Tuesday, 18 September 2012

தி ஹிட்லிஸ்ட் – விமர்சனம்


சும்மா, ஹாலிவுட் தரம், ஹாலிவுட் தரம்னு புலம்புறாய்ங்க பீட்டர் பார்ட்டிங்க என்று கலாய்ப்பவர்களுக்கு, இந்தப் படவிமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன். இந்தப் படம் பார்த்த பின்பு, ஏன் ஹாலிவுட் தரம் என்று சொல்லுகிறார்கள் என்று புரிய வரும்.

ஒரு கம்பெனியில் பிராஜெக்ட் செய்யும் ஆலனுக்கு அன்று, புரோமஷன் இறுதி செய்யப்படும் நாள். ஆலன் யாரென்று கேட்டால், என்ன சொல்லுவது..நம்ம பாணியில் சொல்லவேண்டுமென்றால் , ரோட்டில் நடந்து செல்லும்போது, ஏதாவது கார் வந்து சேற்றை வாரி இறைத்து சென்றால், “அட..கார் வைச்சிருக்கவிய்ங்க அப்படித்தான்பா போவாய்ங்க..நம்மதான் ஒதுங்கி போகணும்பா..” என்று சொல்லும் ஒரு ஏமாளி..மதுரை பாணியில் சொல்லணும்னாபச்ச மண்ணுய்யா..”..ம்..இன்னும் விளக்கமா சொல்லணும்னா..அட நம்மகோவாலு

அப்படிபட்ட ஆலன், ஆபிசுக்கு வந்து அமர்ந்தவுடன் ஒரு போன் கால்..

சார்..யார் பேசுறது..”
என்னப்பா..நேத்து வாங்குனது ஞாபகமிருக்குல்ல..”
சார்..என்ன சார்..நான் கொடுத்துர்றேன் சார்..இன்னைக்கு ஆபிசில் கண்டிப்பா எனக்கு புரோமோசன் கிடைச்சுரும்..கண்டிப்பா குடுத்துர்றேன்.”
என் கையில வைச்சுக்காதப்பா..பணம் கண்டிப்பா வந்துருணும்..என்னைப் பத்தி தெரியுமுல்ல..”
சார்..அதெல்லாம் கண்டிப்பா கொடுத்துர்றேன்

போனை வைத்தவன் வீங்கிய கன்னத்தை தொட்டுப் பார்த்து கொள்கிறான்..அதற்கேற்றாற் போல, பக்கத்தில் சீட்டில், அமர்ந்திருந்த நண்பனும்..”என்ன சார் நைட்டு தூக்கம் இல்ல போல..கண்ணெல்லாம் வீங்கியிருக்குஎன்று நமட்டு சிரிப்பு சிரிக்க ஆலன் நொந்து கொள்கிறான்..அவனுக்கு என்ன தெரியும்கடன் கொடுத்தவன் நேத்து விட்ட குத்து என்று..

நம்பிக்கையாக, கான்பிரஸ் ஹாலுக்கு செல்கிறான் ஆலன். மேலதிகாரி வந்து, எல்லாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறார்

டியர் பிரண்ட்ஸ்..நீங்கள் கொடுத்த அனைத்து பிராஜெக்டுகளையும் பார்த்து, ஒருவரை புரொமமோசனுக்கு செலக்ட் செய்துள்ளேன்..அந்த ஒருவர்..”

ஆவலாக பார்க்கிறான் மார்க்..

இதோ, இவர்தான்..” என்று இன்னொரு நபரை காண்பிக்க..அவ்வளவுதான் ஆலனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது..அந்த நபர் வேறுயாருமல்ல..இவனுடைய நண்பன்தான்..அதுவும், இவனுடைய பிராஜெக்டை காப்பி செய்து, சிலமாற்றங்களுடன் சமர்பித்தவன்..

ஆலனுக்கு உலகமே வெறுத்து போய்கிறான்..”போங்கடா..நீங்களும்..உங்க..” அப்படின்னு ஒரு கெட்ட வார்த்தை சொல்லிவிட்டு, இதற்குமேல் அங்கு இறுக்க பிடிக்காமல் வீட்டுக்கு கிளம்பி செல்கிறான்..சரி..மனைவிக்கு ஒரு போன் செய்துவிடுவோம்., என்று நினைத்துவிட்டு போன் செய்ய மனைவி போனை எடுக்காமல் இருக்கவே, “சரி..எப்படியும் வீட்டுக்குத்தானே போகிறோம்என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுகிறான்..வெளியே, தன் குடும்ப நண்பனின் பி.எம்.டபிள்யூ கார் நிற்க..குழப்பத்துடன் வீட்டுக்கதவை திறக்க..அஙகு, தன் குடும்ப நண்பனுடன்..மனைவி..அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை..மனைவி சொல்லுகிறாள்..

நீ வந்து இதைப் பார்க்கணும்தான், இவரை இருக்கச் சொன்னேன்..என்னய்யா குடும்பம் நடத்துற..பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்டுல இருக்கிறேன்னு ஞாபகம் இருக்கா..இப்ப தெரியுதா,,,”

என்று சொல்ல.எப்படி இருக்கும் ஆலனுக்கு..அப்படியே சிலையாகிப் போகிறான்..இதற்கு மேல் நடக்ககூட திராணி இல்லாதவனாய், தடுமாறி ஒரு பாருக்கு செல்கிறான்..

கன்னாபின்னாவென்று குடிக்கிறான்(குடிவெறியர்கள் மன்னிக்கவும்)..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..நொந்து கொண்டு, பக்கத்தில் இருப்பவனைப் பார்க்கிறேன்..இனிமேல் தான் கதை ஆரம்பம்..பக்கத்தில் இருப்பவனிடம்..”பாருங்க சார்..இந்த உலகத்தைஒரு மனுசன் நல்லபடியா இருந்தா போதும்..முன்னேறவே விட மாட்டாய்ங்க..ஆப்படிச்சுருவாய்ங்க..”

என்று குடிபோதையில் புலம்ப..பக்கத்தில் இருப்ப்பவன் அவனுக்கு நண்பனாகிறான்..அவன் பெயர் “ஜோனஸ்..”



ஜோனஸ் இப்போது ஆலனிடம்..

“ஆலன்..இப்ப நீ எனக்கு திக் பிரண்டு..உனக்கு என்ன செய்யணும்னு சொல்லு நான் தீர்த்துவைக்கிறேன்…” எனச் சொல்ல..

தன் வாழ்க்கையைப் பற்றி அவனிடம் புலம்ப ஆரம்பிக்க..எல்லாவற்றையும், பொறுமையாக கேட்கிறான் ஜோனஸ்….கடைசியாக ஆலன்..

“ஜோனஸ்…கேக்கவே மறந்துட்டேன்..ஆமா..நீ என்ன வேலை செய்யுற..”

“ம்..அதுவா..ஒன்னும் பெரிசா இல்ல..காசு வாங்கிட்டு கொலை பண்ணுறேன்..அவ்வளவுதான்…”

இப்போது ஆலன் விழுந்து, விழுந்து சிரிக்கிறான்..

“அட..ஜோனஸ்..உனக்கு எப்போதுமே தமாசுதானா..சும்மா இருப்ப்ப..”

“ஆலன் ..நம்புப்பா..இப்ப கூட டிவியில பார்த்தியே ஒரு நியூஸ்..அந்தக் கொலைய பண்ணுனது நான் தான்..” என

ஆலனுக்கு சிரிப்பு அடக்கமுடியவில்லை..

“அட..சும்மா இருப்பா..காமெடி பண்ணிக்கிட்டு..ஜோன்ஸ்..”

“ஹே..நம்புப்பா…ம்..உன்னை எப்படி நம்ப வைக்கிறது..ஒன்னு பண்ணு..இந்தா..இந்த நாப்கின் பேப்பர்..இதுல, உனக்கு புடிக்காத டாப் 5 பேரு லிஸ்ட் சொல்லு..நான் ஒவ்வொருத்தனா போட்டுத்தள்ளுறேன்..”

“ஹா..ஹ..ஜோன்ஸ்..நீ செம காமெடிப்பா..இருந்தாலும்..நீ ஜோக்குக்கு கேக்குறதுனால எழுதித்தர்றேன்..ம்…ஐஞ்சாவது..என்னுடைய மேலதிகாரி..எனக்கு புரோமோசன் தராத நாயி..நாலாவது, திருட்டுத்தனமா, என்னுடைய, பிராஜெட்டை திருடி..அவன் பிராஜெக்குட்டுன்னு சொல்லி, என் புரோமசனை தட்டிப்பறிச்ச நண்பன்..இல்ல துரோகி..மூன்றாவது, என் முகத்துல குத்துவிட்ட, எனக்கு கடன் கொடுத்த, அந்த புரோக்கர்..இரண்டாவது…கூடவே இருந்து, என் பொண்டாட்டி கூட கள்ளத்தொடர்பு வைச்சிருந்த குடும்ப துரோகி……அப்புறம் முதலாவது..என்னை நம்பவைச்சு கழுத்தறுத்த, என் பொண்டாட்டி..”

அப்படின்னு சொல்லிவிட்டு, ஒன்னுக்கடிக்க போகிறான்..வந்து பார்க்கும்போது, ஜோன்சை, டேபிளில் காணவில்லை..சரி..குடிகாரந்தானே..எங்கிட்டாவது விழுந்து கிடப்பான்னு சொல்லிட்டு, ஹோட்டலுக்கு போய் தூங்கப் போகிறான்..மறுநாள் அவசரம், அவசர்மாக, ஆபிஸிக்கு செல்ல..ஆபிஸில் ஒரே கூட்டம்..எல்லாரும் பரபரப்பாக குழுகுழுவாக, பேசிக்கொண்டிருக்க..ஒன்றும் புரியாதவனாய், பக்கதில் இருப்பவனிடம் கேட்கிறான்..

“என்னய்யா ஆச்சு..”

“அதுவா..நம்ம மேலதிகாரியை எவனோ ஒருத்தம் சுட்டு கொன்னுட்டானம்பா..இப்ப கூட போலிஸ் வந்து எல்லாத்தையும், விசாரிச்சுட்டு போனாய்ங்க..”

இதற்கு மேல் நடப்பதெல்லாம்..தக்காளி..விறு..விறுதான்..படம் முழுவதும், ஒரு பிரேம் கூட வேஸ்ட் செய்யாமல், சீட்டு நுனியில் உக்கார்ந்து பார்க்கவிடுகிறார் டைரக்டர்..டெண்சல் வாஷிங்க்டனுக்கு அப்புறம், இவ்வளவு ஸ்டைலிசான ஒரு ஹீரோ, எனக்கு மிகவும் பிடித்த “க்யூபா கூடிங்க்” தான்..மனுசன் பிச்சு எடுக்குறான்யா..வெறித்தனமாக, ஒவ்வொருத்தனையும் போட்டுத்தள்ளுவதாகட்டும், கடைசியில் ஆளவந்தான் கணக்காய்,போலிஸ் ஸ்டேசனிலேயே நுழைந்து அதகளம் பண்ணுவதாகட்டு, மனுசன், கிடைத்த பாலில் எல்லாம் அநாசயாமாக, சிக்ஸ் எடுக்கிறார்..இந்தப் படத்தை மட்டும், தமிழில் ரீமேக் செய்தால், அஜீத் தான், என்னுடய சாய்ஸ்..அப்படி ஒரு ஸ்டைல்..

இரண்டு மணிநேரம், வித்தியாசமான அனுபவத்தை தரும் இந்தப்படத்தை, வாய்ப்பு கிடைத்தாம் மிஸ் பண்ணிவிடாதிர்கள்..

7 comments:

கோவை நேரம் said...

பார்க்க ஆவலை தூண்டுகிறது...

Anonymous said...

I have seen this film. It is a junk film. It does not meet the "holywood" status. Don't watch. You'll be disappointed.
- Ravi

Robert said...

அப்புடியா பார்த்திடுவோம்...

Robert said...

ஐயையோ இந்த "ரவி அண்ணன்" என்னமோ சொல்றாங்களே!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செம விமர்சனம் அண்ணே. நான் இங்கிலீஷ் பட விமர்சனம் எல்லாம் படிப்பதில்லை. அழகா எழுதிருக்கீங்க

Babu said...

kittathatta muran padam maathiri.

Anonymous said...

அதானே, முரண் படத்த இங்கிருந்து தான் சுட்டுர்பாங்களோ? படத்துல இருந்த சுவாரஸ்யம்(!!) உங்க பதிவுல அத விட அதிகமாகவே இருக்குதோன்னு தோணுது பாஸ்...

Post a Comment