பொதுவாக நான் தமிழ்படங்களை தவிர வேறுமொழி படங்களை
பார்ப்பதில்லை. மொழி தெரியாது என்பதோடு, அவர்களின் நேட்டிவிட்டி என்னவோ
ஈர்ப்பதில்லை என்பதும் தான். அதுவும் தெலுங்கு படங்கள் என்றால் காததூரம் ஓடி
கொண்டிருந்த என்னை, தெலுங்கு படங்களும் பார்க்கலாம் என்று என்னை திருத்தியவர்
பாலய்யா என்ற பாலகிருஷ்ணா என்ற அருமையான நடிகர்..அதுவும், ஒரு காட்சியில்
தொடையைத்தட்டி, முன்னால் சீறி வரும் ரயில்லை, பின்பக்கம் போகச்செய்வார்
பாருங்கள்..ஹாலிவுட் தரம்..ஆங்கில படங்களில் கூட, இதற்கு இணையான காட்சியைப்
பார்த்ததில்லை..அதைப் பார்த்து அதிர்ந்த சோனாலி பிந்த்ரேயை விட அதிர்ந்தது நான்
தான்..இப்படி ஒரு காட்சியை பார்த்தபின்பு, தெலுங்கு படங்களைப் பார்க்க வேண்டும்
என்ற எண்ணம், என் மனதில் தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது...”உர்ரே..” என்று நானும்
தொடையைத்தட்டிக்கொண்டு, தினமும் ஒருபடமுமாக மொத்தம் ஏழு படங்கள் பார்த்தேன்
என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..இன்னமும், உயிரோடு இருப்பது, அந்தக் காலத்தில்
எங்கள் ஆயா செய்த புண்ணியம் என்றால் மிகையாகாது..
இதோ, இந்தவாரம் நான் தொடைதட்டிய படங்கள்..
(குறிப்பு: பின்வரும் விமர்சனங்களில் “தக்காளி” என்ற சொல்
வருமானால், அதை தக்காளி என்றே படிக்கவும்..அந்த சொல் வேறு எதையும் குறிப்பவை
இல்லை)
சீதாம்மா வகிட்லோ சிரிமல்லே
சீட்டு
காதல் இளவரசன் மகேஷ்பாபு,
குடும்ப இளவரசன் வெங்கடேஷும் சேர்ந்த உயிரை எடுத்த..இது..உயிரை கொடுத்து நடித்த
படம் என்று சொன்னார்கள்..படத்தை பார்த்து முடிப்பதற்குள், இரண்டு முறை
ஒன்னுக்கடிக்கவும், நான்கு முறை சமோசா சாப்பிடவும். ஐந்து முறை தொலைபேசவும்
செய்தேன் என்பதே, படம் என்னை எவ்வளவு கவர்ந்திருக்கிறது என்று புரிய
செய்யும்..நானும் படத்தில், “இதோ..இப்ப வந்துரும்..இந்த பேமில் நாசமா போகப்
போறாய்ங்க..அண்ணனும், தம்பியும், காப்பாத்துவாய்ங்க பாரு” என்ற எண்ணத்துடன்,
உக்காருரேன், உக்காருரேன், ஆனா, ஒன்னத்தையும் காணோம்..அட, அட்லீஸ்ட், ஒரு திருப்பம்,
ஒரு திடுக்க்கிடும் நிகழ்ச்சி..
படத்தில், ஹூரோ, மகேஷ்பாபுவாகவும், ஹீரோயின்
வெங்கடேஷ் என்று யாராவது சொன்னால், சிரிக்காதீர்கள்..அப்படித்தான்
எடுத்திருக்கிறார்கள்..எதாவது சண்டை என்றால் மொட்டை மாடிக்கு போவது, பத்து நிமிடம்
டயலாக் பேசுவது என்று படம் முழுக்க, வெங்கடேஷும், மகேஷ்பாபுவும்
தான்..பிரகாஷ்ராஜ், சமந்தா, அப்பப்போ, சைடில் வந்து போகிறார்கள்..தக்காளி,
படமாய்யா இது..
மரியாதா ராமண்ணா
டோமேட்டோ..நான் பார்த்த படங்களிலேயே, உருப்படியான ஒரே படம்
மரியாதா ராமண்ணா..காமடி நடிகர் சுனில், ஹீரோவாக நடித்த இரண்டாவது படமாம்..காமெடி
மட்டுமல்ல, ஹீரோவாகவும் கலக்குவேன் என்று நிரூபித்த படமாம்..ஆனால் இப்போ ஆளைத்
தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது, வருத்தப்படவைத்தது..
குடும்ப பகையினால் ஊரை விட்டு பிரிந்து, பின் நிலத்தை
விற்பதற்காக சொந்தவீட்டுக்கு வரும் சுனில், எதிரிகளிடம் மாட்டி கொண்டு, அதே
நேரத்தில், புத்திசாலித்தனாமாக, காதலிலும் எப்படி ஜெயித்தார் என்பதை அழகாக
காட்சிப்படுத்தியிருப்பார் ராஜமௌலி. தெலுங்கு புரியாத எனக்கே, பல இடங்களில்,
சிரிப்பு வந்தது, என்றால், அக்கட தேசத்துகாரகளுக்கு சொல்லவா வேண்டும்..ஹிட் மூவி
என்று கேள்விப்பட்டேன்..
அதுர்ஷ்
தொடையைத் தட்டி, ரயிலை நிறுத்திய பாலகிருஷ்ணாவுக்கு
சொந்தக்காரரான ஜீனியர் என்.டி.ஆர் நடித்தபடம்..பாலகிருஷ்ணாவுக்கு, ஒரு ரயில்
என்றால், அட்லீஸ்ட் அவருடைய இளவல், ஒரு பஸ், ஆட்டோ, ரிக்சா என்று எதையாவது
நிறுத்தியிருப்பார் என்று தேடி பார்த்தேன்..தக்காளி, கொசு கடித்து, நான்தான்
தொடையைத் தட்டவேண்டியிருந்தது..
மற்றபடி, மசாலா, மசாலா, கரம் மசாலா..இரட்டைவேடங்களில்,
வித்தியாசம் காட்டியிருக்கிறேன் என்று கொடுமைப்படித்தி எடுத்திருப்பார்..நானும்
ஒன்று ரொம்பநாளாய் கேட்கவேண்டும் என்று நினைத்தேன்..டான்ஸ் என்றால் கையைக் காலை
ஆட்டவேண்டும்..தக்காளி, இந்தப்பையன் ஆடுறான்யா பாரு டான்சு..பயபுள்ளைக்கு,
வயித்தவலி போல என்று நினைத்துக்கொண்டேன்...நல்லா, பெருச்சாளியை முழுங்குன பாம்பு
மாதிரி, நெளியுறான்யா..நெளியுறான்யா..எல்லாம் பெத்த, பெத்த டான்சுங்கோ..ஒரு
அடியில் பத்துபேரை மட்டும் அடித்தது, ஏமாற்றமாக இருந்தது..ஒரு நாற்பது பேரையாவது,
எதிர்ப்பார்த்தேன்..ச்சே.
ரிபல்
படத்தில் ஒரு காட்சி.நாற்பது, ஐம்பது, வில்லன்களிடம்,
பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும், ஹீரோ சொல்வார்..
“உர்ரே..அங்க இருக்கு பார், காபிஷாப்..ரோட்டை க்ராஸ் பண்ணி
அந்த காபிஷாப்புக்கு போவதற்குள், நீங்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள்..இது
சத்தியம்..”
அப்போதே, நான் உஷாரகி
இருக்கவேண்டும்..
தக்காளி..அடிக்கிறான்யா..அடிக்கிறான்யா..பார்க்கிறவனுக்கும், ரெண்டு
குத்துவிழுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..ஹீரோ, பிரபாஸாம்..இவர்களுக்கு
நான் கொடுக்கும், ஒரு டிப்ஸ்..
“அண்ணே..100, 200 பேரை எல்லாம் அடிக்கிறதெல்லாம் ஓல்டு
ஸ்டைலுண்ணே..ஒரு சீன் சொல்லுறேன்..நீங்க நடந்து போறீங்க..உங்க கால் தூசி பட்டு,
ஒரு நாடே அப்படி சரிஞ்சு விழுது..அதை அப்படியே ஒரு கையால தாங்கிக்கிட்டு, இன்னொரு
கையா, பக்கத்துல இருக்குற நாட்டை அப்படியே ஒரு ஊது, ஊதுறீங்க..”
டைரக்டர் லாரன்ஸ் மாஸ்டராம்..லாரன்ஸ் அண்ணே...இப்பதான்,
தமிழ்சினிமால நல்ல படமெல்லாம் வர ஆரம்பிக்குது..ஏதாவது தப்பா முடிவு
எடுத்துறாதீங்கண்ணே..
கேமிராமேன் கங்காதோ ராம்பாபு
சிரஞ்சீவி தம்புடு பவர்ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்
ஆசைக்கு, இந்தப்படம் ஊறுகாய்ங்கோ..டைரக்டர் சப்பாத்தி ஜெகன்னாத், எடுத்தால், ஹிட்
படம் எடுப்பாரம்..இல்லையென்றால், இதுபோல செம பிளாப்பாம்..அன்று என் கிரகம்,
தலையில் உக்கார்ந்து ஆடியதால், இந்தப் படம் பார்க்க நேர்ந்தது.
ஹீரோவை விடுங்கள்..ஹீரோயின் தமன்னா காட்டியிருப்பார்..இது..நடித்திருப்பார்
பாருங்கள்..அட..அட...மூன்றாம் பிறை நடித்தது ஸ்ரீதேவி என்றால், இது
மூதேவி..இது..சாரி..இது இன்னொரு ஸ்ரீதேவி..சிறந்த நடிகைக்கான தேசிய அவார்டு
கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டபோது நான் அடைந்த துயரம் சொல்லி மாளாது..
.
ஆர்யா – 2 மற்றும் ஜீலாயி..
இருக்குறதுலேயே கொஞ்சம் உருப்படியா நடிக்கிறது, இந்த
ஆளுதான்யா என்று நண்பர்கள் சர்டிபிகேட் கொடுத்திருந்தால், நம்பி இந்த படங்களையும்
பார்த்தேன்..பரவாயில்லை..பயபுள்ள ஸ்டைலா தான் நடிக்கிறாப்புல..ஆனா அது
என்ண்ணண்ணே..இந்த தெலுங்கு படங்களில மட்டும், ஹீரோ, அவ்வளவு புத்திசாலியா
இருக்குறாரு...
மற்றபடி, படம் நல்ல ஸ்டைலிசாகத்தான் இருந்தது..ஆனாலு,
ஜிலாயி முதல் காட்சியைப் பார்த்ததும்..ஆஹா..எங்கயோ பார்த்தது மாதிரி இருக்குதே
என்று யோசித்தால்..அட..நம்ம பேட்மேன் ஜோக்கர் பேங்கில் திருடும்
காட்சி..அடபாவிங்களா..டைரக்டரு எல்லாத்துக்கு புடிச்ச, ஒரே டிரிங்க்ஸ் காபி
தானா...
அல்லு அர்ஜீன் அண்ணே..நல்லா நடிக்கிறீங்கண்ணே..எங்க ஊருல
பாலா, பாலாண்ணு ஒரு டைரக்டர் இருக்காரு..அவரு படத்துல நீங்க
ஹூரோவா..ஹல்லோ..ஹல்லோ..எங்க ஓடுறீங்க..ஹல்லோ..
முடிவாக, ஒரு வாரம் நான் பார்த்த தெலுங்கு படங்கள் மூலமாக
எனக்கு தெரியவந்தது...
· * எந்த படமும் சோகமாக முடியவில்லை..அனைத்து
படங்களும், சுபம், சுபம், சுபமே...
·
*எல்லா படங்களும் பயங்கர கலர்புல்லாக
இருக்கிறது..வறுமையில் வாடி கொண்டிருக்கும் ஹீரோ, அடுத்த காட்சியில், கலர்புல்
சட்டை போட்டு கொண்டு, சுவிட்சர்லாந்தில் டூயட் பாடிகொண்டிருக்கிறார்..இதுல என்னடா
ஆச்சர்யம் என்கிறீர்களா..அட ஒரு படத்துல, எல்லாப் பாட்டுலயும் அப்படித்தான்யா
பண்ணுறாய்ங்க..
·
ஹீரோயின், எதற்கு தெலுங்கு படங்கள் என்றால்
ஆளாய் பறக்குறாய்ங்க என்று தெரிய வந்தது..முடிந்தவரை, குடும்பபாங்காய்
வருகிறார்கள்..அதாவது பத்து சதவீதம்..தொண்ணூறு சதவீதம், ஒரு டவுசரும், ஒரு டைட்ஸ்
டிசர்ட்டும் தான்..அதுவும் தூங்கி எழும்போது கூட புல் மேக்கப் போட்டிருப்பது,
ஹாலிவுட் படங்களில் கூட பார்க்காதது
·
*எல்லா ஹீரோக்களும், டான்ஸ் பயங்கரமாக
ஆடுகிறார்கள்..அதுவும், என்னை கலங்கவைத்தது, அந்த பாம்பு டான்ஸ்..அய்யோ..
·
* பிரம்மானந்தம் என்ற ஒரு நடிகர் இல்லாத படமே
இல்லை எனலாம்..அவர் வந்தால் விழுந்து, விழுந்து சிரிக்கிறார்களாம்..எனக்கு
விழுந்தால் கூட சிரிப்பு வரவில்லை..
மஞ்சள் கலர் பேண்டும்,
திக் பச்சைகலர் பேண்டும் அணிந்து கொள்ளவும்.. சோற்றை நன்றாக பிசைந்து, கொஞ்சம் பருப்பு
கலந்து, ஊருகாய் ஜாடி இருந்தால் அதில் உள்ள அனைத்தையும், சோற்றில் கொட்டி, நன்றாக
பிசைந்து ரெடியாக வைத்து கொள்ளவும்..வைத்து
கொண்டீர்களா..ஓக்கே..ஒவ்வொரு சண்டைக்கும், ஒவ்வொரு கவளமாக, வாய்க்குள்
தள்ளவேண்டும்..காரமாகத்தான் இருக்கும்..ஆனால், படம் முடிந்தபின்பு, ஒரு
இனம்புரியாத உணர்வு வரும் பாருங்கள்...அற்புதம்..அதே உணர்வோடு, வேட்டியை லைட்டா
தூக்கி..அண்ணே..அண்ணே..வெயிட்..மீசையை நன்றாக முருக்கிவிட்டு..தொடையை ஓங்கித்
தட்டிக்கொண்டு..”உர்ரே...உர்ரே” என்று இரண்டு முறை சொல்லி பாருங்கள்..வானத்துல
பறக்குற விமானம் அப்படியே பேக் அடிக்கலைன்னா, என் பேர மாத்திக்கிறேண்ணே..என்
பேரை..
10 comments:
//சீதாம்மா வகிட்லோ சிரிமல்லே சீட்டு//
சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு நானும் பார்த்தேன். எப்ப பார்த்தாலும் வெங்கடேஷ்க்கு எதுக்கு கோபம் வருதோ தெரியலை. படம் எனக்கும் பிடிக்கலை.
தல நீங்க ஒரு தெலுங்கு படம் எடுக்க முயற்சி பண்ணுங்களேன்
மரியாத ராமண்ணா நானும் பார்த்தேன் புரியவில்லை ஆனாலும் நன்றாக இருந்தது
மரியாத ராமண்ணா copy of 1923 Bustor Keaton's silent movie "Our Hospitality". You can watch it in You Tube.
Mo
பாஸ் வாங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு தெலுகு படம் பண்ணுவோம்
முத ஸீன் ஹீரோ ஓடி வந்து ஒரு ரயில தூக்கி ஏரோப்ளேன் மேல போடுறார்
ஐய்யய்யோ ஆளை விடுங்கப்பு, இந்தக் கண்றாவிக்குத் தான் நான் தெலுங்கு மாத்தலாடும் தெருப் பக்கம் கூட போறதில்லை.. இவ்வளவு படத்தையும் பார்த்து இன்னும் உயிரோடு இருக்கிறீங்களே உங்களுக்கு ஆயுள் கெட்டிங்கோ ரொம்ப கெட்டிங்கோ .. அடுத்த முறை கன்னடா, வங்காளி, போஜ்பூரி என ஒரு ரவுண்ட் வந்து பஞ்சாபியில் முற்று வைக்கவும். வாழ்த்துக்கள். அவ்வ்வ் !
உங்களுக்கு யார் இந்த படங்களை எல்லாம் பார்க்கச் சொல்லி சொன்னாங்கன்னு தெரியலை,தெலுகுல ரசிகர்களே ரசிக்காத(Rebel-படத்த திட்டாத பிரபாஸ் ரசிக்கனக் கூட நீங்க பார்க்க முடியாது) சில படங்களைப் பார்த்துட்டு மொத்த தெலுகு படங்களையும் இந்த மாதிரி சொல்லக் கூடாதுனு நினைக்கிறேன். உங்களுக்கு திரும்ப தெலுகு படம் பார்க்கணும்னு தோணுச்சுனா Mr.Perfect,Darling,Leader,Aa naluguru,Edurinti Mogudu Pakkinti Pellam,Mithunam-மாதிரியான படங்களைப் பாருங்க...
அப்புறம் இந்த ஹாலிவுட் ஹீரோக்கள் எல்லாம் 2000,3000 Alien-ah கொல்லும் போது நம்ம ஹீரோக்கள் 200,300 பேர அடிக்கலாம்....
//பாஸ் வாங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு தெலுகு படம் பண்ணுவோம்
முத ஸீன் ஹீரோ ஓடி வந்து ஒரு ரயில தூக்கி ஏரோப்ளேன் மேல போடுறார் //
ஏரோப்ளேன் விழுந்ததும் , ஹீரோ மீசைய முறுக்கி தொடைய தட்டுறார் , அந்த அதிர்வுல ரஷியன் ஸ்பேஸ் ஸ்டேஷன் கண்ணாடி , கதவெல்லாம் தூள் தூளாகுது.
மாமோவ், நேத்து "சூது கவ்வும்" பார்த்தேன், ரொம்ப கவ்விருச்சு!. நான் என்னைக்குமே நடிகருக்காக படம் பார்த்தது கிடையாது. எனக்கு பிடித்த தமிழ் படங்கள், முள்ளும் மலரும், பிதாமகன், ராம், கல்யாணராமன், மூன்றாம் பிறை, ஜானி, மண் வாசனை, 16 வயதினிலே, பூவிழி வாசலிலே, M R ராதா அவர்களுக்காக பார்த்த படங்கள் தாயை காத்த தனயன், படித்தால் மட்டும் போதும்மா, பார் மகளே பார், பலே பாண்டியா..இப்படி சில படங்கள்.
அண்மையில் வந்த நடிகர்களில் எனக்குப் பிடித்தவர்கள், விமல், கஞ்சா கருப்பு அப்புறம் அம்லாம்பாழ் (அமலா பால்)
தமிழ்ல விஜய், சிம்பு படங்கள் வருவது எல்லோருக்கும் தெரிந்ததே! இந்த லட்சணத்தில் தெலுங்குப் படங்களைக் கிண்டல் பண்றீங்க!
Post a Comment