கடைசியாக எழுதி ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. கடைசியாக புத்தக
கண்காட்சி பற்றி எழுதியது..அதற்கப்புறம் எழுத ஏதோ தோணவில்லை..”ங்கொய்யால எங்கயா
போயிட்ட” என்று அன்பர் ஒருவர் உரிமையாக கடிந்து கொண்டபோது கூட வராத அழுகை(அதாண்ணே..இந்த
ஆனந்த கண்ணீருன்னு சொல்லுவாயிங்கல்ல..), இன்று “அவிய்ங்க” வெப்சைட்டை ஓபன்
செய்தபோது, “ஹிட் கவுண்டரில்” 5 பேர் இன்று சைட்டுக்கு வந்ததாக காட்டியபோது வந்தது..
“ங்கொய்யால, என்னமா பீல் பண்ணுறாய்ங்கடா” ன்னு என்னை நானே
சொல்லிகொண்டேன்..
வாரத்திற்கு ஏழுபதிவு, அப்புறம் வாரத்திற்கு மூன்று பதிவு,
அப்புறம் மாசத்துக்கு மூணு, அப்புறம் மூணு மாசத்துக்கு ஒன்னு என்று ஆறு
மாசத்துக்கு ஒன்றானது..எழுத ஒன்றுமேயில்லை என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன்..”அம்புட்டு
வேலையா” என்றால், ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை..சோம்பேறித்தனம்தான்..
நமக்கு இருக்குற ஒரே “தெறமை”(ஹி..ஹி) எழுதுறதுதான்
நினைச்சுக்கிட்டு இருந்த காலமெல்லாம் போய், இருக்குற ஒரே “தெறமை”
தூங்குறதுதான்ன்னு ஆயிடுமோன்னு பயம் வந்தது..உடனே லேப்டாப்பை எடுத்துட்டேன்..
ஆறு மாதத்தில், ஒவ்வொருநாளும், எழுதுவதற்கு என் கை கஞ்சா
அடித்தது போல பலமுறை துடித்திருக்கிறது..முக்கியமாக,
“அது எங்கயோ தூத்துக்குடி பக்கமோ, திருநெல்வேலி பக்கமோ
கிடக்கும்” கணக்காய், மலேசியன் விமானத்தைப் பற்றி அதிகாரிகள் சொல்லியபோது..
“அதுக்கு நாங்க என்னங்க செய்ய முடியும்..இடி, இடிச்சா
அதுக்கு நாங்க பொறுப்பா” என்று பயங்கர “பொறுப்பாக” மவுலிவாக்கம் அபார்ட்மெண்ட்
விஷயமாக தகவல் வந்தபோது
“அய்யயோ, தெரியாம சுட்டுட்டோம்யா, ஏவுகணைதான் வருதுன்னு
தெரியுதுல்ல, கொஞ்சம் தள்ளி போயிருக்கலாம்ல” கணக்காய் விபத்தான மலேசியன் ஏர்லைன்ஸ்
பற்றி அசால்டு தகவல் வரும்போதும்
“பெட்ரோல் விலையெல்லாம் ஏத்திட்டாய்ங்க பார்த்தீங்கல்ல”
என்றபோது, ஒருத்தன் “இதுக்குதான் சார், மோடி சர்க்கார் வரணும்”கிறான்..#அடேய்#
என்ற டிவிட் படித்தபோதும்
“37 சீட்டில் ஜெயித்து, “அம்மான்னா சும்மா இல்லடா” என்று
தமிழகம் மிரட்டியபோதும்
“தமிழ்நாட்டில் இனி மின்வெட்டு இருக்காது” என்ற தினத்தந்தி
செய்தியை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தபோதும்..
“அட..அட..அட..திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணின்னா
சும்மாவா” என்ற சரத்குமாரின் விளம்பரத்தை, பிரட் ஜாம் சாப்பிட்டு கொண்டே டி.வியில்
பார்த்தபோதும்
“ங்கொய்யால, ஜெர்மனி என்னமா விளையாடுறான் பாருய்யா..ஆமா,
இந்தியா பிரேசில் கூட எத்தனை கோல் அடிச்சாய்ங்க” என்று கேட்டு எதிரில் இருப்பவரை
கொலைவெறி ஆக்கியபோதும்
பெட்ரோல் போடமறந்து, வண்டியை தள்ளிகொண்டுவரும்போது, “சென்னை
ஸ்கோர் தெரியுமா சார்..என்னா சார் விளையாடுறாய்ங்க” என்று அலுத்து கொண்டவரை
கெட்ட், கெட்ட வார்த்தையில் திட்டியபோதும்,
வண்டலூர் மிருககாட்சியில் நுழையும்போது செக் செய்யப்பட்ட
என் பேக்கில் இருந்த ஆறு அவிச்சமுட்டைகளை பார்த்து “என்னா சார்,,” என்று
கேட்டபோது, “குழந்தைக்கு புட் சார்” என்று மூன்று வயதான் என் குழந்தையை
காட்டியபோது
“யோவ்..என்னய விட்டுறுங்கய்யா” என்று மைண்ட்வாய்ஸோடு, இன்றோ
நாளையோ என்று கதறி கொண்டிருக்கும் சிங்கத்தை பார்த்து, “ஏ..லையன்..வாட் வாட் எ
அனிமல்” என்று பக்கத்தில் இருப்பவர் புளகாங்கிதம் அடைந்தபோதும்..
மிருககாட்சிபூங்காவில் மிருகங்களை விட அதிக
எண்ணிக்கையில்,மூலைக்கு மூலை, தடவிக்கொண்டும், இச் கொடுத்துக்கொண்டும்(வயித்தெரிச்சல்..)
இரண்டுகால் காதலர்களை பார்த்து, “அப்பா..அங்க என்ன பண்ணுறாங்க” என்ற என்
குழந்தையிடம், “அது வந்துப்பா..அது..லையன் பார்த்தீல்ல, டைகர் பார்த்தீல்ல...”
என்று பேச்சை மாற்றியபோதும்...
“இதுவரைக்கும் என்னை யாரும் ஹக் பண்ணினது இல்லை தெரியுமா”
என்று ஓ.எம்.ஆர் ஹாட்சிப்ஸ் ஹோட்டலில் பெருமையாக காதலனிடம்(அல்லது நண்பனிடம்)
மெதுவாக பேசுவதாக எண்ணி ஊருக்கே பேசிக்காட்டி தமிழ்கலாச்சாரத்தை இன்னமும் கட்டி
காத்து கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்தபோதும்..
விஜய் டிவி அவார்டில் முதுகெலும்போடு இயக்குநர் ராம்
பேசியதை கேட்டபோதும்,
வேலையில்லா பட்டதாரி படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது,
“ங்கொய்யால, அமலா பால் ஏண்டா இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணினா” என்று ஒரு
வேலையில்லா பட்டதாரி பேசியதை கேட்டபோதும்..
“ராசா....எப்ப பதிவு எழுதப்போறிங்க,,,” என்று அன்பாக வந்த
நான்கு ஐந்து மெயில்களை பார்த்தபோதும்,
முடிவாக
“என் பிளாக் பாஸ்வேர்டு என்ன” என்று மனைவியிடம் முறை வாங்கி, “இருக்குமா..இல்லாட்டி
தூக்கியிருப்பாங்களா” என்று கைநடுக்கத்துடன், “அவிய்ங்க பிளாக்ஸ்பாட்.காம்” டைப்
பண்ணியபோதும்
எழுத தோன்றியது...கடைசியாக எழுதியே விட்டேன்..
9 comments:
கடைசியாக எழுதி வைத்த இந்த செய்திகளுக்குத்தான் நன்றி சொல்லணும்...
தொடருங்க...
மீண்டும் எழுத தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்..
வணக்கம்
நகைச்சுவை கலந்த பாணியில் பதிவை அருமையாக நகர்த்தியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Welcome back bossu..
welcome back rasa
Welcome back அண்ணாத்த
நன்றிங்கோ..))
good. welcome back I have alwaysenjoyed reading your posts
Atlast your back Rasa. Missed your blogs :-(
Post a Comment