அமெரிக்க விசா முடிந்து
தாய்நாட்டுக்கு துரத்தி அல்லது அனுப்பி(என்று டீசண்டாக சொல்லலாம்) விட்டார்கள்.
போன திங்கள்கிழமை, தாய்மண்ணை மிதித்தபோது, அடிவயிற்றிலிருந்து, “தாய் மண்ணே
வணக்கம்” என்று ஏ.ஆர் ரகுமான் கத்த தோன்றியது. ஆனால் விமானத்தில் கொடுத்த காய்ந்து
போன ரொட்டியால் வாயை திறக்க சிரமமாக இருந்தது.
சென்னை ஏர்போர்ட் செமையாக
மாறிவிட்டது என்று சிலபேர் சொன்னார்கள். அவர்களைப் பார்க்கும்போது சட்டையைப்
பிடித்து கேட்கவேண்டும். இமிக்ரேசனில் “வணக்கம் சார்” என்று சொன்னபொது, “முதல்ல
பாஸ்போர்டை கொடு” என்பதுபோல் பார்த்தார்கள். சரி, அவ்வளவுதான் நமக்கு மரியாதை
என்று, லக்கேஜ் எடுக்கும் கெரசல் சென்றேன். என்ன ஒரு ஆச்சரியம். அனைத்து
லக்கேஜ்களும், பழுதில்லாமல் வந்து சேர்ந்தது. ஒவ்வொன்றையும் எடுத்து வைக்க
சிரமப்பட்ட போது, யாரோ ஒரு நண்பர் “இருங்க வாத்யாரே” என்று எடுத்து கீழே
வைத்தார்..”ரொம்ப நன்றிங்க” என்றேன்..”பார்த்து போட்டு குடு சார்” என்றார்..”அப்படிண்ணா..”
என்றேன்..”என்ன சார் பெரிசா கேட்கபோறோம், ஒரு 100 டாலர்(அதாவது 6000 ரூ) தா சார்”
என்றார்..
அதாவது, அங்கு வந்த
லக்கேஜை கீழே எடுத்து வைக்க(என்னை கேட்காமல்) 6000 ரூபாய்..ஆஹா..பேசாம இங்கயே
வேலைக்கு சேர்ந்துவிடலாமோ என்று தோன்றியது..ஒரு நாளைக்கு பத்து லக்கேஜ்(100*10 –
1000 டலார் = 60000 ரூபாய் ஒரு நாளைக்கு). மாதம் ஒரு நாள் வேளை பார்த்தால் போதும்,
“போங்கடா, நீங்களும் உங்க சாப்ட்வேர் வேலையும் என்று சொல்லத் தோன்றியது.
அடுத்து எல்லா
லக்கேஜையும் எடுத்து காரில் வைத்து கிளம்பும்போது, இன்னொருவர் வந்தார்..”சார்..பார்த்து
போட்டு கொடுங்க சார்” என்றார்..”இது எதுக்குண்ணே” என்றேன்..”பார்க்கிங்க் சார்”
என்றார்..”ஆமா பார்க்கிங்க்” என்றேன், கிரேசி மோகன் போல. “பார்த்து கொடு சார்”
என்றார்..எனக்கு ஒன்று
புரியவில்லை. முந்தின ஆளாவது, லக்கேஜை எடுத்துவிட்டு 100 டாலர் கேட்டார், இவர்
எதற்காக கேட்கிறார் என்று புரியவில்லை..
நான் ஏற்கனவே சொல்லியது
போல..சென்னை ஏர்போர்ட் ரொம்ப மாறிடுச்சு சார்” என்று சொன்னவரை தேடி
கொண்டிருக்கிறேன்..
அமெரிக்காவிலிருந்து
வந்து ஆரம்பிச்சிடடீங்களா என்று கேட்பவர்களுக்கு, இதை எழுதுவதற்கு
அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் ஆகியிருக்கவேண்டும் என்பதில்லை. நம்ம ஊரு
அமிஞ்சிக்கரை ரிட்டர்ன் போதும்..
சும்மா சொல்லக்கூடாது,
வெளிநாடுகள் தான் நம்மை எந்த அளவுக்கு மாற்றி விடுகிறது. 30 வருடங்கள்,
புழுதியிலும், வியர்வையிலும் புரண்ட மண்ணையே, 3 வருடத்தில்
அன்னியப்படுத்திவிடுகிறதே. தெருவோரத்தில் கிடக்கும் சாக்கடை தண்ணீரும், குப்பையும்
புதிதாக பார்ப்பதுபோல இருக்கிறதே. அநியாயமாக யாராவது நடந்து கொண்டால், கோபெமல்லாம்
வருகிறதே..இந்த வியாதிக்கு பேர்தான் "என்.ஆர்.ஐ" போபியாவோ??
ஊருக்குபோய் நன்றாக
குளித்துவிட்டு, மொட்டைவெயிலில் நின்றால் எல்லாம் சரியாகி விடும் என்று
நினைக்கிறேன்..
15 comments:
:))
ஆமா முன்னாடி 10இல்ல 20ன்னு கேட்டுருப்பாங்க இப்போ முழுசா 100 அதுவும் டாலர்ல கேக்குறாங்க இல்ல அந்த மாற்றத்தை சொல்லி இருப்பாரு ஹி ஹி ஹி ..
காய்ந்து போன ரொட்டியால் வாயை திறக்க சிரமமாக இருந்தது.//அது ரொட்டியா இல்ல பெவிகாலா தல !!!!
மொட்டைவெயிலில் நின்றால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்..// கூடவே கொஞ்சம் எலுமிச்சம் பழத்தையும் சேர்த்துக்கங்க ஹி ஹி ..
வருக வருக...
நல்வரவு ..!
அடங்கொய்யால 6000ஓவாயா தல நீங்க கொடுத்தீங்களா
நன்றி தெக்காட்டான்
ராபர்ட்..ஒரு வாரம் ஆயிடுச்சு..இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன்..))
நன்றி ஸ்கூல்பையன்
நன்றி ஆனந்த்
சக்கரகட்டி..ரொம்ப வாக்குவாதத்திற்கு பிறகு, அதுல பாதியை மனமுவந்தும், என்மேல் பரிதாபப்படும் எடுத்து ..இது..வாங்கி கொண்டார்
sorgame enraalum athu namoora pola varumaa?
நீங்க சொன்னதை வைத்துப் பார்க்கும் போது ரொம்பத்தான் மாறியிருக்கும் போல... என்னதான் இருந்தாலும் சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல ஆகுமா?
Rasa.. wish you good luck to get ur visa and come back. We can give generously to the working people and not like the ones you said... It will take couple of weeks to get adjust to environment..
///என்ன சார் பெரிசா கேட்கபோறோம், ஒரு 100 டாலர்(அதாவது 6000 ரூ) தா சார்” என்றார்..///
சென்னை சார் சென்னை நீங்க என்ன அமெரிக்கான்னா நினைச்சீங்க 5 டாலர் அல்லது 10 டாலர் வாங்கி போவதற்கு
///இமிக்ரேசனில் “வணக்கம் சார்” என்று சொன்னபொது, “முதல்ல பாஸ்போர்டை கொடு” என்பதுபோல் பார்த்தார்கள்///
அவர்கள் கடமை மிக்க ஊழியர்கள் உங்களிடம் வணக்கம் சொல்லி அரட்டை அடிக்க நேரமிருக்காது
//அதாவது, அங்கு வந்த லக்கேஜை கீழே எடுத்து வைக்க(என்னை கேட்காமல்///
எஜமான் லக்கேஜை எடுத்து வைக்க யார் அனுமதியை கேக்கணும்
நன்றி ராம், குமார், ராமுடு..
நன்றி அவர்கள் உண்மைகள்..நான் சொன்ன மாதிரி, ஒரு வாரத்துல செட் ஆயிடுவேன்ன்னு நினைக்கிறேன்...சொர்க்கமே என்றாலும்(வேற வழி)...)))))
Post a Comment