Monday, 7 December 2009
யப்பா சாமி…முடியலண்ணே…தொடர்ச்சி
ஒருவழியா சென்னை வந்து சேர்ந்தேன். சென்னையைப் பார்த்து 2 வருடங்கள் ஆயிருந்தாலும், ஏதோ எல்லாவற்றையும் புதிதாக பார்ப்பது போல இருந்தது. சில்லென்று பெய்யும் மழை, அநியாய வட்டி மாதிரி மீட்டருக்கு மேல் வாங்கும் ஆட்டோக்கள், காலையில் பல்விளக்காமல் குடிக்கப்படும் காபி, 9 மணிக்கு மேல் எந்தக் கடையில் கேட்டாலும் கிடைக்காத தினத்தந்தி, ஏதோ நாளை உலகம் அழியப்போவது போல் பரபரப்பாக திரியும் வாகனங்கள், மழையால் நாசமாகிப் போன ரோடுகள், பின்னால் உக்கார்ந்து இருப்பவர்களை மதிக்காமல் துப்பப்படும் பஸ் ஓட்டுனரின் எச்சில், மேலை நாட்டு நாகரிகத்திற்கு மாறி விட்டோம் என்று காண்பிப்பதற்காக ஸ்பென்ஸர் பிளாசாவில் 60 ரூபாய்க்கு வாங்கப்படும் பர்கர்., எங்கு சென்றாலும் கத்தி, கத்தியே உசிரை எடுக்கும் எப்.எம் கள்..”அம்மா செத்துட்டாங்களா..சோ..ஸ்வீட்..அம்மாவுக்கு என்ன பாட்டு டெடிகேட் பண்ணணும்” என்று கூசாமல் கேட்கும் சன் மியூசிக் தொகுப்பாளினி..இன்னும் பல..இப்படியே எழுதிக் கொண்டு போகலாம்..ஆனால் “அமெரிக்கா போயிட்டு வந்தவயிங்க மாதிரி நீங்களும் பேச ஆரம்பிச்சிட்டீங்களா..” என்ற விமர்சனம் வந்து விழுவதால், இதோடு நிறுத்திக் கொள்ளலாம்..
ஐ.டி ஹைவே பயங்கரமாக இருக்கிறது…எல்லாம் கமர்சியல்..முன்பெல்லாம் சோழிங்கநல்லூர் செல்லும்போது ஏதோ பாலைவனத்தில் செல்வது போல் இருக்கும். ஆனால் இப்போது ஏதோ நரகம் சாரி, நகரத்திற்குள் செல்வது போல் இருக்கிறது. அதுவும் நீங்கள் இரவு பணியில் வேலை பார்த்தால், பாடு திண்டாட்டம். நான் இரவு 2 மணிக்கு என்னுடைய பல்சரில் ஆபிஸில் இருந்து கிளம்பும்போது என்னை முதலில் வரவேற்றது ரோட்டை மறைத்து நின்ற மாடுகள்..பகலில் எங்கிருங்கும் என்றே தெரியவில்லை..என்னை தாண்டி எப்படி போக முடியும் என்ற அலட்சியப் பார்வையுடன் ரோட்டை மறைத்து நின்ற போது ரோட்ட்டில் இறங்கி “பேச்சி..பேச்சி..” என்று பாடும் எண்ணம் வந்தது. அதை சமாளித்து அடுத்த ரோட்டில் வந்தால் மம்மி படத்தில் வருமே அது போல உங்களை கரம் வைத்து விரட்டும் பூச்சிகள்..தெரியாமல் ஹெல்மட் போடாமல் ஓட்டி விட்டேன்..ஒரு பூச்சி என் காதுக்குள்ள போய், ஒன்னுமில்லையே என்று திரும்ப வந்தபோது உயிர் போனது..
அதை தாண்டி வந்தபோது அடுத்து உங்களை வரவேற்பது நம்ம நண்பர்களான தெரு நாய்கள்..ஏதோ கடன் வாங்கியவனை விரட்டுற மாதிரியே விரட்டுதுண்ணே..உசிரே போயிடுது..ஒரு நாயெல்லாம் பஸ் ஸ்டாண்டுல இருந்து வீடு வரைக்கும், ஒலிம்பிக்ல ஓடுற மாதிரி விரட்டுது..அப்படி ஓடுற வழியில, ஒவ்வொரு தெரு நாய்களுக்கும் ஒரு சிக்னல் கொடுத்து ஒவ்வொன்னும் ரேஸ்ல ஜாய்ன் பண்ணிக்குதுண்ணே..
சரி எவ்வளவு ஓட்டினாலும் துரத்துதேன்னு கொஞ்சம் நிறுத்துனால அதுகளும் நின்னு ரெஸ்ட் எடுக்குதுண்ணே..சரி ஹெல்மெட்டை பார்த்துதான் குலைக்குதுன்னு ஹெல்மட்டை கழட்டுனா, என் மூஞ்சியைப் பார்த்து பயந்து அதுக ஓடுறப்ப அழுகை அழுகையா வந்துருச்சுண்ணே..
அமெரிக்கா பகுமானமா என்று நீங்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லைண்ணே..கேட்டே தீருவேன்..
“எப்படிண்ணே..சமாளிக்கிறீங்க..”
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
ஹா ஹா ஹா.....இந்த மாதிரி தினம் தினம் நடக்கற த்ரிலான விஷயம்லாம் அங்கிட்டு கிடையாதே ராசா.....
\\சரி எவ்வளவு ஓட்டினாலும் துரத்துதேன்னு கொஞ்சம் நிறுத்துனால அதுகளும் நின்னு ரெஸ்ட் எடுக்குதுண்ணே..//
அதுக்கும் நேரம் போக வேணாமா..! :-) :-)
// இறங்கி “பேச்சி..பேச்சி..” என்று பாடும் எண்ணம் வந்தது.//
classic ண்ணே... என்ன தான் US பகுமானம்னு நினச்சாலும்.. கடைசியா எங்க Ex-MPயோட பாட்டு தானே நினைவுக்கு வந்துருக்கு...??!! நீங்க மண்ணின் மைந்தன் அண்ணே...
//சிக்னல் கொடுத்து ஒவ்வொன்னும் ரேஸ்ல ஜாய்ன் பண்ணிக்குதுண்ணே..//
அப்போ அது 400x4 [நாலு கால் பிராணில அதான்...] meter relay....
//மூஞ்சியைப் பார்த்து பயந்து அதுக ஓடுறப்ப அழுகை அழுகையா வந்துருச்சுண்ணே..//
தொப்பி தொப்பி.... அமெரிக்ககாரங்கள பாத்தா அப்புடி தாண்ணே...
அடுத்து அம்மூருக்கு போயிட்டு வந்த கத.. ஓகே வா??!! குமுக்குன்னு எழுதுறீங்க... [இந்த பதிவோட தலைப்ப... நாங்க சொல்ற மாதிரி தானே இருக்கும்..??!! [நெம்ப பாசமா/நெகிழ்ச்சியா/ .....]]
// உங்களை கரம் வைத்து விரட்டும் பூச்சிகள்..//
ஏன்'ண்ணே...! அந்த பூச்சிகளுக்கு அப்படி என்ன பாவம் செஞ்சீங்க??? கரம் வைக்கிற அளவுக்கு???
:)
இதெல்லாம் நமக்கு சாதாரணம் இல்லையா..,
//இன்னும் பல..இப்படியே எழுதிக் கொண்டு போகலாம்..ஆனால் “அமெரிக்கா போயிட்டு வந்தவயிங்க மாதிரி நீங்களும் பேச ஆரம்பிச்சிட்டீங்களா..” என்ற விமர்சனம் வந்து விழுவதால், இதோடு நிறுத்திக் கொள்ளலாம்..//
ராசா, உங்களோட எழுத்தோட்டத்தை என்னோட அந்த விமர்சனம் தடுத்துட்டுதோன்னு எனக்குத் தோணுது. உங்களைக் காயப்படுத்தி இருந்தா மன்னிச்சிக்கோங்க.
பழகிருச்சு ராசா.. சென்னை நம்பர் கொடுங்க..எப்படி சமாளிக்கிறதுன்னு சொல்றேன்.
இன்னும் நிறைய சவால்கள் இருக்கு...தைரியமா எதிர் நோக்குங்க தல...ஊர்க்காரய்ங்க இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது.
பார்த்து சூதானமா போங்கண்ணே
இந்தியா வந்தாச்சா ராசாண்ணே? வாழ்த்துக்கள். கொஞ்ச நாளா பதிவுகள் வராத போதே நெனைச்சேன், நீங்க இந்தியாவிற்கு பயணப்பட்டிருப்பிங்கனு... சென்னை ரத்தபூமிண்ணே,ரத்தபூமி. பாத்து பதவிசா நடந்துகோங்க.-பயபுள்ள.
என்னனெமோ சொல்லனும்னு தோணுது... எதோ காமெடிக்கு சொல்றீங்கனு நெனச்சுக்கிறேன்... கொஞ்சம் பழைய கதையும் நெனச்சுக்கிட்டா சரி...என்னமோ போடா நாராயணா...இந்த கொசு தொல்ல தாங்க முடியல...ஆனா இந்த மாதிரி ஆளுங்க இப்படி தான் இருப்பானுங்க...
//மேலை நாட்டு நாகரிகத்திற்கு மாறி விட்டோம் என்று காண்பிப்பதற்காக ஸ்பென்ஸர் பிளாசாவில் 60 ரூபாய்க்கு வாங்கப்படும் பர்கர்//
உண்மை எது தேவையோ அதுல யாரும் மாற மாட்டாங்க, ஆனா இந்த பந்தாவுக்கு என்றே சில பார்ட்டிகள் ஊருக்குள் திரிகிறார்கள்.
இதெல்லாம் சென்னையோட கலாச்சாரம்ண்ணே கலாச்சாரம் :)
நான் போட்ட கமன்ட் எங்கே? :-) நிறைய எழுதுங்கள். படிக்க தூண்டுது!
வந்திட்டியா ராசா, இனி உன்னை ஆண்டவனே நினைச்சாலும் காப்பாத்த முடியாது ! outsoursing படத்துல வரும் டயலாக்தான் உனக்கும் மக்கா " You know what is INDIA ? I NEVER DO IT AGAIN " ஹீ ஹீ ஹீ
Great to hear that you reached india, unga number a mail panunga pesuvom :-)
இத எப்புடி மிஸ் பண்ணேன்.:))
=)) superb..
Post a Comment