Wednesday, 15 August 2012

ஆண்ட்ரியா – அனிருத் லிப் லாக்கும், சுதந்திர தினமும்



இன்று எனக்குள் எழுந்த மனப்போராட்டத்தை, விவரிக்க வார்த்தையே இல்லைண்ணே. 12 ஆம் வகுப்பு முடிந்து, கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுப்பதா, இயற்பியல் எடுப்பதா, என்று எழுந்த மனப்போராட்டம் கூட அவ்வளவு பெரிதாக தோணலைண்ணே....போராட்டம்னா போராட்டம், அப்படி ஒரு போராட்டம்.

அப்புறம் என்னண்ணே..காலங்காத்தால எழுந்து, ஒரு கற்பழிப்பு செய்தி, ஒரு கொலை, கொள்ளைச் செய்தியைப் படிச்சோமா, குஜாலா இருந்தோமாங்கிற என்னை, ஒரு லிப்லாக் போட்டாவைப் போட்டு..இந்தச் சின்னப்பயபுள்ளங்க..வயிறு எறிய வைச்சிட்டாண்ணே..அதுவும் 19 வயசான இந்த அனிருத் பய, 30 வயசு ஆண்டியான..இது..நடிகையான, அந்த ஆண்ட்ரியா புள்ளைய..போங்கண்ணே..எப்படி மனசு கொதிக்குது தெரியுமாண்ணே..

பச்சை மண்ணுன்னே..இந்த அனிருத்து பயபுள்ளையத்தான் சொல்லுறேன்..பார்க்கவே, பால்வாடியில படிக்குற மாதிரி இருக்காப்புல..ஆனா, எங்க கொண்டு போய் வாயை வச்சிருக்கார் பாருங்கண்ணே..கொதிக்குதுண்ணே..நல்லாவே இருக்கா மாட்டாய்ங்கண்ணே..இருங்கண்ணே..கடுப்புல இன்னொரு வாட்டி போட்டாவை ஒருவாட்டி பார்த்துக்குறேன்..

ஆங்க்..மேட்டருக்கு வர்றேன்..எனக்கு என்ன மனக்குழப்பம்னா, ஆகஸ்ட் 15 ஆம் நாளைக்கு, எந்தப்பதிவை எழுதுறது..சுதந்திரதினத்தன்னைக்கு, நாட்டுக்கு நல்லது சொல்லுறமாதிரிஒன்றுபடுவோம் நண்பர்களே..சுதந்திர இந்தியாவில் பிறந்ததற்காக பெருமைப்படுவோம்ன்னு புல்லடிக்கிற..இது..புல்லரிக்கிற மாதிரி, கருத்து சொல்லுற மாதிரி பதிவு எழுதுறதா..இல்லாட்டி, “அனிருத்து அடிச்சான் பாருய்யா லிப்லாக்குனு, சுதந்திர இந்தியாவுக்கே தேவையான மாதிரி லிப்லாக்கு பதிவு எழுதுறதான்னு அப்படி ஒரு குழப்பம்..

சரி..நம்மதான் எதையும் செய்யுறதுக்கு, கஷ்டம், நஷ்டம் எண்ணிப் பார்த்துட்டுதான் செய்வோமா..இதுலயும், கஷ்டம் நஷ்டம் பார்ப்போமான்னு யோசிச்சு பார்த்தேன். சுதந்திர இந்தியா பத்தி பதிவு போடுறதுல என்ன கஷ்டம்னா..வார்த்தையை தேடிபிடிச்சு, தேடிபிடிச்சு எழுதுறதுக்குள்ள தாவு தீர்ந்துடும். உதாரணமா..”ஒன்றுபட்ட இந்தியாவை, உயர்த்தி நிறுத்த, இளைஞர்களால்தான் முடியும்..ஒன்றுபடுவோம் தோழர்களே..”, கேட்கவே நாராசமா இல்லை..எழுத எம்புட்டு கஷ்டம் தெரியுமா..தேடிப்பிடிச்சு எழுதணும்..ஆனா, ஆண்டிரியா லிப்லாக்கைப் பத்தி எழுதணும்னா, எம்புட்டு சுலபம்..”19 வயதான, அனிருத்து கொலைவெறியாக ஆண்டிரியாவை நெருங்கி..” எழுதவே, அம்புட்டு குஜாலா இல்லை..இருங்க, ஒருவாட்டி போட்டாவைப் பார்த்துக்குறேன்

சரி..சுதந்திர இந்தியாவை முன்னேற்ற இளைஞர்களின் பங்குன்னு எழுதினா, ஒரு பயபுள்ள திரும்பி பார்க்க மாட்டாய்ங்க..மொத்தம் 10 பேர் படிப்பாய்ங்க..அதில இரண்டு பேருசரியான பதிவு நண்பரே..அப்படியே என் பதிவுபக்கம் வந்து பார்க்கவும்..” ம்பாய்ங்க..இல்லாட்டிஉங்கள் பதிவுகளை எங்களுடைய திரட்டியில் இணைத்து பயன்பெறுங்கள்ன்னு ஒரு கொலைவெறி கமெண்டு வரும். ஆனா, ஆண்டிரியா லிப்லாக்கை பத்தி எழுதினா, அடிக்கும் பாருங்க, பம்பர் பிரைஸ்..தமிழமணத்துல தங்கத்தாம்பாளம் தாங்காத குறைதான்..பதிவு முண்ணனியில நின்னு, “சுதந்திர இந்தியாங்குற பதிவு மேல வண்டி, வண்டியா மண்ண அள்ளிப்போடும்..

சரி நம்ம எழுதி இந்தியா வல்லரசா போகப்போகுதாண்ணா பார்த்தீங்கன்னா, அதுவும் கிடையாது..ஏன்னா ஏற்கனவே வல்லரசாத்தாண்ணே இருக்கு..ஆமாண்ணே..நம்புங்க..எந்த நாட்டிலயாவது, காலங்காத்தால ஒயின்ஷாப்புல தண்ணியப் போட்டுட்டுஅமெரிக்க ஜனாதிபதிக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்னுசலம்ப முடியுமா..நம்ம நாடு வல்லரசா இருக்குறதுன்னாலத்தனே, இதெல்லாம் முடியுது..

எந்த நாட்டிலயாவது, 500 ரூபாயை வாங்கிட்ட்டு, காசு கொடுக்குறவனுக்கு ஓட்டுப்போடுற சுதந்திரம் இருக்கா..வல்லரசா இருக்குறதுனாலத்தானே, இதெல்லாம் முடியுது..

எந்த நாட்டிலயாவது, பஸ்ஸுல, எவ்வளவு பெரிய ஓட்டை இருந்தாலும், பள்ளிக்குழந்தைகளை ஏத்திட்டு போகுற சுதந்திரம் கொடுத்திருக்காய்ங்க..அப்படியே குழந்தைகள் இறந்தாலும், ஒருவாரம் ஜெயிலுக்கு போயிட்டு, திரும்பவும் வந்து, எல்.கே.ஜிக்கு ஒரு லட்சம் வாங்குற சுதந்திரம் கொடுத்திருக்காய்ங்களா..வல்லரசா இருக்குறதனாலத்தானே இதெல்லாம் முடியுது

எந்த நாட்டிலயாவது, டிராபிக் சிக்னலை மதிக்காமல் போனால் கூட 100 ரூபாய் கரெக்ட் பண்ணி எஸ்கேப் ஆகும் சுதந்திரம் குடிமக்களுக்கு கொடுத்திருக்கிறதா..நாம் வல்லரச இருக்கப்போகத்தானே, இதெல்லாம் முடியுது

எந்த நாட்டிலயாவது, மும்பை கலவரம் போல, அப்பாவி ஜனங்களை நாயை சுடுவதுபோல கொல்லுவதற்கும்..குஜராத் போல மனிதர்களை தேடித்தேடி வெறித்தனமாக வேட்டையாடுவதற்கும், சுதந்திரம் கொடுத்திருக்கிறதா..எந்த நாடு கொடுத்திருக்கிறது..நம்ம நாடு வல்லரசாக இருக்கப்போய்த்தானே இதெல்லாம் முடியுது..

எந்த நாடு தன்னுடைய மீனவர்களையும் கொல்லுப்படுவதற்கும், தன் நாட்டைச் சார்ந்த அப்பாவி உயிர்களை, கொத்து, கொத்தாய் குண்டுகள் போட்டு அழிப்பதற்கு, ஆயுத உதவியும் செய்திருக்கிறதுநம்நாடு வல்லரசாக இருக்கப்போய்த்தானே, பக்கத்து நாட்டிற்கு, நம் நாட்டு ஆட்களை கொல்லுவதற்கு ஆயுதப்பயிற்சியும், ஆயுதங்களும் கொடுக்க முடிகிறது.

அதனால், இனிமேல காலங்காத்தல பல்லுவிளக்காம, கம்யூட்டர் முன்னாடி உக்கார்ந்து வக்கனையாநம்நாடு வல்லரசாக இளைஞர்களே கனவு காண்போம்ன்னு யாராவது எழுதுங்க..இருக்குடி..ஏற்கனவே வல்லரசா இருக்குற நாட்டைப் போயி எதுக்குய்யா திரும்பவும் வல்லரசா ஆக்குறதுக்கு கனவு காணனும்..ஒரு நாட்டை எத்தனை தடவைதான்யா வல்லசராக்குறது..

இப்படி ஏற்கனவே பலகோணங்களில் முன்னேறி இருக்குற நம்நாட்டை முன்னேத்துறதுக்கு எதுவும் இல்லாததுனால, நம்ம பதிவு எழுதி, ஒன்னத்தையும் புடுங்கப் போறதில்லை. நம்ம சுதந்திர இந்தியாவப் பத்தி எழுதி, இளைஞர் சக்தி, உடனே தூக்கத்தை விட்டு எழுந்து வந்து, இந்தியாவை நட்டக்குத்தலா, எதுவும் நிக்கவைக்கப்போறதில்லை..அப்புறம் எதுக்கு, 10 பேர் படிக்குறதுக்குசுதந்திர இந்தியாவேஅப்படின்னு மண்ணாங்கட்டி பதிவுங்குறேன்..

அதனால, மக்களேஇந்த அனிருத்து பையன், ஆண்ட்ரியாவை லிப்லாக் பண்ணி..அவுங்க ரெண்டு பேருக்குள்ள லவ்வு வந்து, அப்புறம்...

13 comments:

ANaND said...

உங்க பீலிங் புரியுது அண்ணே

மலரின் நினைவுகள் said...
This comment has been removed by the author.
மலரின் நினைவுகள் said...

வல்லரசு... நொள்ளரசு பத்தியெல்லாம் பீல் பண்ணத்தீங்க ராசா...
ஆனாலும் பாருங்க, இந்த ஆண்ட்ரியா புள்ளைகிட்ட என்னமோ வலுவா இருக்குது...
கமல் கொஞ்ச நாள் ஓட்டிப் பாத்தாரு (அவரு யாரைத்தான் விட்டாரு!!)
அப்புறமா செல்வராகவன் கூட்டிப் பாத்தாரு (பொறவு, "காத்திருந்தால் பெண் கனிவதில்லைன்னு" விட்டுட்டாரு போல..)
நடுவுல சித்தப்பு சரத்து கூட ரெண்டுமூணு பார்ட்டிக்குப் போனதா கேள்வி (சித்தி சவட்டியிருப்பாங்க இல்ல..!!)
இப்போ என்னடான்னா, இன்னும் முழுசாக் கூட வளராத ஞ்சுப் பையன், அட! பிஞ்சுப் பையன்னு சொல்ல வந்தேன்னுங்க..., சும்மா வெச்சு என்னம்மா பின்னுது பாருங்க!! (நமக்கு ஒரு வத்தல் தொத்தல் கிட்ட கூட இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கலியேன்ற ஆதங்கம் தான்!!)
நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்காப் பண்ணனும்னு சூப்பர் ஸ்டார் தன் குடும்ப ஜூனியர்ஸ்க்கு சொல்லித் தரல போலிருக்கு...!!!

Robert said...

30 வயசு ஆண்டியான,,// வன்மையா கண்டிக்கிறோம் பாஸ்...
இத எழுதி போஸ்ட் பண்றதுக்குள்ள அந்த போட்டோவை ஒரு 30-40 தடவை பார்த்துருப்பிங்க போல!!!

காப்பிகாரன் said...

ராசா அருமையா அனிருத்ள ஆரபிச்சு அப்டியே போட்டு நம்ம வல்லரசு நாட்ட பத்தி அருமையா பின்னிடிங்க சூப்பர் ஆனா அந்த அனிருத் ஆண்ட்ரியா படத்த நீ மட்டும் பார்த்து ரசிச்ச போதுமா நாங்க பார்க்க வேணாமா போடுங்க அப்பு

Samy said...

Aniruth sinna payal, avana iduiya.Vallarasu Arumaii. Samy

அவிய்ங்க ராசா said...

நன்றி ஆனந்த்..
மலரின் நினைவுகள்..பின்னிட்டீங்க போங்க..
ராபர்ட்..அப்படியா..இருங்க இன்னொரு தடவை பார்த்துட்டு சொல்லுறேன்..
காப்பிகாரன்..அதுதான், இண்டெர்நெட்டை தொறந்தா அந்தப்படம் தானே வருது
நன்றி சாமி(இட்லில பீரு ஊத்தி சாப்பிட மாட்டீங்கல்ல..))

Prem S said...

சரி..சுதந்திர இந்தியாவை முன்னேற்ற இளைஞர்களின் பங்குன்னு எழுதினா, ஒரு பயபுள்ள திரும்பி பார்க்க மாட்டாய்ங்க..மொத்தம் 10 பேர் படிப்பாய்ங்க..அதில இரண்டு பேரு “சரியான பதிவு நண்பரே..அப்படியே என் பதிவுபக்கம் வந்து பார்க்கவும்..” ம்பாய்ங்க..இல்லாட்டி “உங்கள் பதிவுகளை எங்களுடைய திரட்டியில் இணைத்து பயன்பெறுங்கள்” ன்னு ஒரு கொலைவெறி கமெண்டு வரும். //

ஆஹா இதே தான் இதே தான் உண்மை இது தான்

Manimaran said...

ஞாயமான கோபங்கள்..

KSB said...

Why blood...... Same blood.....

பட்டிகாட்டான் Jey said...

இப்ப உம்மோட கோவம் என்ன பால்வாடிப் பையன் பச் பண்ணிட்டானுதானே....பாவம் அந்த அம்மனி ”லாக் பன்றது எப்படி-னு பால்வாடிக்கு ட்ரைனிங்க் குடுத்திருக்கு...இதுக்குப் போய் ரொம்பவும் பொங்கிட்டயே ராசா....

பராசக்தி said...

எப்பவோ நடந்து முடிந்து- முறிந்து போன விடயம் தாங்க முடியாமல் இப்படி பழி வாங்கிட்டாங்களே!

அவிய்ங்க ராசா said...

நன்றி மணிமாறன், பட்டிக்காட்டான், பராசக்தி..பிரேம்..கே.எஸ்.பி

Post a Comment