சமீபத்தில் “மதுபானக் கடை” என்ற திரைப்படத்தை, பார்க்க நேர்ந்தது.2 மணிநேரம் ஒரு டாஸ்மார்க் கடையில் உக்கார்ந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது, அந்தப்படம். படத்தைப் பற்றி சிலாகித்துபேச கதை, திரைக்கதை என்ற வஸ்தே இல்லாதபடியால், படத்தைப் பற்றி விமர்சனம் பண்ண விரும்பவில்லை.
ஆனால், இந்தப்படம் பல எண்ணங்களை கிளறிவிட்டதை மறக்கமுடியாது. சொன்னால் நம்புவீர்களா என்று தெரியவில்லை, எனக்கு குடிப்பழக்கம் கிடையாது(கொடுமைய்யா..இதையே தயங்கி, தயங்கிதான் சொல்லவேண்டியிருக்கிறது..ஊருக்குள்ள, குடிக்கலைன்னா, ஒரு பயலும் மதிக்க மாட்டாய்ங்களோங்கிற பயம் வேற..சிம்பு பாணியில் சொல்லணுமென்றால் “என்ன உலகம்யா இது..”)
சென்னையில் மும்முரமாக வேலை தேடிக்கொண்டிருந்த சமயம், நண்பர்கள் டாஸ்மார்க் அழைத்து சென்றியிருந்தார்கள்.வழக்கம்போல், சைட் டிஸ் சுவை நாக்கில் ஏற(வஞ்சகமில்லாம வளர்ந்த உடம்புண்ணே இது), அவர்கள் கூப்பிட்டவுடனே சென்றுவிட்டேன். ஆனால், குடிப்பவர்கள் கூட்டத்தில், குடிக்காதனவாய் இருப்பதும், கேரளாவுக்கு அடிமாடாய் இருப்பதும் ஒன்றுதான். சைட் டிஸ்சுக்கு ஆசைப்பட்டு, என்போல, மரியாதை இழந்த வரலாறு பல உண்டு, இந்த திருநாட்டில்.
ஆனாலும், ஒயின்ஷாப்பில் கிடைக்கும், சைட்டிஸ் சுவையின் காரம் சாரம் எதிலும் இருப்பதில்லை. அப்பளம், சிப்ஸ், ஊறுகாய், ஆம்லேட், வேர்க்கடலை, என்று அயிட்டம் பிண்ணி எடுப்பார்கள். கேட்க, கேட்க கொடுத்துக்கொண்டே இருப்பது, ஒயின்ஷாப்புகளின் கொடைத்தனம்.. ஆனால், அதை நம்பிச் சென்று பலபேரின் போதைகளுக்கு ஊறுகாய் ஆக மாறிய சரித்திரம் பல உண்டு. சைட்டிஷ்ஷூம் வேண்டும், மரியாதையும் கெடக்கூடாது என்று நினைக்கிறீர்களா, இதோ, உங்களுக்காக சைட்டிஷ்..இது..சாரி..டிப்ஸ்..
- உங்களுக்கு மானம், ரோஷம் ஒன்று இருப்பதாக நீங்கள் கருதினால்..சாரி பிரதர்..ஒயின்ஷாப்புக்கு வர முன்னமே, செருப்போடு, அதை கழட்டி தூக்கி எறிந்துவிடவேண்டும். ஏனென்றால். ஒயின்ஷாப்புகளில் தூக்கி எறியப்படும், பிளாஸ்டிக் கிளாஸ்சுகள் போல, உங்கள் மானமும் கசக்கி எறியப்படும்…இதற்கெல்லாம் கலங்ககூடாது..சைட்டிஷ் முக்கியம்
- ஆரம்பிக்கும் முன்பு “மச்சான் நீதாண்டா எங்க பெஸ்ட் பிரண்டு” என்று சொல்லுபவனிடம், மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு ரெண்டு அடி தள்ளி உக்கார்வது உத்தமம். ஏனென்றால், மற்றவர்களெல்லாம் சாதரணமாக திட்டினால், அவன்தான் மானாவரியாக திட்டுவான்.குடும்பம் பிள்ளை குட்டி என்று எல்லாவற்றையும் ரோட்டுக்கு இழுத்துவிட்டு, கடைசியாக அதே டயலாக்கில்தான் முடிப்பான்..”மச்சான்..நீதாண்டா, எங்க பெஸ்ட் பிரண்டு..”
- ஒரு ரவுண்டு ஆரம்பிக்கும்போது. கூட்டத்தில் இருப்பவன் மெதுவாக உரண்டை இழுப்பான்..அவனெல்லாம், கிட்னிதிருடன் மாதிரி..கொஞ்சம் அசந்தால், ஆளை அமுக்கி, அயிட்டத்தை திருடிவிடுவான்..உதாரணமாக, உன் நண்பன், இன்னொரு நண்பனை திட்டுவான், நம்ம பயபுள்ள இப்படித்தான் ஆரம்பிப்பான்..”இவ்வளவு பேசுறியே மச்சி.தைரியமாக ஆம்பிளையா இருந்தா, இவனை திட்டுபார்ப்போம்”
- கண்டிப்பாக ஒரு பஞ்சு கொண்டு செல்வது நலம். ஏனென்றால் தமிழில் அவ்வளவு கெட்டவார்த்தையும்,மாற்றி, மற்றி ஒரு மணிநேரம், மூச்சு திணற, திண்ற பேசுவார்கள். அதையெல்லாம், இந்தக்காதில் வாங்கி , அந்தக்காதில் விட்டுவிடுவேண்டும்..மாறி, தெரியாமல் கேட்டுவிட்டால், வீட்டில் போய் தூக்கி தொங்குவது உறுதி
- ஆரம்பம் முதல், கடைசி வரை, உங்கள் கண் சைட்டிஷ் மேல்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், குடிகாரர்கள், மெதுவாகத்தான் சைட்டிஷ் சாப்பிடுவார்கள். அதற்குள், நீங்கள் முடித்துவிடுவது நலம்
- பொணத்துக்கு போடும் செண்டை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது நலம்..உங்களுடன் இருப்பதில், எது மிக பழையதோ, அதை அணிந்து செல்வது நன்மை. எப்படியும், தேடிப்பிடித்து, உங்கள் சட்டையில்தான் வாந்தி எடுப்பார்கள். அப்ப அடிக்கும் பாருங்க ஒரு நாத்தம்..அதை மோந்து பார்த்துட்டு, உயிர்வாழ்ந்ததா, ஒரு சரித்திரமே இல்லை
- அன்று காலையிலிருந்தே, மௌன விரதம் இருப்பது, உங்கள் மனதுக்கு நல்லது..அல்லது, அடுத்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடி, கே.ஆர்.விஜயா என்று சொன்னால், சந்தேகமில்லாமல் ஆமோதிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு சங்குதான்
- ஏதாவது, பி.ஹெச்.டி செய்வதாக திட்டம் இருந்தால், “கெட்டவார்த்தைகள்” என்ற பி.ஹெச்.டி செய்வது, உத்தமம். ஏனென்றால், தமிழுக்கு, அமுது என்ற பெயர் மட்டுமில்லை, விஸ்கி, பிராந்தி என்று பெயர் இருக்கிறது என்று அப்போதுதான் தெரியவரும்..அள்ள, அள்ள குறையாத கெட்ட வார்த்தைகள், அருவிபோல கொட்டும்..அதை, பத்து நிமிடங்கள், கவனித்தாலே போதும், நீங்கள் பி.ஹெச்.டி வாங்கிவிடலாம்
- கிளம்புவதற்கு பத்து நிமிடம் முன்னே, ஜகா வாங்கிகொள்ளவது, உசுருககு உத்தரவாதம். இல்லையென்றால், பயலுகளை வீட்டில் டிராப் செய்யபோகும் போது, நண்பனுடைய அம்மா “என்னப்பா..இப்படி கூப்பிட்டு போய் குடிக்கவைச்சுட்டியே” என்ற குற்றச்சாட்டு கேட்டு, நீங்களும், குடிக்க நேரிடும்..
அதனால், தயவுசெய்து, என்னை மாதிரி, சைட்டிஸ்சுக்காக செல்லும் கனவான்களே..மேலே கூறிய அனைத்தையும் மறக்காமல் பாலோ செய்தால், 2014 லே, இந்தியா வல்லரசாகி, நாமெல்லாம், சிறந்த “குடிமகன்” களாக ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, என்பது திண்ணம்.
7 comments:
anne ROFL :)
annae can I share in my g+?
ரமேஷ்..நன்றி..ஷேர் பண்ணலாம்..இதற்கெல்லாம் கேட்க வேண்டியதில்லை..))
thanks
ராசாண்ணே சவுக்கியமா ? :) குட்டிப்பையன் எப்படியிருக்கான் ? :)
தற்போதைய தானைத் தமிழ் நெஞ்சங்களுக்கு அவசியமான ”டிப்ஸ்”.
ungalai mathri irrunthu ippa naanga ellam periya kudimagana maridomla
Post a Comment