நண்பர்கள் “வேட்டைக்காரன்” படம் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்திருப்பார்கள் போல்..என்னையும் இழுத்து கூட்டிக் கொண்டு போனார்கள். பொதுவாக நான் விஜய் படங்களின் டிரெய்லர் மட்டுமே பார்ப்பேன்.அதுவே முழுக்கதையும் சொல்லிவிடும்..ஆனால், நேற்று நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன், ஏழரை நாட்டு சனி, தியேட்டர் வரைக்கும் கொண்டு சென்றது..
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிற்பது போல் இளைஞர் பட்டாளம், கியூவில் நின்றது..அனைவரில் கண்களிலும் அப்படி ஒரு வெறி, அன்று படம் பார்த்தே தீருவது என்று. இதே வெறியை படிப்பதில் காட்டியிருந்தால், சென்னையில் குடிசைகளே இல்லாமல் இருந்திருக்கும். ஒருவழியாக கவுண்டரை அடைந்தேன்..
திடீரென்று காதை கிழிக்கும் விசிலோசை..திரை ஒளிர தொடங்கியது..”பிலிம் டிவிசன்” என்று “ பாரத பிரதமர் 10 நாள் வெளிநாட்டு பயணம்..” என்று தொடங்கியபோது..பின்னால் இருக்கும் இளைஞர் பட்டாளம் “டே..**** மவய்ங்களா..படத்தை போடுங்கடா..” என்று அலற தொடங்கியது..ஒரு வழியாக நியூஸ் ரீல் துவங்கியபோது காது சவ்வு கிழிய ஆரம்பித்தது..படம் துவங்கியபோது, படத்தில் ஒருவர் கொடுத்த காசுக்கு மேல் விஜயை புகழ்ந்து கொண்டிருந்தார்….காலிலிருந்து ஆரம்பித்து, அப்படியே மேலே விஜயை காண்பித்தபோது விசில் சத்தம் டி.டீ.எஸ் சவுண்டை விடக் கேட்டது…அப்துல் கலாம் கனவு கண்ட ஒரு இளைஞன் எழுந்து “இளைய தளபதி விஜய் வாழ்க” என்று அடித்தொண்டையில் கத்திய போது புல்லரித்தது..
விஜய் வழக்கம்போல் பஞ்ச் டயலாக் பேசும் போதும் “தலைவா பின்னிட்ட போ..” என்று சத்தம் காதைப் பிளந்தது,,.படத்தில் கதை என்று சொல்வது என்றால்..ம்..ம்…ம்…ம்…வழக்கம்போல் ஒன்றுமேயில்லை..விஜய் வழக்கம் போல் பஞ்ச் டயலாக் விடுகிறார்..எதிரிகளை ஒரே ஆளாக தூக்கி புட்பால் விளையாடுகிறார்..வில்லனிடம் சவால் விடுகிறார்..அனுஷ்காவுடம் ரொமான்ஸ் செய்கிறார்..காமெடி நடிகர் வேறு இல்லாததால் காமெடி செய்ய முயற்சித்து உசிரை எடுக்கிறார்..அனுஷ்கா வழக்கம்போல் ஹீரோக்கள் படத்தில் வரும் ஊறுகாய்..கேமிரா விஜய் சண்டை போடும்போது சும்மா சுழட்டி சுழட்டி அடிக்கிறது…எடிட்டிங்குக்கு சிரமமேயில்லை..ஒரு கட்டிங்க்..ஒரு ஒட்டிங்க்..மனதுக்கு ஒரே ஆறுதல் விஜய் ஆண்டனி இசை..பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன..
படத்தைப் பார்த்தபோது ஒன்று மட்டும் தெரிந்தது..”இன்னும் விஜய் திருந்தவில்லை..இனிமேலும் திருந்தவும் மாட்டார்..” இடைவேளையில் எழுந்து வர முயற்சித்தேன்…என்னுடைய பைக் பார்க்கிங்க் நடுவில் மாட்டிக் கொண்டதால் தியேட்டர் ஊழியர் அனுமதிக்கவில்லை….நொந்து கொண்டே, படம் முழுவதையும் பார்த்தபோது எப்போதும் எனக்கு வந்திராத தலைவலி வந்தது..அப்படியே தலையை பிடித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது எங்கேயோ காற்றை கிழித்துக் கொண்டு குரல் கேட்டது..
“அடுத்த முதலைமைச்சர் விஜய் வாழ்க….”
“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..”
33 comments:
//“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..”//
:)
//“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..”//
அப்படியே ஆகக் கடவதகா
//“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..”//
:)
ததாஸ்து..
என்ன தல நீங்களும் இப்டி சொல்லிடீங்க .. சிரிச்சிகிட்டே விமர்சனம் படிச்சாச்சி ...+ நல்ல அட்வைஸ் அருமை .....
:)
பல கோடி கள் செலவு செய்து எடுக்கின்ற படங்களை
இப்படி விமர்சனம் செய்தால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
விமர்சனம் என்ற பெயரில் மிகவும் கடுமையாக சாடி யிருப்பது கண்டிக்க தக்கது.
//அப்துல் கலாம் கனவு கண்ட ஒரு இளைஞன் எழுந்து “இளைய தளபதி விஜய் வாழ்க” என்று அடித்தொண்டையில் கத்திய போது புல்லரித்தது..//
ரசிதேன், மிக அருமையான பதிவு நண்பரே.
//அந்த குட்டி குட்டி ரசிகர்களுக்கு 1 முதல் 2 வயது இருப்பதுதான் கொடுமை//
இந்தக் கொடுமையை நானும் வேட்டைக்காரன் ரிலீஸ் அன்னைக்கு சன் டிவில 10 நிமிஷம் தொடர்ந்து காமிச்ச வேட்டைக்காரன் செய்திகள்ல பார்த்தேன். எப்படி கைகுழந்தையைத் தூக்கிக்கிட்டு படம் பார்க்க மனசு வருதுன்னு தெரியல, அதுவும் படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே. வாழ்க நம் நாடு.
@bilgaizi
I guess you must be from film industry to make such a bold statement. If you want to protect the Film industry then you should be able to protect the average fan. So can u please ask Vettaikaran crew to refund 100 Rupees spent by everyone who saw this film, Believing Vijay will deliver this time. If you cant then please STFU and understand everyone has their right of speech.
=))
Nanbarae... yethukku naaya mitichu... kadikuthu kuraikuthunu sollanum... nooru roovaikku quarterum kozhibiriyanium adicha... eeraivanai kaanalaam
//Nanbarae... yethukku naaya mitichu... kadikuthu kuraikuthunu sollanum... nooru roovaikku quarterum kozhibiriyanium adicha... eeraivanai kaanalaam
//
excellent words ravi....
மசால் தோசை சாப்பிடப் போயிட்டு பொங்கலை எதிர்பார்த்தா எப்படித் தல...,
ஒரு வாசகம் சொன்னாலும் "திருவாசகம் " சொன்னீங்க “இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..”
:)
வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா...
நீங்க பாட்டுக்கும் போற போக்குல படத்த கொத்து கொத்துன்னு கொத்தி போட்டு தள்ளிட்டு போய்டாதீங்க...அப்பறம் எங்க இளைய தளபதிய இந்திய பிரதமரா பார்க்கற எங்க கனவு கனவாவே போயிரும்
but same thing happened in MGR films too. Those days' MGR fans are now ADMK & DMK distrcit secretaries, ministers (Karuppasami pandiyan, KKSSRR, EV Velu, Tirunavukkarasar,jegatratchakan...)
The way you give the review about wastekaaran was really nice.
I was really enjoying each and every line of the review.
keep up the good work
Really impressive
Thanks
Sundar
“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..”
வேட்டைக்காரன் firsthalf கூட ஓகே ஆனா secondhalf பார்க்குறதுக்கு மூளைய வீட்டுலேயே கழட்டி வச்சுட்டுதான் போகணும். கிளைமாக்ஸ் சீன்ல என் பின்னாடி உட்கார்ந்திருந்தவங்க சிரிக்க அரம்பிசிட்டங்க. என்னத்த சொல்ல 70 ரூபாய சாக்கடைல போட்ட மாதிரி நெனச்சுக்க வேண்டியது தான் . இன்னொரு கொடும என்னன்னா விஜய் பண்றது மட்டும் இல்லாம இவன பார்த்து "சின்ன தளபதி", புரட்சி தளபதி, அப்புறம் நேத்து வந்த நகுல் கூட நம்மள சாவடிக்குரணுக
nanpa vijithan sollitarla ; nan adicha thanga matanu; apparam an entha pulampalkal?
படத்தைவிட படத்துக்கு முந்தைய உங்கள் விமர்சனம் மிகப் பிரமாதமாக இருந்தது. வாழ்த்துகள்.
Why Blood?? Oh.. Same Blood!!! :)
உங்க slangula நக்கல் கொஞ்சம் அதிகமா எதிர்பார்த்தேன்
ithula irruthu onne one theriyuthu... vettaikaran romba bore padamnu...all the best........
உங்க பதிவுகள் அனைத்தும் விடாமல் படிக்கும் உங்கள் விசிறி நான் (மெய்யாலுமே).. எனக்கு புரியவில்லை, எதுக்கு இந்த மாதிரி மசாலா படங்களுக்கு போகனும், அப்பறம் இப்படி விமர்சனம் வேறு எழுதனும்...
இவர்கள் படங்களை நாம் அலட்டிக் கொள்ளாமலே விட்டு விட்டாலே போதும்... கொஞ்ச காலத்தில் தேய்ந்து விடுவார்கள்... ரஜினி, விஜய் போன்றோர் வளர்வதற்கு அவர்கள் உருவாக்கும் திரைக்கதை 10% தான், நாம், நம் மீடியா கொடுக்கும் பிம்பம் மீதி 90%...
வேலில போற ஓணான எடுத்து வேட்டில விட்ட கதையா நீங்க விஜய் படம் போய் மாட்டிகிட்டீங்க........
நாங்கல்லாம் உஷாருல.......
விஜய் படம் ரிலீஸ் ஆக்ரா அன்னில இருந்து அடுத்த ஒரு மாசத்துக்கு டிவி கூட பாக்க மாட்டோம்ல
:-) :-)
Nadippu enral ennavendru vijaykku theriyathu, makeup- zero, pallu valakkama kulikkama irukkiravan madhiriye irukku. AAna builtup, punch idukkellam kuraichal illai. Indha azhagule padhavi aasai vera, vilanginappala than.
Yellame yellama iruntha thaan irukkirathu irukkira mathiri irukkum...sari..vidungappu.
பாவம்தான் நீங்க... ;)
Post super... Vijay thiruntha vaipillai entrathu sirappu...
Vignesh : "இவர்கள் படங்களை நாம் அலட்டிக் கொள்ளாமலே விட்டு விட்டாலே போதும்... கொஞ்ச காலத்தில் தேய்ந்து விடுவார்கள்... ரஜினி, விஜய் போன்றோர் வளர்வதற்கு அவர்கள் உருவாக்கும் திரைக்கதை 10% தான், நாம், நம் மீடியா கொடுக்கும் பிம்பம் மீதி 90%..."
விக்னேஷ் சொன்னது 100% கரெக்ட்டு
Post a Comment