Saturday, 15 December 2012

நீதானே என் பொன்வசந்தம் – இளமை துள்ளல்



விண்ணைத்தாண்டி வருவாயா காசிதியேட்டரில் பார்த்து வெளியே வரும்போது, தன்னை சிம்புகளாகவும், திரிஷாக்களாகவும் நினைத்துக் கொண்டு தலையை கோதிகொண்டு வெளியே வந்த இளைஞர்களை பார்க்கும்போது கடுப்பு கிளம்பி கொண்டு வந்தது. ஏனென்றால் எனக்கு படம்.  பிடிக்கவில்லை.

யோவ்..என்னய்யா படம் இது..ஆரம்பத்திலருந்து, கடைசி வரைக்கும் பேசிக்கிட்டே இருக்காய்ங்க..” ன்னேன்..அதுக்கு ஒரு பயபுள்ள..

மச்சி..இதையெல்லாம் ரசிக்குறதுக்கு லவ் பண்ணிருக்கணும்டா..அட்லீஸ்ட், ஒன்சைட் லவ்வாவது பண்ணிருக்கனும்டாஎன்றான் கடுப்பாக..அப்பதான் எனக்கு புரிந்தது

ஆஹா..நமக்கு வயசாயிருச்சுடா…”

ஆனால்..நீதானே என்பொன் வசந்தம் பார்க்கும்போது, ஏதோ பத்து வயது குறைந்தாற்போல் ஒரு உணர்வு..வி.தா.வருவாயா, கிளப்பிய கடுப்போடுதான் படத்துக்கு சென்றேன்..

புடிக்கலை மாமு…” என்ற பாட்டோடுதான் ஆரம்பித்தது..வழக்கம்போல, தமிழ்திரையுலகின்பீட்டர்கவுதம்மேனன் டச்சோடு, வெள்ளைத்தோல் பணக்கார பையன்களோடுதான் ஆரம்பிக்க., பக்கத்தில் உக்கார்ந்திருந்த் நண்பனிடம்..

இப்ப பேச ஆரம்பிப்பாய்ங்க பாரேன்..” என்றேன்..வழக்கம்போல ஜீவாதான் ஆரம்பித்தார்..கல்லூரி கலைநிகழ்ச்சியில் ஜீவா, சமந்தாவை பார்க்கும்போது…”ஸ்..மச்சான்..செம அழகா இருக்காடா..” என்றபோது…”ஆமாம்ல..” என்றேன்..நண்பன் கடுப்போடு என்னை பார்த்தான்..

ஆனால் உண்மையை சொல்லப்போனால், சமந்தா ரொம்ப, ரொம்ப க்யூட்(கர்ச்சீப் கொடுங்க)..ஆனால் அநாசயமாக நடிப்பில் ஜீவாவை விட பத்து மடங்கு முந்தி செல்கிறார்..ஜீவா சொல்வது போல, அவருடைய ஒவ்வொரு அசைவும் பேசுகிறதுஇளையராஜாவோடு, சமந்தாவின் கண்களும் இசை பேசுகிறது..சிம்ப்ளி கிரேட்

வழக்கம்போல், சிறுசிறு உரசல்களோடும், அணைத்தல்களோடும், கிஸ்களோடும், சந்தானத்தின், கலாய்த்தல்களோடும் செல்லும் திரைக்கதை, இடைவேளை வரைக்கும் செம இண்ட்ரஸ்டிங்க்..ஆனால் அதற்கப்பறம்தான் டைரக்டருக்கு, கதையே லெப்டு பக்கம் விடவா..அல்லது ரைட்டு பக்கம் விடவா என்று பெருத்த சந்தேகம்..சரி..வருவது வரட்டும் ஸ்டைரெயிட்டா விடுவோம் என்று போனதன் விளைவு..”இப்ப பாரேன்..சண்டை போடுவய்ங்க பாரேன்..” என்று தியேட்டரில் பெட்டு கட்டும் அளவுக்கு ஆகிவிட்டது..ஒரு கட்டத்தில், தியேட்டரில் உள்ளவர்கள்..”இப்ப என்ன நடந்துச்சுன்னு, சண்டை போடுறாய்ங்க….இவிங்க..எப்பவுமே இப்படித்தான் பாஸ்..” என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது..

ஆனால் எனக்கென்னமோ, கவுதம்மேனன், ஒரு சார்பாகவே திரைக்கதையை சொன்னார்போல் ஒரு உணர்வு..ஜீவாதான் எல்லா தவறும் செய்கிறார்..ஆனால், சொக்கத்தங்கம்..எங்கள் குல சிங்கம்..புள்ளிமான்..கவரிமான்..சமந்தா(இனிமேல் அப்படித்தேன்..திரிஷா இல்லைன்னா திவ்யா) எப்பவும் கெஞ்சுவது போலவும்..ஜீவா ரொம்ப பிகு பண்ணுவதுபோலவும் காண்பித்து திரைக்கதை அமைத்தது, எனக்கென்னமோ நியாயமாக தெரியவில்லை..சாரி கவுதம்மேனன் சார்..திஸ் இஸ் ஒன் சைட் கேம்..

வழக்கம்போல சந்தானம் படத்துக்கு பிளஸ்..ஆனால் சிலநேரங்களில் அவர் அடிக்கும் இரட்டை அர்த்த ஜோக்குகள், இங்கேயும் தொடர்கிறது….படத்தின் பாடல்களை கேட்டபோது, “இளையராஜா ஏமாற்றிவிட்டார்என்று எழுதியிருந்தேன்..ஆனால் காட்சிபடுத்தலோடு பார்க்கும்போது..அருமைய்யா..குறிப்பாகசாய்ந்து..சாய்ந்து,, என்னோடு வா வாவானம் வந்து கீழிறங்கி..”. ஆனால் அவர் ஏரியா பிண்ணனி இசையில்ம்..ஹீம்..ராஜாவை எங்கேயும் காணவில்லை..

இடைவேளை வரைக்கும் இளமை துள்ளலோடு அமைத்த கவுதமமேனன்..கொஞ்சம் இடைவேளைக்கு அப்புறமும் கவனித்திருக்கலாம்

முடிவாக..படம் மொக்கை..பிடிக்கலை என்று சொல்லுபவர்களுக்கு என்னுடைய கமெண்ட்

அதுக்கெல்லாம் லவ் பண்ணியிருக்கணும் சார்..”

2 comments:

Prasannaakumar MP said...

படம் மொக்கை.ஜீவா படம் முழுக்க மலச்சிக்கல் வந்தவர் போல் உள்ளார்.

Unknown said...

படம் விமர்சனம் இருக்கட்டும் உங்கள ரொம்ப நல பதிவுலகுல காணலையே எங்க வோய் போயிருந்தீர்

Post a Comment