கதை இதுதான்..சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடைபெற்ற போரில், பாண்டியர்கள் வசம் உள்ள ஒரு சிலையை, சோழர்கள் கைப்பற்றுகிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில், சோழர் அரசர், தன்னுடைய மகனை அந்த சிலையுடன் கண்தெரியாத தீவுக்கு அனுப்பிவிடுகிறார்..அதுவும் எப்படி, ஏழு கடுமையான பாதுகாப்புகளோடு(ஜீபூம்பா படம் மாதிரி..) கதை இப்போது, இந்த நூற்றாண்டுக்கு வருகிறது..தொலைந்து போன தன் அப்பாவை தேடுவதற்காக, ஆண்ட்ரியா, ரீமா சென், மற்றும் கார்த்தி & கோ வியட்நாம் தீவை நோக்கி போகிறது. அவர்கள் ஒவ்வொரு தடையாக தாண்டி, கடைசியாக சிலை இருக்கும் இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு இன்னும் உயிரோடு வாழும் சோழர்களின் கூட்டத் தலைவன் பார்த்திபனால் சிறை பிடிக்கப்படுகிறார்கள். திடிர் திருப்பமாக, ரீமா சென், பாண்டிய மன்னர் தலைமுறையில் இருந்து வருபவர் என்றும், சோழர்களை பழி வாங்கி அந்த சிலையை கவர்ந்து செல்பவர் என்றும் தெரிகிறது..இதற்கு மேல் கதையை சொன்னால் , நீங்கள் படம் பார்க்க மாட்டீர்கள் என்பதால், இதோடு நிறுத்திக் கொள்ளலாம்..
ரீமா சென்னை பாராட்டுவதற்கு முன்னால் இதில் நடித்த துணை நடிகர்களை பாராட்ட வேண்டும். உடல் முழுவதும் கருப்பு பெயிண்ட் அடித்து, காட்டுவாசிகளாக கலக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கும் சம்பளம் தரப்படவில்லை என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. குடுத்திருங்கப்பு..அடுத்து கார்த்தி..இந்த படத்தை அவர் வாழ்நாளில் மறக்க முடியாது..அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்..ஆனால் சில காட்சிகளில் பருத்திவீரன் பாதிப்பு தெரிகிறது..ரீமாசென்..கண்டிப்பாக விருது கொடுக்கலாம்.இந்த ஒரு படம் போதும், இனிமேல் சினிமாவிலிருந்து விலகி கொள்ளலாம்..படம் முழுதும் அவர் ஆளுமைதான். அணிந்திருக்கும் ஆடை பற்றி கூட கவலைப்படாமல் அப்படி ஒரு வெறியுடன் கூடிய நடிப்பு..முன் வரிசை கூட்டம் விசிலடித்தே மாய்ந்து போகிறது..
அடுத்து பார்த்திபன்..சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங்க்..ஆனால் அந்த ராஜா வேஷத்திற்கு கனகச்சிதம். அவர் கொடுக்கும் அசைவுகள், தமிழ் சினிமாவிற்கு புதிது..ஆண்ட்ரியாவும் கஷ்டப்பட்டிருக்கிறார். ஆனால் இடைவேளைக்கு அடுத்து படத்தில் இருப்பதே தெரியவில்லை.. செல்வராகவன், இந்தப் படம் அவரை எங்கோ கொண்டு போய் விட்டுவிடும்..அடுத்து எந்தப் படம் எடுத்தாலும், இந்தப் படத்துடன் ஒப்புமை செய்யப்படும் வாய்ப்பு உண்டு..சில காட்சிகள் ஹாலிவுட்டிற்கு சவால். சில காட்சிகள் ராமநாராயணுக்கு சவால்..இடைவேளைக்கு அடுத்து வரும் காட்சிகள் கொஞ்சம் பாமரனுக்கும் புரியும் படி எடுத்திருக்கலாம். தியேட்டரில் நெளிகிறார்கள். அவர்கள் பேசும் தமிழைப் புரிவதற்கு டிக்சனரி எடுத்து செல்வது நல்லது. சில காட்சிகளில் டைரக்டர் கோட்டை விட்டுள்ளது தெரிகிறது..ஹெலிகாப்டரில் போக முடிந்த இடத்திற்கு, ஏழு பாதுகாப்பு தாண்டி ஏன் பயணம்.. அடிக்கடி வரும் மாயாஜாலக் காட்சிகள் ஏன்..இயல்பாக சொல்லி இருக்கலாமே..
ஒளிப்பதிவாளர்,இசையமப்பாளர் நிறைய ஹோம்வொர்க் செய்துள்ளனர். கேமிராவும், இசையும் நம்மோடே பயணிப்பது, அவர்களின் வெற்றி..இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் விருதுக்கு தகுதியுள்ளவர்கள். இதுபோன்ற படங்கள் கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டும்..ஆனால், மசாலா படங்களுக்கு விசில் அடித்தே பழகிப்போன நமக்கு இந்தப்படம் கண்டிப்பாக கடுப்பைத் தரும் என்பதில் ஐய்யமில்லை. கடையில் நடைபெறும் போர்க்காட்சி(300 படத்தின் காப்பி) படத்திற்கு புதிது. வெறியுடன் தாக்கும் காட்டுவாசிகளின் ஒவ்வொரு அசைவும் நடிப்பு.. தோற்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் கத்தியை வைத்து தற்கொலை செய்யும் அந்த பத்து பேர், அதிர்ச்சி..
மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் – உலகத்தரத்தில் ஒரு தமிழ்படம்(கமல் சார் கோவிச்சக்கூடாது..)
16 comments:
நல்லாத்தான் சொல்றீங்க... பாப்போம்..
oops online - 44
;)
ராசாண்ணே.. உங்க எழுத்து நடை மிஸ்ஸாகுதே ஏன்?
செல்வராகவன், இந்தப் படம் அவரை எங்கோ கொண்டு போய் விட்டுவிடும்..
அவரை எங்கே கொண்டு போய் விடப்போகிறது...
தயாரிப்பாளரைத்தான்....பாவம்.
கஸ்தூரிராஜா என்று ஒரு புண்ணியவான்...நல்ல நேரத்தில்.......ஹூம்.
அருமையான விமர்சனம் எனது கருத்தும் இதுவே .பாமரர்களுக்கு நிச்சயம் புரிய போவதில்லை ,ஆனால் செல்வா கலக்கிருக்கிறார் பாராட்டாமல் இருக்க முடியாது ரீமாவையும் .
//ஹெலிகாப்டரில் போக முடிந்த இடத்திற்கு, ஏழு பாதுகாப்பு தாண்டி ஏன் பயணம்
அந்த இடம் எதுவென்றே தெரியாத காரணத்தினால் அண்ட்ரியா வை தவிர மத்தவர்களுக்கு தெரியாது பிறகு தான் இடம் தெரிந்தவுடன் ஆட்கள் வந்து கொண்டுவிடுகிறார்கள்.
//அடிக்கடி வரும் மாயாஜாலக் காட்சிகள் ஏன்
பாண்டஸி படம் தல அதுவும் நம்ம தமிழ் மக்கள் பக்திஆனவர்கள் அதுக்கு தான்
//மசாலா படங்களுக்கு விசில் அடித்தே பழகிப்போன நமக்கு இந்தப்படம் கண்டிப்பாக கடுப்பைத் தரும் என்பதில் ஐய்யமில்லை
உண்மை கசக்கிறது
//கடையில் நடைபெறும் போர்க்காட்சி(300 படத்தின் காப்பி) படத்திற்கு புதிது
அந்த எண்ணம் வருவதை தவிர்க்கமுடியாது ஆனால் நம் பாரம்பரிய போர் கலைகளிலும் உண்டு கலரி பயின்றவர்களை கேட்டு பாருங்கள் .
பின்நவீனத்துவம்,கட்டுடைப்பு,ராணுவம் அனைவர்க்கும் அணைத்து இடங்களிலும் நல்லவர்கள் அல்ல போன்றவற்றை சொல்லுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அதற்கே செல்வாவிற்கு ஒரு பாராட்டு .
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று நினைகிறீர்களா .
googd ...
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று நினைகிறீர்களா//
நல்ல கேள்வி..::))
lets see...am going this week end
எந்த இடத்தில் சோழர்கள் உள்ளார்கள் என தெரியாமல் எப்படி ஹெலிகாப்டரில் போக முடியும்.....(ரீமா சென்னிடம் தகவல் வந்து அதன் முலம் அழகப்பெருமாள் கொண்டு வருவார்கள்....( ஆனால் படத்தில் நிறைய ஓட்டைகள்....)நீங்கள் சொல்வது செல்லாது.....
உங்க விமர்சன நம்பிக்கையில் படம் பார்க்கப்போகிறேன்.
Nhanri Annamalayan
Senthil Anna. I got some comments like that i am always writing in the same style. That is what i am trying to change that.
Kumki.. Producer should have known how the film is before taking..So we can't blame selva for this.,
Joe..You are correct.I agree..
Thanks Anony and Palapattrai & Mullai
Your review is good deshandhri, You are correct ganesh..Enna kodumai sir..not sure whether you will like this film..))
ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் எழுதாவிட்டால், ஆயிரத்தில் ஒருவனாகிவிடுவேன் என்ற பயத்தாலே விமர்சனத்தை எழுதவேண்டியது அவசியமாகிறது//
Bossu.. neenga Porkalam vimarshanama yaeluthi iruntha latchathil oruvanah aagi iruppinga...
Bossu Rajinikanth,
Pona padatthukku thane elutha mudiyum..))
Raja
Bossu Victor Saghaya Raja,
Appo padam paathuttu yaeluthunga... yellam bloggers intha padatha kilichuttaanga.
Pudhumai virumbi.
karthik
Enna koduma sir ,
padam nalathan iruku iruthalum 4,5 flim pathamathiri iruthuchu iruthalum papamula .....
Sir,
This is too much appreciation for this film. Being from the area of Chola's I totally hate this film. No other secondary thought about selva's effort. But for that he should not rewrite history as he likes. He can take anything and talk about anything about Chola's and Pandias with title card "its not meant to chola / pandia's".
Is talking about Cholan and pandian who are smoking beedi at roadside? Can he pinpoint from history that Chola people and king ate human flush? Which chola king did massacre to enemies? Which chola king allowed his people to be raped? I think selva got confused with history and Tamil ealem problem. When I saw that movie, I have a thought of problems faced by Srilankan Tamils.
Its useless movie and should be removed. Otherwise as said by Mr.vadivel in Imsai Arasan "Varalaru miga mukkiyam amaicharae.."
USELESS.
Post a Comment