அமெரிக்காவில் விஸ்வரூபம் வெளியாகி, இன்று ப்ரீமியர் ஷோ என்று சொன்னவுடனே முடிவெடுத்துவிட்டேன் “கண்டிப்பாக பார்க்கவேண்டும்” என்று. இதில் வேறு, பலசர்ச்சைகள், போராட்டங்கள், தடைகள் என்று சேர்த்து எதிர்பார்ப்பை கூட்டியிருந்தன. பவர்ஸ்டார் படத்தையே பத்துவாட்டி பார்க்கும் நான், நிஜஸ்டார் கமல்ஹாசன் படத்தை விட்டுவிடுவோமா என்ன..
படத்தின் கதை என்ன. எல்லாப் புத்தகங்களிலும் வந்ததுதான். அமெரிக்க நடன ஆசிரியராக வேலைபார்க்கும் கமலுடன் இருக்கவே மனைவி பூஜாகுமாருக்கு பிடிக்கவில்லை. இதில் வேலை பார்க்கும் ஓனரோடு கள்ளத் தொடர்பு வேறு. “என்னோட ஆம்படையா எப்படி தெரியுமா” என்று ஆரம்பித்தவுடன் கமலின் முகம் தெரிய ஆரம்பிக்கிறது. முகம் முழுவதும் பெண்மை கலந்த நளினத்தோடு, நடனம் சொல்லி கொடுக்கும் பாங்கு, கமலுக்கு சொல்லவா வேண்டும். ஜமாய்க்கிறார்..
தன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஓனரை மணப்பதற்கு விவாகரத்து வேண்டுமல்லவா..அதற்காக ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியை வைத்து கமலை பாலோ பண்ண வைக்க, அதிர்ச்சியாக கமல் ஒரு முஸ்லீம் என்று தெரியவருகிறது, படிபடியாக அல்கொய்தாவுக்கே ஆப்கானிஸ்தானில் டிரெய்னிங்க் கொடுத்தவர் என்று வாயில் போட்ட பாப்கானை வெளியே வரவைக்கிறார்கள். ஏன் அமெரிக்காவில் வந்து நடன ஆசிரியராக நடிக்கிறார், ஏன் ஆப்கானில் அல்கொய்தவுக்கு டிரெய்னிங்க் கொடுத்தார், என்று ரத்தம் தெறிக்க, தெறிக்க..நாம் ஏன்..ஏன் என்று கேட்க கேட்க துப்பாக்கி குண்டுகளாலேயே பதில் சொல்லியிருக்கிறார்கள். படம் முடிந்து வெளியே வரும்போது, சட்டையில் ரத்தம் எதுவும் ஒட்டி இருக்கிறதா என்று பார்க்கவேண்டியிருக்கிறது..சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இந்த அளவுக்கு வன்முறையை எப்போதும் பார்த்ததில்லை.. உடல் துண்டாக விழுவது..கழுத்தை அறுப்பது..குண்டு முகத்தில் துளைப்பது..நடுரோட்டில் தூக்குபோடுவது..ஓ..மறந்துவிட்டேன்..கமல் யதார்த்தநாயகன் அல்லவா.. இந்த படத்துக்கு யூ.ஏ சான்றிதழ் என்பது கொஞ்சம் இல்லை…நிறையவே ஓவருங்கோ…
மற்றபடி, இந்த மாதிரியான படத்தை கமலால் மட்டுமே எடுக்கமுடியும். கமலின் ஒரே நோக்கம் ஹாலிவுட் மட்டும் என்பது தெளிவாக தெரிகிறது…அதே போலவே படமும் முழுக்க முழுக்க ஹாலிவுட் தரம். முக்கியமாக, ஆப்கானில், தீவிரவாதிகளுக்கு போர்பயிற்சி கொடுக்கும் காட்சிகள், அமெரிக்க தாக்குதல் என அனைத்தும் ஹாலிவுட் தரம்..காதுக்குள் ஹெலிகாப்டர் பறக்கும் இன்னமும் கேட்கிறது..
குறிப்பாக ஒரு காட்சி..அப்பாவியான கமலை கட்டிவைத்துவிட்டு, அடிஅடியென அடித்துவிட்டு, உயிர்போகும் தருணத்தில், துவம்சம் பண்ணி எல்லோரையும் போட்டுதள்ளும் அந்த சீன். அரங்கு முழக்க கிளாப்ஸ், தீனாவில் கமர்சியல் காம்ப்ளக்சில் அஜீத் துவம்சம் செய்யும் காட்சிக்கு கைதட்டியவன், இப்போதுதான் ஒரு சீனுக்கு ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டினேன்..
ஆப்கானிஸ்தானா..அல்லது செட்டா என்று தெரியவில்லை..செட்டாக இருந்தால் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு ஷொட்டு..முழுக்க, முழுக்க ஒரு மணிநேரம் ஆப்கானில் இருந்த ஒரு உணர்வு.. டைரக்டர் கமல் ஓங்கி ஒன்றரை டன் வெயிட்டாக அடித்திருக்கிறார்..அனைத்தும் க்ளாஸ்..
ஆனால்..
ஆனால்..
ஆனால்..
என்னடா, கமலின் அறிவுஜீவித்தனம் இன்னமும் வெளிப்படவே இல்லையே என்று பார்த்தால், “இதோ இருக்கேன்பா” என்று ஓடிவருகிறார். இவ்வளவு மொன்னையாக அமெரிக்க உளவுத்துறையும்,, போலீசையும் காட்டியதே இல்லை..நிமிட நேரத்தில் எப்.பி.ஐ க்கு கடுக்காய் கொடுத்து தப்பிப்பது..ஒரு நியூக்ளியர் பாம் பேக்டரியவே, நீயுயார்க் நகரத்தில் நடத்துவது..அதை கமல் சொன்னவுடன்தான் தெரிவது..ஸ்வாட் டீம் துப்பாக்கியை பிடித்து நடக்கும் விதம்., எப்.பி.ஐ ஆபிசர்களின் நேர்த்தி என்று…ம்..ஹீம்…கமல் சார்..முதல் பகுதி முழுதும் ஹாலிவுட் தரத்தில் எடுத்துவிட்டு, கடைசி 20 நிமிடங்கள், இப்படி சிரிப்பு மூட்டினால் எப்படி…
நியூக்ளியர்..செரனியம்..பீஜான் ரேடியேசன்.. என்று கமலத்துவம்..அதாவது, “கமல்” “த்துவம்” நிறைந்த வார்த்தைகளை கேட்கும்போது, “இன்னாப்பா..ஒன்னும் பிரிய மாட்டிங்குதுப்பா” என்று சொல்ல நினைக்கும்போது, சஸ்பென்ஸ் நிறைந்த கடைசிகாட்சிகள். சற்று நிமிர்ந்து உக்கார்ந்தால்.. …ஓ..மை..காட்..படம் முடிந்துவிட்டதா..ஆமா..கமல் என்னப்பா சொல்லுறாரு..அப்புறம் அந்த தீவிரவாதிக்கும் கமலுக்கும் சண்டை எப்படி வந்தது..ஆமா..கடைசில எதுக்கு பாராசூட்டில இருந்து குதிக்கிறாங்க..ஆமா..கமலுன்னா யாரு..ஆமா..நான் யாரு…
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி..கமலால் மட்டுமே இப்படி தொழில்நுட்பத்தோடு ஒரு இந்திய படம் எடுக்கமுடியும்..கமல் என்ற பிற்விகலைஞனை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர் கூடவே பயணிக்கவேண்டும். ஆனால் அப்படி பயணிப்பது முடியாத காரியம்..ஏனென்றால் அவர் தொட்ட/தொடவேண்டிய சிகரங்களை அண்ணாந்து பார்க்கவே
ஒரு யுகம் ஆகும்…
சரி…படத்தின் ரிசல்ட்..??
தொழில்நுட்பத்தில்
உலகத்தரம்.. ஆனால்ல்ல்…..பிரியாணி சமைக்கமுடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் சந்தேகம்..