“அங்கிள்..சாரி அங்கிள்..பிரண்ட் கொடுத்தான்..தெரியாம வாங்கிட்டேன்..அப்பாகிட்ட சொல்லிடாதீங்க அங்கிள்..” குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது..
“ஹே..ஒன்னும் சொல்ல மாட்டேன்..ஆமா..இதெல்லாம் ஏன் படிக்கிற..”
“பசங்கதான் சொன்னாங்க அங்கிள்..இதெல்லாம் படிச்சாதான் பெரிய பையன் ஆக முடியுமாம்..இல்லையின்னா, அவியிங்க கூட்டத்தில் சேர்த்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாயிங்க அங்கிள்..”
பதட்டமாக சொன்னான். குற்ற உணர்ச்சியில் இருந்த அவனுக்கு விளக்கி சொல்லி விட்டு, என் பைக்கை எடுத்துக் கொண்டு ஒரு பொருள் வாங்குவதற்கு பாண்டி பஜார் வந்தேன். பாண்டி பஜார் சென்றிருப்பிர்கள் என நினைக்கிறேன். வெளிநாட்டுப் பொருட்களின் கண்காட்சி போல இருக்கும். கொஞ்சம் உஷார் ஆக இல்லையென்றால் மாலை போட்டு ஒரு ரூபாயை நெத்தியில் ஒட்டிவிடுவார்கள்..பைக்கை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பிக்கும்போது ஒரு ஆள் அருகில் வந்தார்..
“இன்னா சார்..ஏதாவது பொருள் வேண்டுமா..”
“இல்லைண்ணா..நான் பார்த்துக்குறேன்..”
கூடவே நடந்தார்..
“சார்..சி.டி, டிவிடி வேணுமா..”
“இல்லைண்ணே..”
“சார்..டிரிபிள் எக்ஸ் இருக்கு..பார்க்குறீங்களா..”
“…”
“சார்..சூப்பரா இருக்கும் சார்..தமிழ், இங்கிலிஸ் ரெண்டுமே இருக்கு..”
நான் எதுவும் பதில் சொல்லவில்லை..கொஞ்சதூரம் நடந்து வந்தேன்..ஒரு கடையில் டீ சாப்பிடுவதற்காக நின்றவன் அந்தப் பத்திரிக்கையை கவனித்தேன்..
“செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் கோர்ட் வருகை..மகளிர் போராட்டம்..” “திவாரி செக்ஸ் வீடியோ..ஆந்திர கொந்தளிப்பு..”
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம்மை சுற்றி நடப்பது எல்லாமே செக்ஸ் மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது..இங்கு செக்ஸ் என்பது, ஒரு குற்றம் அல்லது விவாதிக்க அஞ்சப்படும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது..செக்ஸ் என்பது மறைத்து மறைத்து பார்க்கப்படும் மற்றும் பேசப்படும் அல்லது வெட்கப்படவைக்கும் உணர்வுகளின் தொகுப்பாக உள்ளது..ஒரு பலான படம் ஓடும் தியேட்டரில் டிக்கெட் வாங்க கியூவில் நிற்பவர்களின் முகத்தைப் பார்த்தால் அந்த வித்தியாசம் தெரியும். அனைவரின் முகத்திலும் ஒரு சங்கடம். அல்லது வெட்கத்துடன் கூடிய ஒரு பதபதைப்பு.
ஏன் இப்படி என்று யோசித்துப் பார்த்தால், நாம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கும் கலாசாரம் என்ற போர்வையே என்று சொல்லலாம்..நம்முடைய கலாசாரத்தில் செக்ஸ் என்பது நாலு சுவற்றுக்குள் மூடி வைக்கப்படவேண்டிய ஒரு விஷயம் என்ற கருத்து வலுக்கட்டாயமாக ஒவ்வொருவர் மனதிலும் ஆணித்தரமாக பதியப்பட்டுள்ளாது. ஆனால் செக்ஸ் என்பது ஒரு உணர்வு..பசி, தூக்கம், அழுகை, சிரிப்பு என்று எந்த உணர்வு வந்தாலும் அதை வெளிப்படுத்த நினைக்கும் இந்த சமூகம் அதற்கு சமமான செக்ஸ் என்ற உணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்த கூடாத அளவிற்கு விலங்கு போட்டுள்ளாது.
யோசித்துப் பாருங்கள்..பசி வந்தால் என்ன கிடைக்கிறதோ அவசரமாக சாப்பிட ஆரம்பிக்கிறோம். நகைச்சுவை காட்சிகளைப் பார்க்கும்போது விழுந்து விழுந்து சிரிக்கிறோம். துக்கம் வந்தால் வாய்விட்டு கதறி அழுகிறோம். தூக்கம் வந்தால் படுக்கையில் சென்று சாய்கிறோம். ஆனால் செக்ஸ் வந்தால்..எப்படி வெளிப்படுத்துகிறோம்..கண்டிப்பாக சொல்வேன்..கட்டுப்படுத்த நினைக்கிறோம்..ஆனால் உணர்வு என்பது ஒரு காட்டாற்று வெள்ளம் போல், கட்டுப்படுத்த நினைக்க, நினைக்க திமிறிக் கொண்டு வரும்..அதற்கு வடிகால் தேடுவதற்காக நாம் அடைவதுதான் மேலே சொன்ன செக்ஸ் புத்தகங்கள், டிவிடிக்கள்..
பிரச்சனை என்னவென்றால் குற்றங்கள் ஏற்படுவது அங்கேதான். பிளஸ்டூ படிக்கும் பையன் வடிகாலாக செக்ஸ் புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறான்.. கொஞ்சம் கையில் காசு உள்ளவர்கள், பலான படம் தியேட்டருக்கோ, அல்லது டிவிடியோ வாங்கி கொள்கிறார்கள். இன்னும் பணம் படைத்தவர்கள், இன்னும் ஒரு படி மேலே போய், பெண்களைத் தேடுகிறார்கள். ஆனால் சமூகத்தைப் பற்றி கவலைப்படாதவன் என்ன செய்கிறான். கற்பழிப்பு..நாம் தினமும் படிக்கும் கற்பழிப்பு செய்திகளுக்கு மூலமே இதுதான்.இன்னும் பயத்துடன் சொல்லப்போனால், ஒரு கட்டத்தில் மேல் யாருமே சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்த தவறை செய்யக்கூடும்..
இதைக் கட்டுப்படுத்த முடியுமா என்று கேட்டால்..முடியாது என்றுதான் சொல்வேன். ஒரு உணர்வை எப்படி கட்டுப்படுத்த முடியும்.தும்மல் வந்தால் உங்களால் தும்மாமல் இருக்க முடியுமா…இந்த நிலைமையை வியாபரமாக்கி சம்பாதிப்பவைகள்தான், பலான புத்தகங்கள், மற்றும் பலான டிவிடிக்கள். இந்தப் புத்தகங்கள் செக்ஸ் உணர்வுக்கு வடிகாலாக மற்றும் இருப்பதில்லை…சந்தர்ப்பம் கிடைக்கும்போது நம்மை குற்றம் செய்ய தூண்டிவிடுகின்றன.ஒரு செக்ஸ் புத்தகம் படித்து விட்டோ, அல்லது செக்ஸ் படம் பார்த்து விட்டோ வருவபன், அனைத்து பெண்களையும் அந்த கோணத்திலேயே பார்க்க நினைக்கிறான். ஆனால் சமூக உறவுகளின் நிர்ப்பந்தத்தால் அந்த உணர்வை அவசரமாக மனத்தில் இருந்து அகற்றுகிறான். அப்படி அகற்ற மறுப்பதன் விளைவே நீங்கள் தினசரி செய்திகளில் படிக்கும் தந்தை-மகள், ஆசிரியர்-மாணவி கற்பழிப்புகள்..
ஆகவே இந்த உணர்வைக் கட்டுப்படுத்த நினைத்து தோல்வியடைவதை விட்டு விட்டு இதை வழிப்படுத்த நினைப்போம். பாலியல் கல்வியை கட்டாயமாக்குவோம். படிக்கும் மாணவர்கள் மற்றும் நம்முடைய குழந்தைகளுக்கு செக்ஸ் என்பது ஒரு வெட்கப்பட அல்லது ஒளிந்து பார்க்க நினைக்கும் உணர்வல்ல என்பதைப் போதிப்போம். அவர்களுக்கு உடம்பில் நடக்கும் மாற்றங்களை தெளிவாக புரிய வைப்போம். குற்றங்கள் இல்லாத சமுதாயத்தை கட்டி எழுப்ப ஒரு செங்கல்லையாவது கொடுத்திருக்கிறோம் என்ற திருப்தி வரும்..
இந்தப் பதிவின் மூலம் நான் ஒரு செங்கல்லை எடுத்து வைத்து விட்டதாக நினைக்கிறேன். அப்புறம் நீங்கள்…..??????
16 comments:
Super ji
மிகத்தேவையான பதிவு.வாழ்த்துகள்.
good artice. but i got a few things to discuss here with you & others.
okay, we teach youngsters about sex education. after that what? kids know thats ok/normal, but the society will still think that is NOT OK & look down on them(kids) & make their lives miserable.
i would rather say the society & parents need the sex education. they are the ones that need to change.
lets make the society/parents think its ok to resort to some sort of sexual outlet(magazines..etc) & maturbate; until they are old enough to experience that through proper channel(marriage or legal consensual sex)
coz, just because we gave the kids, the sex education, it won't stop them from having sexual drives.
so masturbation is the safest way for underage even for some 'single' adults. no one gets hurt, no guilty feelings, no disease, no rape, even good for the balls (can avoid prostate cancer). this freedom applies to both gender.
மிகத்தேவையான பதிவு.வாழ்த்துகள்.
must required post now a days for our Indian environment அண்ணே..
Good post
இந்தப் பதிவின் மூலம் நான் ஒரு செங்கல்லை எடுத்து வைத்து விட்டதாக நினைக்கிறேன். அப்புறம் நீங்கள்…..??????
Good article ...
Nanum ungakuda oru sengal eduthu vaikiren
naan oru veedu kadda thevaiyaana sengkal kodukkireen!!!!
சுய மைதுனத்துக்கும் பிராஸ்டேட் கான்சருக்கும் தொடர்பு உண்டு. ஆனால் அது எத்தகயது என்பதை இதைப்பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.drpetra.co.uk/blog/does-masturbation-cause-prostate-cancer/
சார் இது கத்தி மேலே நடக்கிற வித்தை போல. கவனத்துடன் செய்ய வேண்டும். இள மனதிற்கு புரிய வைப்பது அத்துனை சுலபமல்ல. நீங்கள் எழுதியது போல ஒவ்வொரு கல்லாகத்தான் வைக்க வேண்டும்
இது பற்றி அம்மாக்களின் வலைப்பூவில் பாதி எழுதி வைத்திருக்கிறேன்...
அவசியமான பதிவு :))
ராசா..!
ஹ்ம்ம்...! அவசியமான பதிவுதான்..!
பாலுறுப்புக்களை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பதை கூடபெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் தான் வளர்த்து கொண்டிருக்கிறது
இந்த சமுதாயம்..!
பாலியல் மற்றும் பாலுறுப்புக்களை பற்றிய குறைந்த பட்ச சந்தேகங்கலாவது இந்த பதின் வயதில் அவர்களுக்கு புரியப் பட வைத்திருக்க வேண்டும்..!
பாலியல் பற்றிய கல்வி அவசியமே.
பாலியல் கல்வி பற்றிய தெளிவு நம்மிடத்தில் இல்லை.. ஞாநி அவர்களின் ‘அறிந்தும் அறியாமலும்’ படித்தால் அதன் முக்கியத்துவம் தெரிய வ்ரும். வருங்கால சந்ததியினரை அம்மாதிரி குற்றங்களில் சிக்கிவிடாமல் பாதுகாக்க, பாலியல் கல்வி அவசியம்!
அன்புடன்
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.com
Edit dhananjaya said... Thanks Magesh K
Thanks Nilarasikan
Thanks Anony. It is intresting. You can write a small article about this.
Thanks Anony, tarru, abu absar, humming bird
Thanks Anony, Vajra, Kummachi..
Thanks Mayil, Lemurian, Karanam Ayiram
நல்ல பதிவுதான்! ஆணால் செங்கல் எல்லாம் கிடையாது ,,,
ஒரு சிறு கல்தான்!
(எல்லா கலாச்சாரத்திலும் இந்த குழப்பம் இருக்கிறது, அனுபவித்து முடித்தவனுக்கு மட்டுமே மறக்கும் அல்லது கட்டுபடும் விசயம் இது! மேலை நாடுகளில் சிறு வயதில் நிறைய அனுபவிக்கிறார்கள் அதனால் கட்டுபட்டமாதிரி தெரிகறது, எனக்கு தெரிந்து இதற்கு ஒரே வழி மறுபடியும் பால்ய விவாகம் கொண்டுவருவதாகத்தான் இருக்கும், அப்பொழுது கட்டபடுத்த தேவையில்லா நிலை இரண்டு பேருக்கும் இருக்கும், கணவன் மனைவியிடமும் ஒரு அண்யோன்யம் இருக்கும், முத்திபோன கல்யாணத்தில், கணக்குதானே பிரதானமாக இருக்கிறது, அதனால்தான் எவ்வளவு தலைவலிகள்?!)
you not only intervened a harmless "HMT " session but had the guts to write about.... what kinda heartless man are you...
Post a Comment