Thursday, 21 January 2010

மிக்சர் ஜீஸ்

புத்தாண்டு சபதம்
இந்த புத்தாண்டில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். இனிமேல் ஹெல்மெட் அணிவதில்லை என்று. இரண்டு வாரங்களுக்கு முன்னால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிந்ததால், ஆள் மாறி ஒரு சப் இன்ஸ்பெக்டர் வெட்டப்பட்டார். நானோ ஏற்கனவே பார்ப்பதற்கு ரவுடி மாதிரி இருக்கேனா..யாரையோ வெட்டப்போய் ஆளை மாற்றி என் கழுத்துக்கு கத்தி வந்துவிட்டால்..ஹெல்மெட் அணிந்து செல்லாததால், 100 ரூபாய்தான் அபதாரம். ஆனால் ஹெல்மெட் போட்டு சென்றால் உயிரே அபதாரம். 100 ரூபாயா, உயிரா என்று நினைக்கும்போது எனக்கு உயிரே பிரதானமாக இருக்கிறது. இதைக் கேட்பதற்கு முட்டாள் தனமாக இருந்தாலும், உங்கள் கழுத்திற்கு கத்தி வரும்போது, தெரிய வரும்..ஹி..ஹி..

இந்த மாத சாப்பாட்டுக்கடை
இந்த மெஸ் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. மேற்கு மாம்பலத்தில் பேச்சிலர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது காமேஸ்வரி மெஸ். ஒரு பிராமணர் இந்த மெஸ்ஸை நடத்துகிறார். காலையில் சென்று அங்கு ஒரு பூரி சாப்பிட்டுப் பாருங்கள். திவ்யமாக இருக்கும். அங்கு தரப்படும் காபியின் சுவை, இரவு வரை அடிநாக்கில் தித்திக்கும். மாலையில் வத்தக்குழம்பு சாதம் என்று சமைத்து தருவார்கள், பாருங்கள். ஒருதடவை சாப்பிட்டால் தினமும் அங்குதான் செல்வீர்கள். இரவு சப்பாத்தி சாப்பிடுவதற்கு அங்கு ஒரு க்யூவே நிற்கும். கண் எதிரிலியே சப்பாத்தி சுட்டு தருவர். சப்பாத்திக்கு தினமும் ஒரு சைட்ட்டிஸ்.அரிசி உப்புமா இன்னும் கலக்கல். அமர்ந்து சாப்பிட இடமில்லாததும், கஷ்டமர்களை சரிவர கவனிக்காததும் இந்தக் கடையின் மைனஸ். மேற்கு மாம்பலம் சென்றால் ஒருமுறை சென்று வாருங்களேன். மேற்கு மாம்பலம், ஜங்க்சன், மார்க்கெட் அருகில் உள்ளது.

இந்த மாத புத்தகம்
திரு,மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் தான் நான் தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம். வரலாறு பிடித்தவர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். இரண்டாம் உலகப்போர் எப்போது துவங்கியது, எப்படி முடிந்தது, ஹிட்லரின் அராஜகங்கள் என அனைத்தையும் தெளிவான தமிழில் இதற்கு மேல் யாரும் சொல்ல முடியாது. முதல் பக்கத்தைப் படிக்க ஆரம்பித்தவன், கடைசி பக்கம் முடியும் வரை 4 மணி நேரத்தில் முடித்து விட்டேன். நீங்களும் நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்களேன்.

இந்த மாத அநியாயம்
இரண்டு வாரங்களுக்கு முன்னால் சன்.டிவியில் ராஜா ராணி நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அந்தக் காலத்தில் ஏதாவது அடல்ஸ் ஒன்லி நிகழ்ச்சி பார்ப்பதற்கு சனிக்கிழமை இரவு வரை இளைஞர்கள் காத்திருப்பர். ஆனால் இந்த நிகழ்ச்சி அதையும் மிஞ்சி விட்டது. இதில் பங்கேற்கும் ஒரு நடிகை உடுத்திய உடை ஆபாசத்தில் எல்லை. ஏறக்குறைய ஒரு கர்சீப் துணிதான் உடுத்தியிருந்தார். அதுவும் எப்படா விழும் என்று தொங்கிக் கொண்டு இருந்தது இன்னும் கொடுமை(இல்லையென்றால் சிறப்பு). சன்.டீ.விக்கு என்ன ஆனது. விஜய் டீ.விக்கு போட்டி கொடுக்க வேண்டியதுதான்..அதற்காக இப்படியா..இப்படி நிகழ்ச்சிகளால் சன் டீ.வி பார்க்கும் குடும்பங்களின் எண்ணிக்கை குறையவும், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு

இந்த வார வேண்டுகோள்


சென்னை வந்து 10 வருடங்கள் ஆகிறது.,இன்னும் ஒரு சினிமா சூட்டிங்க் கூட பார்த்ததில்லை. சினிமா அல்லது தொலைகாட்சி உலகத்தில் இருப்பவர் யாரேனும் இந்தப் பதிவை பார்க்க நேர்ந்தால் என்னை ஒரு சூட்டிங்க்கிற்கு கூட்டி செல்ல இயலுமா..ஒரு ஓரமாக நின்று பார்த்து விட்டு ஓடி வந்து விடுகிறேன். என் மேல இருக்கிற கடுப்புல் ஏதாவது பைட் சூட்டிங்கிற்கு கூட்டிட்டு போயிராதிங்கப்பூ…

15 comments:

taaru said...

அண்ணே பர்ஸ்ட்டு வணக்கம்...
படிச்சுட்டு வரேன்..

taaru said...

புத்தாண்டு சபதத்த முடிக்கும் போது ஹி ஹி னு இருக்கு.. பட் படிச்சுட்டு நெம்ப கஷ்டமாயிடுச்சு... இருந்தாலும் நம்ம லொள்ள்ள்ல் நண்பர்களிடம் எப்படி தப்பிப்பீங்க.. :-P

ரமேஷ் கார்த்திகேயன் said...

//சென்னை வந்து 10 வருடங்கள் ஆகிறது.,இன்னும் ஒரு சினிமா சூட்டிங்க் கூட பார்த்ததில்லை.
//
அப்படியே என்னையும் கூட்டிட்டு போங்க !!

taaru said...

AVM குள்ள போங்கண்ணே... அங்க தான் எல்லா TV ரியாலிட்டி சூட்டிங்கும் நடக்குதாம் [signing off "யுகேந்திரன் வாசுதேவன் நாயர்", இன்னும் நல்லா பீல் பண்ணி அழுங்க "கோபிநாத்", மடை வாய் "DD @ திவ்யதர்ஷினி" அம்புட்டு பேரையும் பாத்துட்டு வரலாம்]..
அன்பின் ஷங்கர்ஜி [கேபிள்].. ப்ளீஸ் அண்ணன் ஏதோ ஆசை படுறாரு.. கொஞ்சம் கவனியுங்களேன்..

குப்பன்.யாஹூ said...

nice post,

குப்பன்.யாஹூ said...

ninga sonningannu naanum www.cooltamil.com il ettu vaaram raaja rani programes fast forward panni paathen.

ragasiyaa dressa solringlaa

but prograame paaka mudiyalinga (kekka mudiyalai) mute pottu padam mattum patheen, sorpolivu aatri kolraanga

Jackiesekar said...

உங்க நம்பர் என் மெயிலுக்கு அனுப்பி வைங்க...dtsphotography@gmail.com

சிங்கக்குட்டி said...

ஜூஸ் அருமை குடிச்சு ஓட்டு போட்டாச்சு.

சினிமா விசையம் நம்ம "ஜாக்கி சேகர்"க்கு தான் தெரியும் :-) அவரை பிடியுங்கள்.

முடியவில்லை என்றால் சொல்லுங்கள் தொலைகாட்சி சூட்டிங் பார்க்க நான் உதவுகிறேன்.

Cable சங்கர் said...

அடுத்த முறை நான் ஏதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது சொல்கிறேன். ராஜா..

ஜெய்லானி said...

பொருமை என்பது எப்படி என்று நேரடியாக சூட்டிங் பார்க்கும் போதுதான் தெரியும்.ஒரு சிறு விசயத்திற்கு 4 மணி நேரம் பிடிக்கும்.பார்கிற பொதுஜனம் உலகத்தெயே வெறுக்கும் .இது தேவையா பாஸ்.

நாடோடி said...

சன்.டீ.விக்கு என்ன ஆனது. விஜய் டீ.விக்கு போட்டி கொடுக்க வேண்டியதுதான்..அதற்காக இப்படியா..

உண்மைதான் நல்லா சொல்லியிருக்கீங்க.

Anonymous said...

anne, anne eppadinee ungalala mattum mudiyuthu..

அவிய்ங்க ராசா said...

Thanks taaru nhanba...))
Kandippa Ramesh anna
Taaru..Jackie anne kootitiiu porennnu solli irukkar..cable thalai kooda oru thadavai poven..
Correct Kuppan..
Thanks Jackie Sekhar.Will send the number to you asap...
Singa kutti..i want to see the serial shooting also..but don't take me to the neighbourhood..))
Thanks Cable Anna
Jailani..i am going just for an experience..)
Thanks Nadoti and Anony

வெற்றி-[க்]-கதிரவன் said...

இன்ன சாதிக்காரர் இந்த கடையை நடத்துகிறார் என்று குறிப்பிடுவதன் தேவை என்ன ?

அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் பிற்படுத்தப்பட்டவர் / மிகவும் பிற்ப்படுத்தப்பட்டவர் / ஆதி திராவிடர் அந்த கடையை நடத்திருந்தால் அதையும் உங்களால் குறிப்பிட்டிருக்க முடியுமா ? அல்லது குறிப்பிட்டிருபிர்களா ?

-:)

ராமுடு said...

ராசா.. வணக்கமுங்க.. என்னோட நண்பன் இந்த ப்ளாக் பத்தி சொன்னான்.. சாதரணமா நான் கருத்து சொல்றது இல்லேங்க..

ஆனால் காமேஸ்வரி மெஸ் பத்தி சொன்னவொடனே நாக்குல எச்சில் வூர ஆரம்பிச்சுடுச்சு.. எப்ப மாம்பலம் போனாலும் அந்த கடை, இல்லாட்டி மங்கலம்பிகா அல்லது தஞ்சாவூர் மெஸ்.. எதாவது ஒரு கடைல பொய் சாப்பிட்டு விட்டு தான் போவன்.. எங்க போவேன்னு கேக்கறீங்கள.. எங்க சொந்த காரங்க வீட்டுக்கு சாப்பிட.. ஒரு 4 மாசம் இந்திய வந்த போது இது மாதிரி சொந்தகாரங்க வீட்ல கூப்பிட்டு இருந்தாங்க.. அங்க (சாப்பிட) போறப்ப காமேஸ்வரி கடை வழியத்தான் போனேன்.. அங்க பொய் 4 சப்பாத்தி, இட்லி, புளியோதரை எல்லாம் சாப்பிடும் போது சொந்தகாரங்க என்னை பாதுட்டங்க.. என்னடா வீட்ல சாப்பிட வரேன்னுட்டு இந்த கடைல சாபிட்டுக்கிட்டு இருக்க அப்படின்னாங்க.. உங்க வீட்டுக்கு எப்ப வந்தாலும் இந்த கடைல சாப்பிட்டுவிட்டு தான் வருவேன்.. (அங்க போயும் நல்ல சாப்பிடுவேன்னு வேசுக்கங்கலேன்..).. ரொம்ப நல்ல கடை.. மறக்க முடியாத சாப்பாடு..

Post a Comment