கனவுகளுடன் இருந்த எனக்கு இடியாய் இறங்கியது அந்த செய்தி. உறவினர்க்கு என்னை தவிர யாருமே இல்லை.

அவசரம், அவசரமாக மருத்துவமனை சென்றேன். எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் அவர், முகம் வாடிப்போய் படுத்த படுக்கையாய்..என்னைப் பார்த்தவுடன் சோகத்தை மறைக்க முயன்று சிரிக்க முயற்சித்து தோற்றுப் போனார்..

“வாடா ராசா..”
“என்னடா ஆச்சு..”
“ம்..உனக்குதான் என் உடம்பு பத்தி தெரியுமில்ல..அவ்வளவுதான்னு நினைக்கிறேன்..இதுதான் எனக்கு கடைசி புத்தாண்டோ??”
“போடா..வெளக்கெண்ணை..என்ன விட ரொம்ப நாளைக்கு இருப்படா..”

உலகத்திலேயே மிகவும் கொடுமை என்ன தெரியுமா..மருத்துவமனையில் இருப்பதுதான்.. ஜெயிலில் இருப்பதைவிட கொடுமை அது..எங்கு பார்த்தாலும் கவலை தோய்ந்த முகங்கள். அங்கெங்கு கேட்கும் விசும்பல் சத்தம், நாசியைத் துளைத்து மூளை வரை செல்லும் மருந்து நாற்றம், எந்த கேள்வி கேட்டாலும் “டாக்டரைக் கேளுங்க” என்று சொல்லும் நர்ஸ்கள். “டிஸ்ஜார்ஜ் ஆகிப் போறப்ப கவனிங்க சார்..” என்று அட்வான்ஸ் புக்கிங் பண்ணும் சுத்தம் செய்யும் தொழிலாளி, மருத்துவமனைக்கு சீக்கிரம் அனுப்புவதற்கே உணவு தயார் பண்ணும் அருகிலிருக்கும் ஹோட்டல்கள், பொழுதுபோக்க வேறு வழியே இல்லாமல் ஒவ்வொரு வரியும் படிக்கப்பட்டு தரை முழுவதும் இரைந்து கிடைக்கும் தினத்தந்திகள்….இப்படி பல..

மருத்துவமனையிலேயே மூன்று நாட்கள் தங்கவேண்டிய நிலை..எவ்வளவு நேரம்தான் நண்பன் அருகிலேயே உக்கார்ந்து இருப்பது..தினத்தந்தியை எடுத்துக் கொண்டு ரூமை விட்டு வெளியே வந்து அமர்ந்தேன்..சிறிது நேரம் கழித்துதான் கவனித்தேன்..என்னை யாரோ கூர்ந்து கவனிப்பது போல் ஒரு எண்ணம்....நிமிர்ந்து பார்த்தால், 75 வயது இருக்கும் ஒரு பெரியவர்..

“தம்பி..பேப்பர் கிடைக்குமா..”
“எடுத்துக்குங்க அய்யா..,”
“நன்றிப்பா..நேத்துதான் வந்தீங்களோ..”
“ஆமாங்க..நீங்க..”
“நான் வந்து மூணு மாசமாச்சு தம்பி..என்னோட மனைவிதான்..வயசாயிடுச்சுல்ல தம்பி….நிறைய பிரச்சனை..நாளைக்குதான் ஆபிரேசன் சொல்லி இருக்காங்க..அவ எப்பவும் அழுதுக்கிட்டே இருக்கா தம்பி..கடவுள் எங்க ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும் தம்பி..”

சொல்லும்போதே அவர் கண்களில் தண்ணீர் நிறைந்து இருந்தது..பேசும்போது நா..தழுதழுத்தது..எனக்கு அவருக்கு ஆறுதல் சொல்லுவதைதவிர அப்படியே விட்டு விடலாம் என்றே தோணியது..சிலநேரம், ஆறுதல்தான் அதிக துன்பம் தரும்….என் நண்பனின் ஆபரேசனுக்கு லேட் ஆனதால் அவசரமாக உள்ளே சென்றேன்..இரண்டு பேர் ஒரு ஸ்ட்ரெச்சர் எடுத்து வந்தார்கள்..கண்களில் அவ்வளவு அலட்சியம்..அப்படியே நண்பனை புழுவைத் தூக்கிப் போடுவது போல் தூக்கி ஸ்ட்ரெச்சரில் எறிந்தார்கள்..என் நண்பன் வலியால் “அப்பா” என்று கத்தும்போது எனக்கு வலித்தது..ஸ்ட்ரெச்சரை அப்படியே தள்ளிக் கொண்டு போனார்கள்..என் நண்பன் என்னை விட்டு அகன்று போய் கொண்டு இருப்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது..

நானும் ஸ்ட்ரெச்சர் பின்னாடியே ஓடினேன்..அப்படி ஓடும்போது கூட என் நண்பன் என் கைகளை இறுக்க பற்றி கொண்டான்..”என்னைக் காப்பாத்துடா..” என்று கெஞ்சுவது போல் இருந்தது..ஒரு நிமிடம்தான் இருக்கும்..அவனை ஆபிரேசன் தியேட்டருக்கு கொண்டு சென்றார்கள்..அந்த நிமிடங்கள் யாருக்கும் வரக்கூடாது..ஒரு பாஸ்ட் பார்வேட் பட்டன் இருந்தால் அதை உபயோகித்து ஒரு மணி நேரம் முன்னால் சென்று விடலாம் போல் இருந்தது….

ஒரு வழியாக ஆபிரேசன் நல்லபடியாக முடிந்தது,.,.நண்பனை அதே ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே தள்ளி கொண்டு வந்தார்கள்..அனிஸ்தீசியா கொடுத்திருந்ததால் அவனுடைய கண்கள் மேல் நோக்கி இருந்தது..என்னால் அவனை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை..அப்படியே முகத்தை திருப்பிக் கொண்டேன்….ஆபிரேசன் முடிந்தால் உடனே ரூமுக்கு அனுப்பி விட மாட்டார்கள்..”போஸ்ட் ஆபிரேசன் ரூம்” என்று ஒரு அறை உள்ளது..அதில் நமக்கு அனுமதி இல்லை..மெதுவாக நடந்து ரூமுக்கு வந்தேன்..

கண்ணயர்ந்து தூங்கினேன்..புத்தாண்டு பிறந்து, விடிந்திருந்தது..அய்யோ நண்பனை சென்று பார்க்க வேண்டுமே..அவசரம் அவசரமாக ரூமை விட்டு வெளியே வந்தேன்..என்றும் வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பெரியவரைக் காணவில்லை..ரூம் பூட்டியிருந்தது….அருகில் நடந்து கொண்டிருந்த நர்ஸைக் கேட்டேன்..

“மேடம்..பெரியவர் எங்க ஆளைக் காணோம்..”

“நைட்டு, பாட்டிக்கு திடீர்ன்னு உடம்பு தூக்கி போட்ருச்சுங்க..அவசரமா, ஐ.சி.யூ வுக்கு போற வழியிலேயே இறந்துட்டாங்க…பெரியவர் எல்லா பார்மாலிட்டியும் முடிக்கறதுக்காக, கீழே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்,.

என்னால் முடியவில்லை….உலகத்திலேயே கொடுமையான விசயம் இறப்புதான்..அடுத்த நாள் நாம் இறந்து விடுவோம் என்று தெரிந்து ஒருநாள் வாழ்ந்து பாருங்கள்..நீங்களே தற்கொலை செய்து விடுவீர்கள்..

துக்கத்தை மனதில் அடக்கிக் கொண்டு நடந்து சென்றேன்..அதே நர்ஸ் திரும்பவும் கூப்பிடுவது போல் இருந்தது..

“சார்..”
“என்ன..??”
“விஸ் யூ ஹேப்பி நியீ இயர்..”

மருத்துவமனை..உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட தனிஉலகம்..

9 comments:

Vijayashankar said...

என்னை அறியாமல் கண்ணீர் வடித்தேன்.

Arul Sankar.S said...

ஏனென்று தெரியவில்லை…. படித்துக் கொண்டிருக்கும் போதே என் கன்னம் நனைந்திருந்தது…

அருமையான வலைப்பதிவு…! உங்களோடு பேச முடியுமா? எனது மின்னஞ்சல் arulsankar12@yahoo.com

vasu balaji said...

ம்ம்

பூங்குன்றன்.வே said...

படிச்சதும் பீலிங்க்ஸா இருக்குப்பா.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:(

குப்பன்.யாஹூ said...

yes staying in hospital is stressful job, In that case we should speak with the watchman, clinic staff, drivers, so that the worries will be forgeton temporarily.

Some people prefer to have junior vikatan, nakkeran, ntrikan all issues.

some will do prayers.chantings.

taaru said...

after தமிழ் font typing injury, இறங்குன முதல் matchல 101*[10x4;12x6]... உங்களோட விவரணை நல்லாவே இருக்குண்ணே.. அதுவும் தினத்தந்தினு சொன்னீங்க பாருங்க அங்கனக்குள்ள நிக்குறீங்க..
//அவசரம் அவசரமாக ரூமை விட்டு வெளியே வந்தேன்..//
என்னாது ரூமா?!! அப்போ அவீங்க கூட இல்லையா? நெம்ப கஷ்டமாச்சே அண்ணே?? சாப்பாடெல்லாம் எப்படி?

Unknown said...

நண்பர் நலமுடன் இருக்கிறாரா ராசா? அந்த அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்

சிங்கக்குட்டி said...

என்ன இது! வழக்கம் போல சிரிக்க வந்தால் இப்படி மனதை கனக்க வைப்பதா ராசா ?

Post a Comment