Wednesday, 3 February 2010

சாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்

“சாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்..”

“அண்ணே..அப்படியே சாப்பிடுறதுக்கு ஒரு புரோட்டா சொல்லியிருங்கண்ணே….”

“ஹாய்..விஜி குட்டி..எப்படி இருக்க…”

“என்ன தம்பி...ஒரு வாரமா சாப்பிடுறதுக்கு ஆளைக் காணோம்..”

“ஆபிஸ் வேலை விசயமா இருந்தேன்..அதுதான்..எப்படி இருக்கிங்க..”

“என்னடா செல்லம்..ஒரு பத்து தடவையாவது கால் பண்ணியிருப்பேன் எடுக்கவே மாட்டிங்குற..வாட்ஸ் கோயிங்ங் ஆன்..வாட்ஸ் ஹேப்பண்ட் யா..”

“ஏதோ இருக்கேன் தம்பி..வாழ்க்கை ஓடுது..மெட்ராஸ் வாழ்க்கை நரகம்தான்பா..”

“ஏண்ணே..இவ்வளவு விரக்தியா பேசுறீங்க..எல்லாம் சரியாகிடும்ணே..”

“விஜி..இப்ப மட்டும் நீ போனை கட் பண்ணினே..நான் செத்தே போயிடுவேன்..என் வாழ்க்கையே நீதான்பா..நீ இல்லாம நான் எப்படிடா..ஜஸ்ட் திங்க் டா..”

“தம்பி..நம்பளே நொம்பலத்துல இருக்கோம்..பக்கத்துல போன் பேசுறவன் பகுமானத்த பாருங்க..ஒரு காபியை வாங்கிக்கிட்டு ஒன்றரை மணிநேரமா பேசிக்கிட்டு இருக்கான்..ஒரு பத்து பொண்ணுங்க கூடயாவது போன் பேசியிருப்பான் தம்பி..இதுக எல்லாம் எப்ப தம்பி உருப்படும்..”

“விடுங்கண்ணே..கடையின்னா பத்து பேரு வரதான் செய்வாங்க..சரிண்ணே..உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொன்னீங்களே..ஏதாவது வரன் வந்திச்சா..”

“நாளைக்கு காபிடே வந்துரு..நான் எல்லாத்தையும் எக்ஸ்பிளையின் பண்றே..ஓகேயாடா “

“இருங்க தம்பி..புரோட்டா ரெடி ஆகிடுச்சு..எடுத்துட்டு வர்றேன்..”

“அண்ணே..சட்னி வேண்டாம்..குருமா மட்டும் போதும்..”

“பிளிஸ்டா..என்னை நம்பு..லவ்வுன்னா நம்பிக்கை வேணும்டா..நாளைக்கு உனக்கு பிடிச்ச வெஜ் பர்கரோட வெயிட் பண்றேன்..நீ வரலைன்னா..”

“இந்தாங்க தம்பி நல்லா வைச்சி சாப்பிடுங்க..பொண்ணுக்கு எத்தனையோ வரன் பார்த்தேன் தம்பி..எதுவும் சரிப்பட்டு வரல..எல்லாரும் ஒரு லட்சத்துக்கு மேலே வரதட்சணை கேக்குறாயிங்க தம்பி..நான் மாசம் வாங்குற நாலாயிரம் சம்பளத்தை வைச்சு எப்படி தம்பி….”

“ஏண்ணே..ஓனர் கிட்ட ஏதாவது கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே..”

“டியர்..உன் கோபம் நியாயமானதுதான்.ஐ அண்டர்ஸ்டாண்ட்..பட் என் லவ் ரியல்டா..யோசிச்சு பாரு..உனக்காக நான் எவ்வளவு தியாகம் பண்ணியிருப்பேன்..என்னோட மொபைல் பில் மட்டும் மாசம் எட்டாயிரம்..எல்லாம் உன்னோட, உன்னோட மட்டும் பேசுனதுக்குதான்..நீ என்னடான்னா..”

"எங்க தம்பி..அடிமை மாதிரி வேலை வாங்குறாரு..100 ரூபா அதிகம் கேட்டா..நீ இல்லைன்னா ஆயிரம் பேரு இருக்காங்கன்னு நன்றியே இல்லாம சொல்றாரு..”

“கஷ்டம்தாண்ணே..”

“நீ சொல்லுடா இப்ப..உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாத வேலை எனக்கு தேவையே இல்லைடா..இப்பவே சொல்லு, நான் வேலையை ரிசைன் பண்ணிடுறேன்…”

“ஆமாம் தம்பி..வயசுக்கு வந்த பொண்ணை ரொம்ப நாள் வீட்டுல வைச்சிருக்குறது வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு.காலம் ரொம்ப கெட்டுப் போயிடுச்சுல்ல தம்பி..”

“எல்லாரும் அப்படி இல்லைண்ணே..”

“சரிடா விஜி..நான் அன்னைக்கு அப்படி பிஹேவ் பண்ணியிருக்கு கூடாதுதான்..ஆனா அன்னைக்கு என் மனசு எங்கிட்ட இல்லைப்பா..ஒரு மாதிரி இருந்துச்சு..அதுதான் கிஸ் பண்ண டிரை பண்ணினேன்..ஆனா அதுல லவ்தாண்டா இருந்துச்சு..லஸ்ட் இல்லைடா..பிளீஸ் என்னை நம்பு..”

“வேற எதுவும் வேணுமா தம்பி….தப்பா எடுத்துக்காத தம்பி..ஒரு 100 ரூபா கடன் கிடைக்குமா..சம்பளம் வந்ததும் குடுத்துறேன்..”

“இதுல என்னண்ணே இருக்கு வாங்கிக்குங்க..”

“செல்லம்..எவ்வளவு நேரம்தான் உனக்கு சமாதானம் சொல்லுறது..நான் போன வாரம் வாங்கி குடுத்த கிப்டை இன்னொரு முறை திறந்து பாரு..அதுல என்னோட லவ் தெரியும்..அந்த கிப்ட் எவ்வளவு தெரியுமா..பத்தாயிரம்..”

“ரொம்ப நன்றி தம்பி..”

“சரிண்ணே..லேட் ஆகிடுச்சு..நான் வர்றேன்..”

“விஜி..விஜி..கட் பண்ணிட்டியா..விஜி..ஹல்லோ..ஹல்லோ..இருக்கியா..கேட்குதா..ஹலோ..ஹலோ..விஜி..ஷிட்....”

“அடிக்கடி வாங்க தம்பி..உங்க கிட்ட பேசுறப்ப கொஞ்சம் கஷ்டம் குறையுது தம்பி..”

“கண்டிப்பாண்ணே..”

“ஹலோ..ஹலோ..ஹலோ..பிரீத்தி டியர்..வருண் ஹியர்..ஹவ் ஆர் யூ..என்னடா பிசியா..உன்னை பார்த்தே நாலு நாள் ஆகிடுச்சு..ஐ மிஸ் யூ டா…”

“சரிங்க தம்பி..பில்லை கவுண்டரில குடுத்துருங்க..”

“சரி..”

“யோவ்..தம்பிக்கு எவ்வளவு பில்லு..”

“43 ரூபா அண்ணாச்சி..”

“ஓனர் அண்ணே..இந்த போஸ்டரை உங்க கடையில ஒட்டிக்கிரவா..”

“டேய்..என் கடை என்ன சத்திரமா..அதெல்லாம் ஒட்ட கூடாது..ஓடிப்போயிடு..”

“ஓனர் அண்ணே..எப்போதும் உங்க கடையில ஒரு போஸ்டர் ஒட்டுவோம்ல..இன்னைக்கு மட்டும் ஏன் திட்டுறீங்க..”

“முடியாதுன்னா முடியாதுடா..அப்படி என்ன புடுங்கி போஸ்டர்..”

“அதுதாண்ணே..போன வருசம் முத்துக்குமாருன்னு செத்துப் போனாருல்ல..அவருக்கு ஏதோ நினைவஞ்சலியாம்..”

16 comments:

Unknown said...

நல்ல பதிவு...

taaru said...

கதை இரு வேறு விசயங்கள அருமையா விளக்குது அண்ணே..நல்ல flow...வாழ்த்துக்கள்..

பாலாஜி சங்கர் said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி 


தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

Vijayashankar said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இன்டர்லீவிங் என்று சொல்லுவார்கள், இதை.

எந்த ஊரிலே ரெண்டு பரோட்டா 43 ருபாய்?

vasu balaji said...

அருமைங்க ராஜா:(

Anonymous said...

ராசு, முடிவு எதிர்பார்க்காத விதமா நல்லா இருக்கு
நிறைய எழுதுங்கள்..:))

//எந்த ஊரிலே ரெண்டு பரோட்டா 43 ருபாய்?//

எங்க ஊர் அன்னபூர்ணாவில், ஆர்யாசில், ராயப்பாஸில் எல்லாம் செம ரேட்டுங்க :)

☀நான் ஆதவன்☀ said...

நல்லா இருக்கு இராசா. மூன்று வெவ்வேறு உலகத்தில் இருக்கும் மனிதர்கள் சந்தித்த மைய புள்ளி!

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
பேநா மூடி said...
நல்ல பதிவு...
2 February 2010 10:24 PM
/////////////////////////
நன்றி பேனா மூடி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
uary 2010 10:24 PM
taaru said...
கதை இரு வேறு விசயங்கள அருமையா விளக்குது அண்ணே..நல்ல flow...வாழ்த்துக்கள்..
3 February 2010 12:10 AM
////////////////////
நன்றி அய்யனாரே..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
ry 2010 12:10 AM
பாலாஜி said...
நீங்கள் சொல்வது மிகவும் சரி


தங்கள் கருத்து நன்றாக உள்ளது
3 February 2010 3:21 AM
////////////////////
நன்றி பாலாஜி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
y 2010 3:21 AM
Vijayashankar said...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இன்டர்லீவிங் என்று சொல்லுவார்கள், இதை.

எந்த ஊரிலே ரெண்டு பரோட்டா 43 ருபாய்?
3 February 2010 3:47 AM
////////////////////////
நன்றி விஜய்..நான் சாப்பிட்ட ஒரு புரோட்டாவுடன், பார்சல் 2 புரோட்டாவையும் சேர்த்தால், 3 புரோட்டா..மற்றும் சென்னையில கொள்ளைக் காசுண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////
uary 2010 3:47 AM
வானம்பாடிகள் said...
அருமைங்க ராஜா:(
3 February 2010 5:46 AM
//////////////////////
நன்றி வானம்பாடிகள்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
மயில் said...
ராசு, முடிவு எதிர்பார்க்காத விதமா நல்லா இருக்கு
நிறைய எழுதுங்கள்..:))

//எந்த ஊரிலே ரெண்டு பரோட்டா 43 ருபாய்?//

எங்க ஊர் அன்னபூர்ணாவில், ஆர்யாசில், ராயப்பாஸில் எல்லாம் செம ரேட்டுங்க :)
3 February 2010 8:03 AM
☀நான் ஆதவன்☀ said...
நல்லா இருக்கு இராசா. மூன்று வெவ்வேறு உலகத்தில் இருக்கும் மனிதர்கள் சந்தித்த மைய புள்ளி!
3 February 2010 8:16 AM
/////////////////
நன்றி மயில், நான் ஆதவன்.

Anonymous said...

ரொம்ப நல்லா வந்து இருக்கு; வாழ்த்துக்கள்!!!

-
வெங்கடேஷ்

Anonymous said...

Veena pona Muthukumara vidave matteengala pa? Avan sethu ponathula urpadiya ethavathu kariyam nadanthutha? Avan kariyam thaan nandanthathu!

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு ராஜா :-)

வாழ்கை மற்றும் வயது எத்தனை மாறுதல்கள்.

Post a Comment