பொதுவாக இந்தியர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் என்ற கருத்துண்டு. அதுவும் தென்னிந்தியர்கள், குறிப்பாக நம்மவர்களை கேட்கவே வேண்டாம்..”என்னது..பாட்டி சுட்ட வடையை காக்கா தூக்கிட்டு போயிடுச்சா” என்று ரெண்டு நாளா தூங்காமல் இருக்கும் ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்படுவோம். அதை வைத்தே கல்லா கட்டும், ரியாலிட்டி ஷோக்களுக்கும், டி.ஆர்களுக்கும், விசுக்களுக்கும், விக்ரமன்களும் இங்கு அதிகம்.
பொதுவாக நான் சீக்கிரம் உணர்ச்சிவசப்படமாட்டேன். மண்டை உடைந்து ரத்தம் ஒழுகிகொண்டு நின்றாலும், “அடி ஒன்னும் அவ்வளவு பலம் இல்லையே..ஒரு அனாஜினோ, நோவாஜின்னோ போட்டா சரியாக போகுது என்று விவேக் ரேஞ்சுக்கு பேசக்கூடிய ஆள்.
என் வூட்டுக்காரி எனக்கு அப்படியே எதிர்..”என்னங்க..திருமதி செல்வத்துல செல்வம் என்னம்மா அர்ச்சனாவை கொடுமைப்படுத்துறாங்க..”ன்னு கண்ணிர்விட்டால், அன்னைக்கு மதியானத்துக்கு பழைய சோறும் வெங்காயம்தான்..இல்லாட்டி எக்ஸ்பையர் ஆன, பிரட் ஆம்லெட்..
நாங்கள் இருவரும் சேர்ந்து பார்க்கும், ஒரே சீரியல்..இது..ஷோ, நீயா நானா தான்…சீரியலுக்கு அடுத்து மிகவும் அழவைப்பதால் என் மனைவிக்கு பிடித்தும், அதே காரணத்தாலேயே, எனக்கு பிடிக்காமலும் போன ஒரு விவாத நிகழ்ச்சி..என்னுடைய பதிவுகளில், நிறைய நான் அந்த நிகழ்ச்சியைப் பற்றி கிண்டல் பண்ணினாலும், விவாத நிகழ்ச்சிகளில் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்ச்சி “நீயா நானா” என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. கருத்துக்களை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் தமிழ்த்தொலைக்காட்சி சானல்களில் போட்டியாக ஒரு தளமும் இல்லாதது இந்தநிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்.
“அந்த சிவப்பு சட்டைக்காரனை அப்படியே போகஸ் பண்ணுப்பா..நல்லா அழுவுறான்”ற மாதிரி இருந்தாலும், கோபிநாத்(அல்லது இயக்குநர் ஆண்டனி) நிகழ்ச்சியை நடத்தி செல்லும் பாங்கு அனைவரையும் கட்டிபோட்டு விடுகிறது. விவாதத்தில் தோற்கடிக்கவே முடியாதவர் என்று ஞானியை மட்டுமே நினைத்திருந்த எனக்கு கோபிநாத்தையும் சேர்த்து கொள்ள ஆசை.
நேற்று சாதரணாமாக ஆரம்பித்த நீயா நானாவின் தலைப்பு “உறவினர்களோடு கூடி மகிழ்வது, தேவையா, தேவை இல்லாததா..”. இதில் என்ன சுவராஸ்யம் இருக்கபோகிறது என்று நினைத்த எனக்கும், என் மனைவிக்கும், நிகழ்ச்சி முடியும் தருவாயில் விழிநிறைய கண்ணீர். ஒரு நண்பி, “எனக்கு அப்பா இல்ல சார்..அவரை பார்க்குறதுக்கு என் அப்பா மாதிரியே இருக்கு சார்” என்றதும், என் மனைவி அழுதே விட்டாள்..கல்லாகத்தான் இருப்பேன் என்று இருந்த என்னை, மற்ற எல்லாரும் சேர்ந்து அழவைத்துவிட்டனர்..
பொதுவாக நானும் என் மனைவியும், தலைப்புகளில், இருவேறு பக்கங்களில் இருப்போம்.. “உறவினர்களோடு கூடிமகிழவேண்டும்” என்பதில் நானும், “இருக்குற வேலையில அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குது” என்று வி.டி.வி கணேஷ் மாதிரி என் மனைவியும் நீயா நானாவோடு சேர்ந்து விவாதம் செய்தோம்..
இந்த தலைப்புக்கு சரியான சீப் கெஸ்டை கூப்பிடவில்லை என்பது என் கருத்து. இயக்குநர் கருபழனியப்பனையும், மனுஷ்யபுத்திரனையும் கூப்பிட்டுருந்தால் பின்னியெடுத்திருப்பார்கள். யதார்த்தமாக பேசுகிறேன் என்று வி.டி.வி கணேஷ் சொன்ன கருத்துகளில் ஒன்றும் பலமில்லை. அதே நேரத்தில் ஓரளவுக்கு நன்றாக பேசிய, சுந்தரபாண்டியன் இயக்குநரும், முக்கியமான கருத்துக்களை முன்வைக்கவில்லை.
ஆனால் அதையெல்லாம் போக்கும் வகையில் உறவுகள் பக்கத்தில் இருந்த ராஜன் என்ற நண்பர் பேசிய விதம் அருமை..உறவினர்கள் சேர்ந்த கூட்டம், ஒரு இயக்கம்போல..அதில்தான் சாதிமுறையை அழிக்காமல் பின்பற்றுகிறார்கள்..பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒழுங்குமுறையை சரியாக பின்பற்றுகிறார்கள் என்றபோது, அதிர்ந்து போய் “ஆஹா..இன்னைக்கு நல்லா வாங்கி கட்டிக்கபோறார்யா” என்று நினைத்தபோது, அடுத்த அடுத்த அவர் சொல்லிய கருத்துக்கள் க்ளீன் சிக்சர்கள்..
“உறவினர்களிடம் பேசி புரியவைக்கமுடியாம நீயெல்லாம் எதுக்கு காதல் பண்ணுற” என்ற கருத்து நியாயமாக இருந்தாலும், அதுவரைக்கும் உசுரோட இருப்போமா என்ற பயமும் வந்தது. ஆனாலும், தெளிவாகவும், நிதானமாகவும் அவர் எடுத்து வைத்த கருத்துக்கள், அவர்தான் சீப்கெஸ்டாக் இருந்திருக்கவேண்டும் என்று, மனம் சொல்லியது..
இறுதியாக, உறவினர்கள் வேண்டும் என்ற ஏரியாவில் இருந்து, தாங்கள் கொண்டுவந்திருந்த, பரிசுப்பொருட்களை, நெகிழ்வாக, மாற்றுத் தரப்பினரிடம் கொடுத்தபோது, கலங்காத நானும் கலங்க ஆரம்பித்தேன்..”பாத்தியா..இதுக்குதான் சொந்தக்காரய்ங்க வேணும்கிறது..ஒன்னுன்னா, பத்து பேரு வந்து நிப்பாய்ங்க தெரிஞ்சுக்க” ன்னு மனைவிக்கு பெருமையுடன் சொல்ல, அவளும் அதே கலக்கத்தில் “ஆமாங்க..கண்டிப்பாக சொந்தக்காரய்ங்க வேணும்க..அடுத்த தடவை ஊருக்கு போகும்போது, ரெண்டு மாச சம்பளத்தை இப்பவே எடுத்து வைச்சிருங்கன்னு” அழுதுகொண்டே சொன்னபோது…தசவாதர கமல் போல..”சொந்தக்காரய்ங்க அம்புட்டு பேரும் வேணும்னு சொல்லலே..நெருங்குன சொந்தக்காரங்க இருந்தா நல்லா இருக்குமுன்னு சொன்னேன்” என்றேன், பர்சை தொட்டுப்பார்த்துக்கொண்டே…
15 comments:
சொந்தங்கள் தொந்தரவு என்றாலும் துக்க நேரத்தில் அவர்கள் இருப்பது மிக பெரிய பலமாய் தோன்றும்.ஃப்ரெண்ட்ஸ் சந்தோஷத்தில் மட்டுமே பெரும்பாலும் பங்கு பெறுவார்கள்.
சொந்த பந்தங்கள் தேவைதான், ஆனால் புலம் பெயரும் வாழ்க்கையில் சொந்தங்கள் புவியியல் ரீதியாக பிரிந்துவிடுகின்றன, அந்த இடத்தை நண்பர்கள் தான் நிரப்புகின்றார்கள்.
உறவுகள் சிறக்க சேர்ந்தே வாழ்வதே வாழ்க்கை... தனிமையாக இருந்து "அனுபவப்பட்டவனுக்கு" இதைப் பற்று நன்றாகவே தெரியும்...
REALLY FANTASTIC.MANY MANY THANKS TO MR.RAJAN,THE REAL CHIEF GUEST.I HOPE THAT,MANY HUMAN FAMILIES WILL REJOIN AFTER SEEING THIS PROGRAM 100 % GUARANTEE.HATS OFF TO MR.RAJAN ONCE AGAIN THE REAL CREATIVE MAN.
very good... I really liked it..... Your points are same like what we thought...
Kumar
."திருமதி செல்வத்துல செல்வம் என்னம்மா அர்ச்சனாவை கொடுமைப்படுத்துறாங்க..”ன்னு கண்ணிர்விட்டால், அன்னைக்கு மதியானத்துக்கு பழைய சோறும் வெங்காயம்தான்" semma Galaatta sir Neenga .
தல... நீங்க வெளிநாட்டுல தானே இருக்கீங்க... எப்படி உடனுக்குடன் பாக்குறீங்க...
நேற்றைய நிகழ்ச்சியை நானும் முழுவதும் பார்த்தேன்... இரண்டு குழந்தைகளை வைத்திருந்த அந்த தாய்குலத்தையும் அவருடைய கணவனையும் நீங்கள் இருவரென அவதானித்துக்கொள்கிறேன்...
கரு.பழநியப்பனை எந்தப்பக்கம் கூப்பிடலாம் என்று நினைக்கிறீர்கள்... அவர் உண்மையில் உறவுகளுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர்... அவர் இயக்கிய படங்கள் அதைத்தான் பறைசாற்றும்... ஆனால் மந்திரபுன்னகை சில காட்சிகள் மட்டும் வேறு கோணத்தில் இருக்கும்... மனுஷ்யபுத்திரன் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் பேசுவார்...
விடிவி கணேஷுக்கு சபை நாகரிகம் தெரியவில்லை... ஒரு கட்டத்தில் என் பெரியப்பா வீட்டில் இடி விழுந்தா எனக்கென்ன என்றெல்லாம் பேசினார்... நல்லவேளையாக சேனல்காரர்கள் அதை ஹைலைட் செய்யவில்லை...
நிகழ்ச்சியில் பேசிய ராஜன் ஒரு பதிவர் என்று நினைக்கிறேன்... களப்பிரன் என்ற பெயரில் எழுதுவதாக சொன்னார்... இங்கே ஐந்துக்கும் மேற்பட்டோர் களப்பிரன் என்ற பெயரில் எழுதுவதால் அவர் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை...
சொந்தபந்தங்கள் வேண்டாம் என்று பேசும் பெண்கள் - குறிப்பாக அந்த மக்களை பெற்ற மகராசி, அப்புறம் உங்க ஹவுஸ்பாஸ் மாதிரி ஆட்கள் அதை செலக்டிவாக மட்டுமே விரும்புகிறார்கள்... அதாவது உங்க வீட்டு சொந்தபந்தமெல்லாம் வேண்டாம்... எங்கம்மா வீட்டு சொந்தமெல்லாம் வேண்டும் என்று...!
நன்றி அமுதா, இக்பால் செல்வன்
நன்றி குமார், அனானிமஸ் நண்பர்
நன்றி விமல்
நன்றி தன்பாலன்
நன்றி பிரபாகரன்..இப்போதுதான், அடுத்த நிமிஷத்துல இண்டெர்நெட்டுல ஏத்திர்றாய்ங்களே.அதான்..கரு.பழனியப்பனை உறவுகள் பக்கத்தில் விட்டுருக்கணும்..பின்னி எடுத்துருப்பாரு..நீங்கள் சொன்னமாதிரி மனுஷ்யபுத்திரன் எந்த பக்கமும் விவாதம் பண்ணுவதில் சிறந்தவர்...
naan vaangi senra porulkal nuts(including peenuts)oats, wheat rava,chocolates,fruits and milk pocket.as a participant.
கடசில தசாவதாரம் கமல் சொன்னத சொல்லி குழப்பிடீங்க... :)
M.Selvam
தசாவதாரம் தான் சூப்பர்!
[பொதுவாக நான் சீக்கிரம் உணர்ச்சிவசப்படமாட்டேன். மண்டை உடைந்து ரத்தம் ஒழுகிகொண்டு நின்றாலும், “அடி ஒன்னும் அவ்வளவு பலம் இல்லையே..ஒரு அனாஜினோ, நோவாஜின்னோ போட்டா சரியாக போகுது என்று விவேக் ரேஞ்சுக்கு பேசக்கூடிய ஆள்.]
அண்ணே அவ்ளவு நல்லவற நீங்க அவ்வ்வ்வ்
அருமை
வணக்கம்,
விஜய் டிவி உரிமையாளர் அவர்களே கடந்த வாரம் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் காதல் திருமணத்தை பற்றி விவாதம் நடந்தது. அது என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த மாதிரி இருந்ததது. எனது வாழ்கையிலும் ஒருவன் வந்தான். அவனை எனேக்கென்று இறைவன் படைத்தவன் போல் இருந்தான்.அவன் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் அவனும் வேலை பார்த்தான். யாரிடமும் கண்டிராத பாசம் அன்பு மற்றும் வீட்டில் உள்ளவர் மற்றும் உறவினர்,தோழிகள் அனைவரும் செலுத்தும் அன்பு அனைத்தையும் அவன் ஒருவனிடம் கண்டேன். இருந்தும் அவனிடம் நான் கூறவில்லை.அவனே என்னிடம் என்னை விரும்புவதாக கூறினான். நான் சிறிது காலம் தயங்கினேன். நாளாக நாளாக என்னிடம் மிகுந்த அன்பு காட்டினான்.அதை கண்டு என் மனதை நான் பறிகொடுத்தேன். அப்படியே இரண்டு காலங்கள் ஓடின.எனது வீட்டில் திருமண ஏற்பாடு நடந்தது.அதை அவரிடம் கூறினேன்.நமது திருமணத்தை பற்றி உங்கள் வீட்டில் கூறுங்கள் என்று கூறினேன். அவர் தயங்கினார். அவர் நபர்களிடம் கூறினோம்.அவர்கள் எங்களுக்கு உதவுவதாக கூறினார். பிறகு அவர்களும் தயங்கினார்கள் காரணம் என்ன என்று கேட்கும்பொது தான் தெரிந்தது நான் கீழ் ஜாதி பெண் என்றும், அவர் உயர்ந்த ஜாதி ஆண் என்றும்.நாங்கள் காதல் செய்யும் பொது அவர் என்ன ஜாதி என்று எனக்கு தெரியாது.நான் என்ன ஜாதி என்று அவர்க்கு தெரியும்.அவர் வீட்டில் ஒதுகொள்ளமாட்டர்கள் என்றும் அவர்க்கு தெரியும்.இருந்தும் என் வாழ்க்கையை ஒரு பகடு காய் போல் பயன்படுத்திவிட்டார்.வேலையிலிருந்து நீங்கியும் செய்துவிட்டார். இது போதாது என்று எங்க வீட்டில் உள்ளவங்களிடம் மற்றும் எனக்கு பார்த்த மாப்பிளையிடம் நண்பர்கள்,அலுவலக வேலை பார்ப்பவர்கள் அனைவரிடமும் நாங்கள் இருவரும் விரும்புகிறோம் என்று முதல் நாள் கூறிவிட்டு,மறுநாள் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை.அவர் சந்தோசமாக இருக்கிறார்.என்னால் நிம்மிதியாக கூட இருக்க முடியவில்லை.என் கதை கேட்டு எனக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.ஜாதி பார்த்து என்னை ஒதுக்கிய அவரை திருமணம் செய்து கொள்ள உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் நான் இத அனுப்புகிறேன். அவரிடம் எனது நிலைமையை புரிய வைக்க 9715957416 வெங்கடேசன் மனப்பறவை குடவாசல்.
வணக்கம் சகோதரி....
ஜாதி என்று ஒதிங்கிவிட்டவரோடா மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நடந்தெல்லாம் நல்லதற்கே என்று விட்டுவிட்டு வேறு ஒரு நல்ல மாப்பிள்ளையை வீட்டாரிடம் சொல்லி தேர்ந்தெடுத்து.. இனிமையான வாழ்கையை துவங்குங்கள்.
Post a Comment