Sunday, 6 December 2009

யப்பா சாமி…முடியலண்ணே…


பதினைந்து நாளா எழுத முடியாததால தம்மடிச்சு நிறுத்தின மாதிரி கையெல்லாம் நடுங்குதுண்ணே..ஒருவழியா அமெரிக்காவிலிருந்து சிங்கார(!!!!) சென்னை வந்து சேர்ந்தாச்சுண்ணே..ஆனா, அதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்குதே..யப்பா..சாமி..முடியலண்ணே..ஏதோ மறு ஜென்மம் எடுத்த மாதிரி இருக்குண்ணே..


அமெரிக்காவில் இருந்து கிளம்புறப்ப சந்தோசமாத்தான் இருந்துச்சு..வழக்கம் போல “ராசா..நீ இல்லாம எப்படி..இங்க..”, “ராசா..ஏதோ மிஸ் பண்ற மாதிரி இருக்கு..” “ராசா..போய் கடிதாசி போடுடா..” “ராசா..எங்களையெல்லாம் ஞாபகம் வைச்சிருப்பியா..” டயலாக்குகள்..ஆனால் இதெல்லாம் முதல் பிரிவை சந்திக்கும்போதுதான் வியப்பாக இருக்கும்..எனக்கு இதெல்லாம் ஏதோ வழக்கமாய் கேட்பது போல்தான் இருந்தது…..நண்பர்களின் வழியனுப்பு, புகைப்பட படலங்கள், கூட்டாஞ்சோறு என்று தொடக்கமெல்லாம் நன்றாகத்தான் இருந்தது,,.


சின்சினாட்டியிலிருந்து நியூயார்க் வந்து இறங்கியபோதுதான் பிரச்சனை ஆரம்பித்தது..வெளிநாட்டு விமானம் பிடிப்பதற்கு 3 மணி நேரம் முன்பாக செல்ல வேண்டும் என்பதை அலட்சியப்படுத்தி விட்டு வயிற்று பசிக்காக விமான நிலையத்தில் ஒரு ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தால் “செக்யூரிட்டி” செக்குக்காக நிக்கிறாயிங்க பாருங்க..அம்மன் கோயில கூழ் ஊத்துற மாதிரி..அம்புட்டு பெரிய க்யூண்ணே..சரி 1 மணி நேரம் தானே என்று நின்றால்..போகுது போகுது..போய்கிட்டே இருக்குண்ணே..ஏர் இண்டியா விமானமே எனக்காக பத்து நிமிசம் லேட்டா கிளம்புச்சுன்னா பார்த்துக்குங்களேன்(விமானத்துல இருக்குறவியிங்க முறைச்ச முறைப்பு இருக்கே..யப்பாடி..எம்புட்டு அவசரமா இருக்காயிங்க..)

ஒரு வழியா..அப்பா..என்று பெருமூச்சு விட்டுக்கிட்டு ஏறி உக்கார்ந்தா..பக்கத்துல இம்பாந்தண்டி வெயிட்டா ஒரு ஆசாமிண்ணே..அவர் ஒன்றரை சீட்டை எடுத்துக்கிட்டு எனக்கு அரை சீட்டை கொடுக்குறாருண்ணே..இதுல “நல்லா கம்பெர்டபிளா உக்காருங்க” ன்னு டயலாக் வேற..ஹெல்ப் பண்றாராருங்களாம்மா…மனசாட்சியே இல்லாம் அவ்வளவு பெரிய சீட்டு குடுத்து இருந்தாலும் என் மேலேயே தூங்கி தூங்கி விழுகுறாருண்ணே..அவ்ர்கிட்ட இருந்து காற்று மூணு பக்கமும்(மூக்கு, வாய்..., ****) வருதுண்ணே..இதுல நடுவுல தூக்கத்துல வேற எழுந்து, நல்லா தூங்கிக்கிட்டு இருக்குற என்னை எழுப்பி “ஏதோ உசிலம்பட்டி வந்துருச்சா” ங்கிற மாதிரி “பம்பாய் வந்திருச்சா” ன்னு கேக்குறப்ப எல்லாம் எப்படி இருக்குமுண்ணே..விமானத்துல சாப்பிடுறதுக்கு கொடுத்து இருக்கிற சின்ன முள் கரண்டியை எடுத்து ஒரே குத்து குத்தலாமுன்னு கடுப்பு ஏறுச்சுண்ணே..


இதுல விமானத்துல ஓசியா கிடைக்குற விஸ்கி பிராந்தி எல்லாம் ரவுண்ட் கட்டி அடிக்குறாருண்ணே..ஊறுகாய் கேக்காத குறைதான்..பதினாலு மணி நேரம் கழுகு பக்கத்துல உக்கார்ந்து இருக்கிற கோழிக்குஞ்சு மாதிரியே உக்கார்ந்து இருக்கேண்ணே..ஒரு வழியா மும்பை வழியா சென்னை வந்தப்புறம்தாம் மூச்சு வந்துச்சுண்ணே..சென்னை ஏர்போர்ட்….இங்கு உள்ளவர்களில் சிலர் மூச்சு முழுக்க லஞ்சம்தான்னே..கடமையை செய்யிறதுக்கே லஞ்சம்(இந்தியன் டயலாகுதான்)..என்னுடைய ஒரு லக்கேஜ்ஜை காணவில்லை..நான் பட்ட கஷ்டம் இருக்கே..என்னுடைய அம்மா அப்பாவிற்கு ஆசை, ஆசையா வாங்கிட்டு வந்தது எல்லாம் அதுக்குள்ளதானே இருந்தது...ஒரு பயலும் பொறுப்பா பதில் சொல்லா மாட்டுறாயிங்க….பிச்சைக்காரன் மாதிரி ஒவ்வொருதரா போய் கெஞ்சுரேண்ணே..கிடைக்குற ஒரே ரெடிமேட் பதில் “எழுதிக்கொடு வரும்”..எவ்வளவு அலட்சியம்..சே..


லக்கேஜ் எஸ்கலேட்டரில் வர்றப்ப யார் யாரோ வந்து எடுத்துட்டு போறாயிங்க..யாரும் கேக்குறது இல்ல..நான் கேக்காமலே ஒருத்தர் என் லக்கேஜை தூக்கி டிராலியில் வைத்து விட்டு என் அருகில் வந்தார்..


“பத்து டாலர் குடு சார்..”

“எதுக்குண்ணே..”

“லக்கேஜ் தூக்கி வைச்சேன்ல..”

“நான் கேக்கவே இல்லையே..”

“அதானால் இன்னா சார்..ஏர்போர்ட் வந்தா அது எங்க லக்கேஜ்ஜூதான்..”

“அதெல்லாம் கொடுக்க முடியாது..என்ன விளையாடுறீங்களா..”

“அய்யே..லக்கேஜை வழிச்சிட்டு போ சார்..”

“வழிச்சிட்டா..அப்படின்னா..”

“ஒத்திக்க சார்..”

“அப்படின்னா..”

“அய்ய..தமில் பிரியாதா..அக்காங்க்..”


ஏர்போர்ட் முழுவதும் கொள்ளை..கொள்ளை..கொள்ளை..முகமுடி போடாதுதான் பாக்கி..அப்படியே லக்கேஜை இஸ்துக்கின்னு..சாரி..தள்ளிக்கின்னு..சீ..தள்ளிக்கொண்டு(எம்புட்டு கஷ்டப்பட வேண்டி இருக்கு) மதுரை செல்வதற்காக உள்ளூர் ஏர்போர்ட் வந்தேன்..பசின்னா பசி..அப்படி ஒரு பசி..சரி ஏதாவது சாப்பிடுவோமேன்னு சொல்லி ஒரு பப்ஸ், ஒரு காபி வாங்கினேன்னே..75 ரூபா கேக்குறாயிங்க..எனக்கு ஒரு சந்தேகம்..என் பெயரை சொல்லி யாராவது சாப்பிட்டு போயிட்டயிங்களோ..


“அண்ணே..ஒரு பப்ஸ்..ஒரு காபிதான்.”

"அதுதான் 75..”

“எப்படிண்ணே..”

“ஒரு பப்ஸ் 30, காபி 35..”

ஆத்தாடி..ஏண்ணே..2 வருசத்துல இப்படி ஒரு வளர்ச்சியாண்ணே..நாசாமா போற வளர்ச்சி..கடுத்துகிட்டே காசை கொடுத்துக்கிட்டு “ஜெட் ஏர்வேஸ்” பிளைட் ஏறுனேன்னே..சரி சாப்பிட ஏதாவது தருவாயிங்கன்னு பார்த்தா..வந்தான் பாருங்க..ஒருத்தன்…டிராலியை தள்ளிக்கிட்டு “டீ..காபி..போண்டா” விக்கிறவன் மாதிரி..”யார் யாருக்கெல்லாம் வேணுமோ காசு கொடுத்து வாங்கிக்குங்க…”

எனக்கு கொலைப் பசிண்ணே..சரி ஏதோ ரெண்டு பிரட்டை மடிச்சு வைச்சு “வெஜ் சாண்ட்ச்” ன்னு ஏதோ சொல்லுராயிங்கன்னு விலையைக் கேட்டா..ஆத்தாடி..”250” ரூபாண்ணே..இதுல என் பக்கத்துல உக்கார்ந்து இருக்குற ரெண்டு மதுரைக்காரயிங்க வேற பகுமானத்துக்கு ஒரு 500 ரூபா நோட்டை நீட்டி “டூ சாண்ட்விச்” ன்னு இங்கிலிபீச்சுல பேசுறப்ப அழுகை, அழுகையா வந்துருச்சுண்ணே..ஏண்ணே..நாட்டுல 500 ரூபா நோட்டு ரொம்ப புழக்கமோ..ஊருக்குள்ள ரிசர்வ் பேங்க் ஏதாவது ஆரம்பிச்சுருக்காயிங்களா..

(கடுப்பு தொடரும்….)

26 comments:

அன்புடன் மணிகண்டன் said...

வாங்க வாங்க... நான் படிச்சிட்டு வரேன்...

அன்புடன் மணிகண்டன் said...

உங்க பயண அனுபவம் உசுர பணயம் வைக்கிற அனுபவமாயிருச்சே அண்ணே....
எப்படியோ ஊருக்கு வந்துட்டீங்க... வாழ்த்துக்கள்..

Unknown said...

வாங்க வாங்க. அமெரிக்கா போய்ட்டு திரும்ப வர்றவங்களுக்கெல்லாம் இந்தியக்குறைகள் கண்ணுக்குத் தெரியிற ஃபோஃபியா இருக்குமாமே, உங்களுக்கும் அது வந்துடுச்சா?

vasu balaji said...

கலக்கல் ரீ எண்ட்ரீ.=)). இதெல்லாம் பழகிக்கிடணும் திரும்ப. 500ரூ புழக்கம் அதிகம்தான். ஆனா நாம குடுக்கிறப்ப நோட்டுமேல ஒரு கண்ணு நம்மள ஒரு கண்ணு பார்ப்பாங்க பாருங்க. பளிச்சுன்னு அறையலாம் போல வரும். என்னிய பார்த்தா கள்ள நோட்டு பார்ட்டி மாதிரியா இருக்குன்னு..

பூங்குன்றன்.வே said...

படித்து படித்து சிரிப்பு தான் வருதுங்க.ஆனால் நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் ஈராக்ல இருந்து ஆறுமாசத்துக்கு ஒருமுறை சென்னை வந்து திரும்ப வருவதற்குள்...ரொம்ப கஷ்டம்ங்க.

கலகலப்ரியா said...

அட அந்தக் கொடுமைய ஏங்க...... சொல்லுங்க... சொல்லுங்க =))

Cable சங்கர் said...

வெல்கம் டு இந்தியா.

Anonymous said...

இந்தியா சீக்கிரம் வல்லரசாகிரும்னு சொல்றாங்களேப்பா....
ஆகிரும்ல...? "ஜெய் ஹிந்த்..."

Guru said...

thala jet airways lite flightla (madurai service) thanni kooda kodukka mattanuga. ellaam kasu thaan. namma tamilar flight paramount airways super service.. athuvum airhostess nalla tamil pesuraanga. try panni paarunga..

சபா. பாண்டியன் said...

என்னமோ எததொன்னு பயதிட்டேன் எழுதுறதே நிப்பட்டதே ராசா வந்து வந்து பாத்துட்டு ஏமாந்துட்டேன்

செ.சரவணக்குமார் said...

உங்க பயண அனுபவம் கலக்கலா இருந்தாலும் கொஞ்சம் கலக்கமாவும் இருக்குண்ணே.

puduvaisiva said...

தலைவா வெல்கம் டு இந்தியா

இன்னா தலைவா முன்னமே தகவல் தந்து இருந்தின ஏர்போட்டுக்கு
சைகிள் ரிச்சா அனுப்பி இருப்போம்.

இங்க இருந்து "வரும் ஆனா வாரது " டிரவால்ஸ்ல இருந்து வாடகை கார்ல மதுரை போயி இருக்கலாம்

ஷாகுல் said...

//காற்று மூணு பக்கமும்(மூக்கு, வாய்..., ****) வருதுண்ணே.//

நியூமராலஜி படி பார்த்தா மூன்று ஸ்டார் தானே வரும் எதுக்கு நாண்கு ஸ்டார் போட்டீங்க?:)

//பம்பாய் வந்திருச்சா” ன்னு கேக்குறப்ப //

பம்பாய் பழைய படம் எப்பவோ வந்துட்டு போயிடுச்சினு சொல்லீருந்தீங்கன்னா. அப்புறமா கேட்டுருக்கவே மாட்டார்.

மகிழ்ச்சிகரமான விடுமுறைக்கு வாழ்த்துக்கள்.

Mohamed G said...

indian gov appoint all corruption area one vigilance officer. then we will see were wrongs going on, just idea for future india. latest news in airport corruptions message in chennai airport.
very very shame to tamilnadu?....

Anonymous said...

nice experience to read, but it must have been tough for u!

Reena

லெமூரியன்... said...

\\ஏர்போர்ட் முழுவதும் கொள்ளை..கொள்ளை..கொள்ளை..முகமுடி போடாதுதான் பாக்கி...//

அதுல மும்பையும் ஹைதராபாத்தும் போட்டில சென்னையை முந்திருவாங்க....!


\\ஒரு 500 ரூபா நோட்டை நீட்டி “டூ சாண்ட்விச்” ன்னு இங்கிலிபீச்சுல பேசுறப்ப அழுகை, அழுகையா வந்துருச்சுண்ணே..ஏண்ணே..நாட்டுல 500 ரூபா நோட்டு ரொம்ப புழக்கமோ..ஊருக்குள்ள ரிசர்வ் பேங்க் ஏதாவது ஆரம்பிச்சுருக்காயிங்களா..//

ஹா ஹா ஹா....இததான் பணப்புளக்கம்னு சொல்வாங்களோ???
நல்வரவு ராசா..! :-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ராசாண்ணே.. ம்ம்... இனி சென்னை அலம்பல்களா? அசத்துங்க :))

ச.பிரேம்குமார் said...

//யாரும் கேக்குறது இல்ல..நான் கேக்காமலே ஒருத்தர் என் லக்கேஜை தூக்கி டிராலியில் வைத்து விட்டு என் அருகில் வந்தார்..//

நல்ல வேளை சொன்னீங்க... நான் திரும்ப வரும் போது சூதானமா இருந்துக்குறேன்

Purush said...

Paramount airways is really nice. so far I travelled 5 times. Never find any problem. Ticket fee is comparatively lower than other flight operator. They provide butter milk/young coconut water as welcome drink. Butter milk is yummy. Operating by tamilians...I think karumuthu group.

taaru said...

அண்ணே வந்துட்டாரு...!!!
பராக் பராக்...பராக்...
இனி கொண்டாட்டம்தேன்...
USD க்கு எம்புட்டு INR equivalentனு பாத்து பாத்து செலவழிச்சுப்புட்டு இங்க வந்து பேச்சப் பாரு...
எங்க ஊரும் நல்லா வளந்துருச்சுண்ணே...

taaru said...

நெம்ப பசின்னா ... அவீங்கள domestic terminus ல உக்கார வச்சுட்டு ஒரு எட்டு வெளிய நடந்து வந்து இருந்தீங்கன்னா சும்மா கும்முன்னு பஜ்ஜி,வடை, போண்டா [இது மட்டுமா, மத்தியான சோறே parcel வாங்கிட்டு போய் இருக்கலாம்ல...] பச்ச மண்ணா இருக்கீயளே அண்ணே... அங்கனக்குள்ள நங்கநல்லூர்ல தானே இருந்தீங்க...ஓஹ.. மறந்துட்டேன்... அண்ணே US ல இருந்து வந்துருக்காரமாம்...

Vazhga Vazhamudan said...

anne vanganne ... enga sollama kollama oodipoyittengalonnu pathen ... pathivu arumaine

Ramya Saravanan said...

romba naala kaanomenu parthen.appada ippa than nimathiya iruku.

ennakum muthal thadava india vacation ponapa ippadi than.velila sonnalum namma makkal US thimiru nu solluvanga.aana chennai t.nagarla auto la ponen paarunga,antha pugaila moochu muti heart attack varathathu than paaki.enga veedu parthu irukeenga..

பாவா ஷரீப் said...

//ஒரு பப்ஸ் 30, காபி 35..” //

என்னண்ணே 10 ரூபா இடிக்குது

ஜெட்லி... said...

வெல்கம் டு இந்தியா.....
:))

Anonymous said...

.பக்கத்துல இம்பாந்தண்டி வெயிட்டா ஒரு ஆசாமிண்ணே..அவர் ஒன்றரை சீட்டை எடுத்துக்கிட்டு எனக்கு அரை சீட்டை கொடுக்குறாருண்ணே..இதுல “நல்லா கம்பெர்டபிளா உக்காருங்க” ன்னு டயலாக் வேற..ஹெல்ப் பண்றாராருங்களாம்மா…மனசாட்சியே இல்லாம் அவ்வளவு பெரிய சீட்டு

just for joke you are telling this.
it is not possible that other person took 1 1/2 seat in flight.

Post a Comment