Friday, 13 November 2009

ச்சீ..போடா..நாயே..

உறவுகளை விட்டு பணத்துக்காக என்னதான் பிரிந்து இருந்தாலும், மனம் ஒரு மாதிரி வெறுமையுடன் தான் இருக்கும். நான் சென்னையை விட்டு இங்கு அமெரிக்காவுக்கு வரும்போது ஏதோ ஒரு உலகத்தை வீட்டு பிரிந்து ஆளே இல்லாத இன்னொரு உலகத்திற்கு வந்த மாதிரி உணர்ந்தேன். பாசத்தை தவிர வேறு எதுவும் உணர்த்தாத சொந்தங்கள், என் கூடவே பிறந்த மாதிரி என்னோடே ஒட்டியிருக்கும் பல்சர் பைக், காலையில் கண் முழித்தவுடன் கேட்கும் பக்கத்து வீட்டு சுப்ரபாதம்..இப்படி பல..இங்கு யாராவது ஒரு சிறிய அன்பை வெளிப்படுத்தினால் போதும், மனம் குதூகலிக்கும்.

அப்படி நான் உணர்ந்த அன்புதான் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் “டாரத்தி” என்ற அமெரிக்க பெண். போன வருடத்தில் ஒருநாள் எப்போதும் போல வேலை பார்த்து கொண்டிருந்த போது, பக்கத்தில் “எக்ஸ்கியூஸ்மி” என்ற குரல் கேட்டு அவசரமாய் திரும்பி பார்த்தபின்புதான் அவரை முதல் முதலாய் பார்த்தேன். என்னுடைய அம்மா வயது. அவரை இப்போதுதான் அலுவலகத்தில் முதல்முதலாய் பார்க்கிறேன். ஒருவேளை யாராவது பிராஜெக்ட் மேனேஜர் புதிதாய் சேர்ந்திருக்கிறார்களோ…,

“எஸ் மேடம்..உங்களை அலுவலத்தில் புதிதாக பார்க்கிறேனே..”

"ஆமாம்.இன்றுதான் வேலைக்கு சேர்ந்தேன்..”

“என்னுடைய பெயர் ராஜா..உங்கள் பெயர்..”

“டாரத்தி..”

“ஓ..புதிதாக பிராஜெக்ட் மேனேஜர்..??”

“இல்லை..”

“அப்புறம். ஹெச். ஆர். அட்மின்..??”

மெலிதாக சிரித்தார்கள்..

“ம்ம்..எனக்கு யாரன்று கண்டுபிடிக்க முடியவில்லை..ஏதாவது டாக்குமெண்ட் வேணுமா..”

“இல்லை..உங்கள் கேபினில் இருக்கும் குப்பைத் தொட்டியை எடுத்து கொடுக்க முடியுமா..நான் இங்கு ஸ்வீப்பராக(சுத்தம் செய்பவர்) சேர்ந்துள்ளேன்..”

அதிர்ந்தே போனேன். என்னுடைய அம்மா வயது. அவர்களால் சரியாக பார்க்க முடியும் என்று கூட எனக்கு தோணவில்லை. அப்படியே எழுந்து விட்டேன். உங்கள் அம்மா வயதுள்ளவர் உங்களிடம் வந்து குப்பை கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்..

“ஐயோ..மேடம்..இந்த வயதில் போய்..”

“ஏன்..எனக்கு என்ன வயதாகி விட்டது..இப்போதுதான் 30 முடிந்து 2 மாதம் ஆகிறது..”

எனக்கு முதல் சந்திப்பிலேயே தெரிந்து விட்டது. முதுமையைப் பழித்து மூலையில் ஒடுங்கிப் போகும் சாதரணப் பெண் இல்லை அவர்கள். முதுமையை சவாலுக்கு அழைத்து, ஜெயிக்க நினைக்கும் பெண். அப்புறம் தினமும், அவர்கள் குப்பை எடுக்க வரும்போது என்னால் எழுந்து நிற்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் வரும் அந்த பத்து நிமிடமும் என் அம்மா எனக்க்கருகில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.

ஒருமுறை அவர்கள் வரும்போது என் நண்பனுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். அடிக்கடி நான் அவனை “சீ..போடா..நாயே..” என்று சொல்வது வழக்கம். அதை அவர்கள் கவனித்திருக்க வேண்டும் போல்,, அடுத்த முறை வரும்போது கேட்டார்கள்..

“அது என்ன..சீ..போடா நாய்..”

“அது..வந்து..செல்லமாக திட்டுவோம் இல்லையா..எங்கள் மொழியில் நாயைச் சொல்லி செல்லமாக திட்டினேன்..”

“ஹா..அது ஏன் நாயைச் சொல்லி திட்டவேண்டும்..நாய் நல்ல பிராணிதானே..”

“ம்..எங்கள் ஊரில் அப்படி இல்லை நீங்கள் நாயை குழந்தைப் போல் வளர்ப்பீர்கள். நாங்கள் அப்படி இல்லை..காவலுக்கு மட்டும்தான்..”

“ஓ..ஓ..மனிதர்களை விட நாய்கள் எவ்வளவு மேல் தெரியுமா..”

டாரத்தி, நகைச்சுவைக்காக சொன்னாலும் குரலில் ஒரு விரக்தி..

“என்ன ஆச்சு..மேடம்..எதுவும் பிரச்சனையா..நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.உங்களுக்கு மகன், மகள் யாராவது..”

“எல்லாம் இருக்கிறார்கள்..வேறு ஊரில்..மாதத்திற்கு ஒருமுறை வந்து பார்ப்பார்கள், உயிரோடு இருக்கிறேனா என்று..”

சொல்லும்போதே குரல் உடைந்து போனது..இன்னும் ஏதாவது பேச முயன்றால் அழுது விடுவார்கள் என்று தோன்றியது….

“மேடம்..என்ன இதற்கு போய் அழுது கொண்டு..நீங்கள் வேணால் பாருங்கள்..உங்கள் மகன் உங்களை அவர்கள் வீட்டிற்கு கூடிய சீக்கிரம் கூட்டி செல்வார்..”

இந்த ஆறுதலை தவிர எனக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர்கள் கண்களில் கண்ணீரோடு கூடிய ஏக்கத்தை உண்ர்ந்தேன்..

“மேடம்..உங்களுக்கு ஒன்று தெரியுமா..நீங்கள் அழுகும்போது 30 வயதிலிருந்து 28 வயதாக தெரிகிறீர்கள்..”

சிரித்து விட்டார்கள்..பொய்க்கோபத்தோடு..சொன்னார்கள்..

“சீ..போடா..நாயே…”

அப்புறம் எனக்கு அலுவல வேலை காரணமாக அவர்களை கவனிக்க முடியவில்லை..நீண்ட நாளைக்கு அப்புறம், நேற்றுதான் அவர்களை சந்தித்தேன்..அவர்கள் முகத்தில் சந்தோசம் புரண்டோடியது..

“என்ன மேடம்..என்ன ஆச்சு..ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி தெரியுது..”

“ஆமாம் ராஜா..என் மகன் நேற்று வந்திருந்தான்..என்னை 1 மாதத்திற்கு வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுள்ளாம்..அடுத்த திங்களிலுருந்து ஒரு மாதம் லீவு..”

“வாவ்..நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல மேடம்..என்னை மறந்து விட மாட்டீர்களே..”

“ஹே..ஒரு மாதம்தான்..அப்புறம் தினமும் இங்குதான்..”

“இல்லை..மேடம்..அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நான் ஊருக்கு கிளம்புறேன்..இனிமேல் வருவது கடினம்..”

அப்படியே அவர்கள் முகம் செத்து விட்டது..எவ்வளவு சந்தோசம் முகத்தில் இருந்ததோ அதற்கு நேர் எதிர்…

“ராஜா.ஏன்..என்ன ஆச்சு..”

“இல்லை மேடம்..பிராஜெக்ட் முடிந்து வீட்டது..”

“ம்ம்ம்…இன்று என்னை ஒரு மகன் வீட்டிற்கு அழைக்கிறான்..இன்னொரு மகன் என்னை விட்டுட்டுப் போறான்..”

அதிர்ந்து போனேன்..எதார்த்தமாக சொன்ன வார்த்தைகள் இல்லை அவை…அடி மனதில் ஆழத்தில் இருந்து வந்தது. ஒரு நிமிடம் என் நெஞ்சை அசைத்துப் போட்டு விட்டது..எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. அவர்கள் முகத்தை மட்டுமே பார்க்கிறேன்..

“சரி ராஜா..நீ என்ன செய்ய முடியும்..உனக்கென்று உலகம் இருக்கிறது….உனக்க்காக உன்னுடைய அம்மா, அப்பா காத்து கொண்டிருப்பார்கள்..சந்தோசத்தோடு போய் வா..”

எனக்கு இன்னும் பேச்சு வரவில்லை..அவர்களாலும் அங்கு நிற்க முடியவில்லை..என்னை விட்டு அவர்கள் நகர்ந்து போவதை அப்போதுதான் உணர்ந்தேன்….

“மேடம்..”

திரும்பி பார்த்தார்கள்..”நான் செல்ல மாட்டேன்..சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்று சொல்லுவேனோ என்ற ஏக்கம் அந்த கண்களில் தெரிந்தது..கண்களில் திரும்பவும் கண்ணீர்..

“நீங்கள் அழுதால் 30 வயதிலிருந்து 28 வயதாக தெரிகிறீர்கள்..”

சிரித்து வீட்டு சொன்னார்கள்..

“சீ..போடா..நாயே…”

49 comments:

Anonymous said...

அண்ணே, அற்புதமான பதிவு. உங்ககிட்ட இருந்து நல்ல நகைச்சுவையான பதிவுகளையே எதிர்பார்த்த எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.எல்லோரும் சந்தோசமா இருக்க ஆண்டவனை வேண்டிக்கறேன்.-பயபுள்ள.

vinu said...

litterly drops in my eyes...
love is eternal... that is great..
congrates raja....

ஜெட்லி... said...

டச்சிங்....

லெமூரியன்... said...

என்ன சொல்றதுன்னு தெரியல....மனதை பிழிந்த நெகிழ்ச்சியான இடுகை ராசா....

கலகலப்ரியா said...

touchy...

vasu balaji said...

உங்கள் எல்லா இடுகையையும் பின்னுக்குத் தள்ளி சிம்மாசனத்தில் இவ்விடுகை. கண்ணீர் வரவழைக்கும் உணர்ச்சிகரமான எழுத்து.

அப்துல்மாலிக் said...

TOUCHING ONE.... May the almighty blessed Tarathy

இராகவன் நைஜிரியா said...

மிக அருமை. கண் முன்னே நிகழ்வுகளை கொண்டு வந்துவிட்டீர்கள்..

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பதிவுண்ணே. மனசு கஷ்டமாகிடுச்சு :(

தூரிகை - Pandiyarajan said...

Chee...Podaa Naaye!!!!!!! Nalla Pathivu(Pagirvu) Raja anna...

மாதேவி said...

"என்னை ஒரு மகன் வீட்டிற்கு அழைக்கிறான்..இன்னொரு மகன் என்னை விட்டுட்டுப் போறான்..” மனத்தைத் தொட்டது.

பாவா ஷரீப் said...

படிக்கும் யாவரும் அழாமல் இருக்கவே முடியாதுண்ணே

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

super .............. feel panna vachuputeega..

a drop said...

wow!
I am left without words,really nice and touchy.
The way you have started the tale and all that...
I think it is not a fictional one.
good
really good and touching.

Anonymous said...

மதுரைக்காரரே எழுத்தில் இயல்பில்லை.ஏன் என்று உங்களுக்கே தெரியும்

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Anonymous said...
அண்ணே, அற்புதமான பதிவு. உங்ககிட்ட இருந்து நல்ல நகைச்சுவையான பதிவுகளையே எதிர்பார்த்த எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.எல்லோரும் சந்தோசமா இருக்க ஆண்டவனை வேண்டிக்கறேன்.-பயபுள்ள.
13 November, 2009 8:28 PM
//////////////////////////
நன்றி பயபுள்ள..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ber, 2009 8:28 PM
vinu said...
litterly drops in my eyes...
love is eternal... that is great..
congrates raja....
13 November, 2009 9:03 PM
///////////////////////
நன்றி வினு..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ஜெட்லி said...
டச்சிங்....
13 November, 2009 9:12 PM
///////////////////////
நன்றி ஜெட்லி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
லெமூரியன் said...
என்ன சொல்றதுன்னு தெரியல....மனதை பிழிந்த நெகிழ்ச்சியான இடுகை ராசா....
13 November, 2009 9:54 PM
////////////////////////
நன்றி லெமூரியன்,..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ber, 2009 9:54 PM
கலகலப்ரியா said...
touchy...
13 November, 2009 9:57 PM
/////////////////////
நன்றி பிரியா..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
er, 2009 9:57 PM
வானம்பாடிகள் said...
உங்கள் எல்லா இடுகையையும் பின்னுக்குத் தள்ளி சிம்மாசனத்தில் இவ்விடுகை. கண்ணீர் வரவழைக்கும் உணர்ச்சிகரமான எழுத்து.
13 November, 2009 9:59 PM
///////////////////////////
நன்றி வானம்பாடிகள்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ber, 2009 9:59 PM
அபுஅஃப்ஸர் said...
TOUCHING ONE.... May the almighty blessed Tarathy
13 November, 2009 11:11 PM
/////////////////////////
நன்றி அபுஅப்ஸர்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
er, 2009 11:11 PM
இராகவன் நைஜிரியா said...
மிக அருமை. கண் முன்னே நிகழ்வுகளை கொண்டு வந்துவிட்டீர்கள்..
14 November, 2009 12:03 AM
///////////////////////
நன்றி ராகவன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
☀நான் ஆதவன்☀ said...
நல்ல பதிவுண்ணே. மனசு கஷ்டமாகிடுச்சு :(
14 November, 2009 12:54 AM
///////////////////////
நன்றி ஆதவன்..

Raj said...

மிக அருமை....மனசை கலங்கடிச்சிட்டீங்க!

சிங்கக்குட்டி said...

அருமையான பதிவு, வாழ்த்துகள் ராஜா.

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
தூரிகை - Pandiyarajan said...
Chee...Podaa Naaye!!!!!!! Nalla Pathivu(Pagirvu) Raja anna...
14 November, 2009 2:33 AM
////////////////////////
நன்றி தூரிகை..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
மாதேவி said...
"என்னை ஒரு மகன் வீட்டிற்கு அழைக்கிறான்..இன்னொரு மகன் என்னை விட்டுட்டுப் போறான்..” மனத்தைத் தொட்டது.
14 November, 2009 3:28 AM
கருவாச்சி said...
படிக்கும் யாவரும் அழாமல் இருக்கவே முடியாதுண்ணே
14 November, 2009 10:33 AM
மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
super .............. feel panna vachuputeega..
14 November, 2009 3:47 PM
///////////////////
நன்றி மாதேவி, கருவாச்சி, மதுரைக்காரன்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
a drop said...
wow!
I am left without words,really nice and touchy.
The way you have started the tale and all that...
I think it is not a fictional one.
good
really good and touching.
14 November, 2009 5:05 PM
////////////////////////
நன்றி நண்பர்,

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Anonymous said...
மதுரைக்காரரே எழுத்தில் இயல்பில்லை.ஏன் என்று உங்களுக்கே தெரியும்
14 November, 2009 5:08 PM
//////////////////////
புரியவில்லையே நண்பா, கொஞ்சம் தெளிவாக சொல்ல இயலுமா??

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ber, 2009 5:46 PM
Raj said...
மிக அருமை....மனசை கலங்கடிச்சிட்டீங்க!
14 November, 2009 7:03 PM
சிங்கக்குட்டி said...
அருமையான பதிவு, வாழ்த்துகள் ராஜா.
14 November, 2009 7:16 PM
////////////////////////
நன்ரி ராஜ், சிங்கக்குட்டி..

Anonymous said...

என்ன அருமையான பதிவு, விஜை பட செண்டிமெண்டுகளெல்லாம் ஒண்ணுமே இல்லை

இவன் சிவன் said...

அண்ணே நொறுக்கி அள்ளிட்டீங்க... கலைஞர் பாணில பின்னூட்டம் போடனும்னா "இதயம் கனத்தது.. கண்கள் பணித்தது..." இதுக்கு முன்னாடி உங்க manager ஒருத்தரு இதே மாதிரி ஒரு ஊழியரை திட்டி ,பின் அவர் அலுவலில் இருந்து வெளியேற்ற பட்ட சம்பவத்தை சொன்னீங்களே..அது கூட எனக்கு ஞாபகம் வந்தது...

Sabarinathan Arthanari said...

நெஞ்சை தொடும் தருணங்கள். உணர்பவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் ஆனந்தம்.

நன்றி

நசரேயன் said...

நல்லா இருக்கு

Unknown said...

வணக்கம் ராசா,

உங்களுக்கு ருசிகர பதிவர் விருது கொடுத்திருக்கேன்

http://kvraja.blogspot.com/2009/11/blog-post_16.html

தினேஷ் said...

வழக்கம்போல நெஞ்ச நக்குற பதிவு..
கோச்சுக்காதேண்ணே ..

உனக்கு இது நல்லாவே வருது..

taaru said...

இப்புடி எழுதி எங்கள எல்லாதயுமில்லாம ..
நீங்களும் பச்ச மண்ணா [அந்த படத்துல இருக்குற மாறி] இருக்கீயளே அண்ணே...

அன்புடன் மணிகண்டன் said...

அண்ணே.. உங்க பதிவை படித்தவுடன் எங்களை அழ வைப்பதே (நெகிழ்ச்சியில் தான்) உங்களுக்கு வேலையா போச்சு...

suvaiyaana suvai said...

ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது
kaalaththin kolam:( மனசை கலங்கடிச்சிட்டீங்க

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Anonymous said...
என்ன அருமையான பதிவு, விஜை பட செண்டிமெண்டுகளெல்லாம் ஒண்ணுமே இல்லை
15 November, 2009 6:49 AM
//////////////////////
நன்றி நண்பா..

அவிய்ங்க ராசா said...

////////////////
இவன் சிவன் said...
அண்ணே நொறுக்கி அள்ளிட்டீங்க... கலைஞர் பாணில பின்னூட்டம் போடனும்னா "இதயம் கனத்தது.. கண்கள் பணித்தது..." இதுக்கு முன்னாடி உங்க manager ஒருத்தரு இதே மாதிரி ஒரு ஊழியரை திட்டி ,பின் அவர் அலுவலில் இருந்து வெளியேற்ற பட்ட சம்பவத்தை சொன்னீங்களே..அது கூட எனக்கு ஞாபகம் வந்தது...
15 November, 2009 8:38 AM
Sabarinathan Arthanari said...
நெஞ்சை தொடும் தருணங்கள். உணர்பவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் ஆனந்தம்.

நன்றி
15 November, 2009 6:24 PM
நசரேயன் said...
நல்லா இருக்கு
15 November, 2009 6:47 PM
/////////////////
நன்றி சிவன், சபரி,நாசரேயன்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
KVR said...
வணக்கம் ராசா,

உங்களுக்கு ருசிகர பதிவர் விருது கொடுத்திருக்கேன்

http://kvraja.blogspot.com/2009/11/blog-post_16.html
16 November, 2009 12:11 AM
/////////////////////
தங்கள் அன்பிற்கு நன்றி நண்பா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
சூரியன் said...
வழக்கம்போல நெஞ்ச நக்குற பதிவு..
கோச்சுக்காதேண்ணே ..

உனக்கு இது நல்லாவே வருது..
16 November, 2009 8:30 AM
taaru said...
இப்புடி எழுதி எங்கள எல்லாதயுமில்லாம ..
நீங்களும் பச்ச மண்ணா [அந்த படத்துல இருக்குற மாறி] இருக்கீயளே அண்ணே...
16 November, 2009 8:29 PM
அன்புடன் மணிகண்டன் said...
அண்ணே.. உங்க பதிவை படித்தவுடன் எங்களை அழ வைப்பதே (நெகிழ்ச்சியில் தான்) உங்களுக்கு வேலையா போச்சு...
17 November, 2009 6:27 AM
Suvaiyaana Suvai said...
ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது
kaalaththin kolam:( மனசை கலங்கடிச்சிட்டீங்க
17 November, 2009 12:42 PM
///////////////////////////
நன்ரி சூரியன், தாரு, சுவை, மணிகண்டன்..

Anonymous said...

Arumaiyana pathivu.

rajsteadfast@gmail.com

KARTHIK said...

நாதஸ் அண்ணாச்சி இந்த பதிவ சேர்பண்ணிருந்தாரு
அவருக்கு ஒரு நன்னி :-))

அதனால என்ன தல அந்தம்மாவ ஒரு நாள் நம்மூருக்கு கூப்புடுங்க ஜாமாய்ச்சிடுவோம்

Anonymous said...

touching dear

Unknown said...

Vanakkam Raja,

Innum ethnal naal kathirukka vendum unghal adutha pathivirku?..., Ungalin intha pathivai paditha pinbu, ungalin mattra ella pathiviyum padika thonri.., padithum vitten Raja.., Unghal nadai..., I mean Ezuluthu nadai miga arumai.., Valthuzhal Raja.., Saravana kumar Bangalore

அபி அப்பா said...

அருமையான பதிவு ராஜா!

Post a Comment