(இன்டெர்நெட் சென்டரில் தமிழில் டைப் செய்யும் வசதி இல்லாததால், பின்னூட்டத்திற்கு பதில் எழுத முடியவில்லை..மன்னிக்கவும்..இன்டெர்நெட்டிற்கு விண்ணப்பித்துள்ளேன்)
போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நல்லா அசந்து தூங்கிக்கிட்டு இருந்தேன். சனிக்கிழமை ராத்திரி ஷிப்ட் முடித்து வரும்போது தெரு நாய்களுக்கு பயந்து ஓட்டப் பந்தயம் நடத்திய களைப்பால் நன்றாக தூக்கம் வந்தது. காலையில 4.30 மணி இருக்கும், உள்ளங்காலை யாரோ சுரண்டுற மாதிரி ஒரு உணர்வு. வீட்டில் நிறைய பெருச்சாளிகள் இருப்பதால் தட்டி விட்டு தூக்கத்தை கண்டினியூ பண்ணினேன். கொஞ்ச நேரம் பார்த்து “ராசா..ராசா.. என்று ஆசையா கூப்பிடுற மாதிரி சத்தம்ணே..கண் முழிச்சு பார்த்தால் நம்ம நண்பன் கோவாலு..நல்லா தலை குளிச்சிட்டு, பவுடர் போட்டு பொண்ணு பார்க்க போற மாதிரி உக்கார்ந்து இருக்காண்ணே..எனக்குனா செம கடுப்பு..
“டே கோவாலு..என்னடா வேணும்…காலங்காத்தால 04:30 மணிக்கு பேய் மாதிரி எழுப்பி விடுற..
“ராசா..வாடா..ஒலக சினிமாவுக்கு போகலாம்..
“டே..கோவாலு.வெறியைக் கிளப்பாத..
“அடப்பாவி ராசா..நீதானடா 05;30 மணிக்கு உலக சினிமாவுக்கு போகலாம்னு சொன்ன..
“அட நாயே..ஏண்டா..05:30 மணின்னா காலங் காத்தாலயாடா?..சாயந்திரம்டா..
“ராசா..நீ அத சொல்லவே இல்லியேடா..
“அத விடு கோவாலு..நீதான் வில்லு படம் பார்க்குற ஆளாச்சே..நீ எப்படி ஒலக சினிமா..??
“இதுக்கு என்னடா கூச்சம்..அது சரி மேட்டர் போடுவாயிங்கள்ள..
“அடப்பாவி..அது என்னடா மேட்டர்..
"அதுதான்டா சீன்.."
“அடங்கொய்யாலே..பரங்கிமலை ஜோதியில பகல் காட்சிக்கு போற மாதிரி சொல்றேயேடா..டே..இது ஒலக சினிமாடா..வேற மாதிரி இருக்கும்..
“ஏண்டா..அதுவும் உலக சினிமாதானடா..
“டே..கோவாலு..நான் ஆட்டத்திற்கு வரலை..ஆளை விடு..
“ஆமாண்டா ராசா..யாருடா படம் போடுறா..
“தெரியலடா..லக்கிலுக்கு வர சொல்லியிருந்தாரு..அதுதான் போகலாமுன்னு..
கோவாலு காண்டாகிட்டான்..புல்மீல்ஸ் எதிர்பார்த்து வந்தவனுக்கு கடலை முட்டாயை கொடுத்தா எப்படி இருக்கும்..கோவாலு அவ்வளவு கெட்ட வார்த்தை திட்டி பார்த்தது இல்லைண்ணே..கடுப்புல என் போர்வையே பிடிங்கிக்கிட்டு தூங்கிட்டாண்ணே..
நானும் சாயங்காலம் 04:00 மணிக்கெல்லாம் ஒலக சினிமா பார்க்க ரெடியாகிட்டேண்ணே..சரி மனைவிக்கு ஒரு போன் பண்ணிடலாமுன்னு நினைத்தேன்..
“ஏங்க..சென்னை எப்படி இருக்கு..
“நல்லா இருக்கு.பதிவர் சந்திப்புக்கு போறேன்..
“அய்யோ..எதுக்கு அங்க எல்லாம்..
“இல்லை..போரடிக்குது..அதான்..
“சரி..ஹெல்மெட்டை போட்டுட்டு போங்க..எந்த சந்தர்ப்பத்துலயும் ஹெல்மெட்டை கழட்டாதீங்க..
“ஏண்டி..
“நீங்க வேற எல்லாத்தையும் கலாய்ச்சிட்டீங்க..யாராவது மூக்குல குத்திட்டா..
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்..
மனதில் ஒரு பயம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. என் பல்சர் எடுத்துக்கொண்டு ஆழ்வார்பேட்டை சென்றேன்..எனக்கு தெரிந்ததெல்லாம் கமல் வீட்டிற்கு பக்கத்தில் கிழக்கு பதிப்பகத்தில் திரையிடுகிறார்கள்..ஆழ்வார் பேட்டை முழுவதும் சுத்தி விட்டேன். ஒரு பயலுக்கும் கிழக்கு பதிப்பகம் தெரியல…கடைசியில் ஒரு ஆட்டோக்காரர் மாட்டினார்..
“அண்ணே..இங்க கிழக்குப் பதிப்பகம் எங்க இருக்கு..
“கியக்கு பதிப்பகமா..இன்னாப்பா அது..
“புத்தகமெல்லாம் போடுவாயிங்கள்ள..
“தெரியிலப்பா..
“கமல் பக்கத்து வீட்டுல இருக்குதுன்னு சொன்னாங்க..
“ஆஹாங்க்…அப்படி பிரியுற மாதிரி சொல்ல வேண்டியது தான..அப்படியே லெப்ட் ஓரம் கட்டியே போனேன்னா..நாலாவது வீடு..கமல் இங்கதாம்பா இருக்காரு..கவுதமியும் கூடத்தாம்பா இருக்கு..ஹி..ஹி
“அண்ணே..கவுதமி இருந்தா என்ன..சிம்ரன் இருந்தா எனக்கென்ன..நான் என்ன கிசுகிசுவா எழுதுறேன்..
அது என்னண்ணு தெரியலண்ணே..மெட்ராஸ்ல எல்லாரும் சூடாவே இருக்காயிங்க..கோபத்துல ஒரு கெட்ட வார்த்தையை சொல்லிட்டு போயிட்டாரு.. அப்படி இப்படின்னு ஒரு மணி நேரம் கழித்து கிழக்கு பதிப்பகம் கண்டு பிடித்தேன்..எனக்கு என்ன பயம்னா..ஒரு நூறு பேர் இருந்தா, எனக்கு சீட் கிடைக்குமா..நின்னுக்கிட்டுதான் பார்க்கனுமா..07:00 மணி வேற ஆகிடுச்சே..படம் பார்த்தாலும் புரியுமா..பல கேள்விகளுடன் கதவைத் திறந்தேன்..பார்த்தா..மொத்தம் 15 சேர் இருக்கும்..7 பேர் உக்கார்ந்து இருந்தாங்க..கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்..இடம் மாறி வந்து விட்டமோ..யாருகிட்டயாவது படம் எப்ப போட்டாயிங்கன்னு கேக்கலாமுன்னு பார்த்தா அத பதிவுல போட்டுறுவாயிங்கன்னு பயம் வந்தது..
அப்படியே ஒரு சீட்டைப் பிடித்து உக்கார்ந்தேன்..படம் ஒன்னும் புரியலை..எங்கயோ குண்டு வெடிக்குது.ஒரு பெரியவர் காலை தண்ணி ஊற்றி கழுவுகிறார்..ஒரு பெரிய பாழடைந்த பங்களாவில் ஒரு பெண் தனியாக நடந்தார்..எனக்கு தலை சுற்றியது..எனக்குப் பின்னால் இருந்த 2 பேர் அப்பவே எஸ்கேப் ஆனார்கள்..
நானும் எஸ்கேப் ஆகலாமுன்னு பார்த்தா, எங்க “ஞான சூன்யம்” ன்னு சொல்லிருவாயிங்களோன்னு பயம் வேற..பல்லை கடிச்சுட்டு உக்கார்ந்து இருந்தேன்..பக்கத்துல ஒருத்தருக்கு போன் வந்தது..அவர் வெளியே போய் போன் எடுக்கலாமுன்னு போனவரு அப்படியே எஸ்கேப்பு..அப்பதான் எனக்கு பொறி தட்டுச்சு..ஆஹா..அப்படியே நம்ம கோவாலுக்கு ஒரு மிஸ்டு கால் போட்டேன்..பய புள்ள எதிர் பார்த்த மாதிரியே கால் பண்ணினான்..போன் எடுக்க வெளியே போற மாதிரி “கோவாலு..இங்க நிலைமை..சாரி..டவர் சரியில்லை..நான் வெளியே வந்து பேசுறேன்.. அப்படியே ஓடிப்போய் பல்ஸரை எடுத்துட்டு விட்டேன் பாருங்க ஓட்டம்..ரெண்டு தெரு தள்ளி நிப்பாட்டுனேன்னே..ஒரு தள்ளு வண்டியில இட்லி, தோசை வைத்து தந்தாயிங்க பாருங்க..அப்பா..அதுதான்னே ஒலகம்..அப்படியே ஒலகமே என் கையில வந்த மாதிரி இருந்தது..போன் அடித்தது..மனைவிதான்..
“என்னங்க..உலக சினிமா எப்படி இருந்தது..
“ம்….இருந்தது..
“ஏங்க..ஒரு மாதிரி பேசுறீங்க..யாராவது, மூக்குல குத்திட்டாயிங்களா..
“போடீங்க..படம் பார்த்து நம்மளே நாமே மூக்குல குத்திக்கிட்டாதான் உண்டு..
“சரி..இப்ப வீட்டுல போய் என்ன பண்ண போறீங்க..
“வேற என்ன..பதிவு எழுதனும்..
“உங்களையெல்லாம் திருத்தவே முடியாது..நீங்கெல்லாம் பதிவு எழுதியே சாகப்போறீங்க..
12 comments:
கோவாலுவ விட்டு படம் பார்க்க போனா இப்புடித்தாண்ணே:))
ஹா .. ஹா.. நல்லா பதிவு...
ராசா.. போன மாசம் ஈரானிய படத்துக்கு வந்திருந்தீங்களா..? நான் உள்ளேயே வரல எல்லோரும் பக்கத்தில இருக்கிற டீ கடையில செட்டில் ஆயிட்டோம்
Super Annae.Aamam padam peru enna??
ரொம்ப நல்ல விமர்சனம் :-)
நீங்க நகைச்சுவைக்கு எழுதுறீங்க.
ஆனால் இந்த மாதிரியான விமர்சனங்கள் பதிவுகள், உலகப் படம் இலவசமாக போட்டுக் காடும் எண்ணத்தை காயப் படுத்தாதா
kuppan_yahoo
//படம் பார்த்து நம்மளே நாமே மூக்குல குத்திக்கிட்டாதான் உண்டு//
நல்ல பதிவு.
இப்ப நிறைய படங்கள் இப்படித்தான் வருகிறது :-)
ஹா ஹா ஹா.......! நல்லா சொல்லிருக்கீங்க ராசா..........அன்னைக்கு நானும் அந்த பக்கம் வரணும்னு தான் இருந்தேன்..கடைசி நேரத்துல வேற வேலை வந்ததுனால வர முடியலை............
க க க ... ;)
இன்னமும் madras காராய்ங்க ஆவலயாண்ணே.... நீங்களும் NRI தாண்ணே...[முக்கியமான கூட்டத்துக்கு எல்லாம் போறீகள்ள.. அதான்..]
நல்ல அனுபவம்தான்.. :)
சிரிச்சு வயிறு வலிக்குது
Post a Comment