Tuesday, 3 November 2009

தொலைக்காட்சி சீரியல்கள் – ஒரு அகோரப் பார்வை

நேத்து கொஞ்சம் உடம்புக்கு முடியாததுனால ஆபிஸ்ஸுக்கு லீவு போட்டுருந்தேண்ணே..கொஞ்சம் காய்ச்சலால்(பன்னிக் காய்ச்சல் இல்லைண்ணே) எழுந்து நடக்க முடியலை. உடம்பு அசதியில நல்ல தூக்கம் வேற. கரெக்டா 9 மணிக்கு அலாரம் அடிச்ச மாதிரி, “அம்மி, அம்மி மிதிச்சி..அருந்ததி முகம் பார்த்து..” ன்னு காது பக்கத்துல கொய்ங்க்ன்னு ஒரு சத்தம்..கடுப்புல கண்ணைத் திறந்து பார்த்தா, “மெட்டி ஒலி” ன்னு ஒரு சீரியல். என் பொண்டாட்டி வைச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்காண்ணே..சீரியல் பாக்குறதுக்காக அலாரம் வைச்சிருப்பா போல.

“ஏம்மா..ஒரு மாதிரி தலை வலிக்குது..ஒரு காபி..”

“கொஞ்சம் இருங்க..மெட்டி ஒலி போட்டுடாயிங்க..ஒரு ½ மணி நேரம்”

சரி அரை மணி நேரம்தான்னு நம்பி சீரியல் பாத்ததுதான் நான் வாழ்க்கையில பண்ணின முதல் தப்புண்ணே..என்னம்மா நடிக்கிறாயிங்கண்ணே அந்த சீரியலுல..அரவிந்த்சாமி அப்பா தான் இந்த சீரியலுல மெயின் கேரக்டர். அவருக்கு 5 பொண்ணுங்க..ஒவ்வொரு பொண்ணும் முறை வைச்சி தினமும் அழுவாறாயிங்கண்ணே..இதுல என்ன கொடுமைண்ணா..சீரியல்லுல ரோட்டுல நடக்குற துணைநடிகர்கள் கூட அந்த குடும்பத்தைப் பார்த்து அழுவாறாயிங்கண்ணே..என்னடா பக்கத்துல விசும்புற சத்தம் கேட்குதேன்னு திரும்பிப் பார்த்தா, என் பொண்டாட்டி கேவி, கேவி அழுவுறாண்ணே..கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு வர்றப்ப கூட இப்படி அழுவலண்ணே..

“அடியே..என்ன ஆச்சு..சாதாரண காய்ச்சல்தாண்டி..நாளைக்கு சரியாகிடும்..இதுக்கு போய் சின்னப்புள்ளை மாதிரி அழுவுற..”

“அதுக்காக அழுவலைங்க…இங்க பாருங்க “சரோ” வுக்கு நடந்த கொடுமைய..கர்ப்பிணி பொண்ணை இப்படியா கொடுமைப்படுத்துவாயிங்க..இதுல லீலா வேற..பாவங்க..”

“அடியே..கட்டுன புருசன இப்படி சீரியல் போட்டு கொடுமைப்படுத்திறியேடி..என்னால எந்திரிச்சு ஓட முடியாதுன்னு தானே இப்படியெல்லாம் பண்ற..ஒரு காபியாவது..”

“கொஞ்சம் இருங்க..திருமதி செல்வம் முடியட்டும்..”

எனக்கு தலைசுத்தி வந்துருச்சு..திருமதி செல்வம் வேற போட்டுடாயிங்க..சரி கொஞ்ச நேரம்தான் பார்ப்போமே, பார்த்தேன்..கதையில் செல்வம்னு ஒருத்தர் நடிக்கிறார்ண்ணே..ஆஸ்கர் ரேஞ்சுக்கு நடிப்புண்ணே..இயேசுநாதருக்கு அடுத்தப்படியா அவருதான் நல்லவருண்ணே..அவரையும் கூட்டம் கூட்டமா கொடுமைப்படுத்துறாயிங்க..அவரும் குமுறி குமுறி அழுவுறாரு…இதுல சேது படத்துல நடிச்ச அபிதா வேற, பிச்சு உதறுராயிங்க..திரும்பவும் பக்கத்துல அழுகைச் சத்தம்..எனக்கு யாருண்ணு தெரிஞ்சு போச்சு..

“இங்க பாருங்க..பாவம் செல்வங்க..அவரை..”

“அப்படியே நிறுத்திக்க..பக்கத்துல காபி தண்ணி கூட குடிக்காம படுத்த படுக்கையா புருசன் கிடக்குறேன்..இதுல சீரியல் பார்த்து அழுவுறியா..”

“ஏங்க..தினமுமா இப்படி பண்றேன்..இன்னைக்கு வீட்டுல பிரியா தானே இருக்கீங்க..”

“அடிப்பாவி..ஏதோ..வொக்கேசன் லீவு போட்டு ஜாலியா இருக்குற மாதிரி சொல்லுறீயா..”

“அய்யோ இருங்க..நானே காபி போட்டுத்தர்றேன்..”

அப்பா..இப்பத்தாண்ணே..உசிரு வந்துச்சு..கிளம்புறப்ப அப்படியே ஒரு யூ டர்ன் போட்டு திரும்புனாண்ணே..

“ஏங்க..இந்த “செல்லமே” சீரியலை போடுறீங்களா..நான் அடுப்பறையில இருந்தே கேட்டுக்கிட்டு இருக்கேன்..”

சரி, நமக்குதான் காபி கிடைக்குதேன்னு சீரியலைப் போட்டேன்..அட, நம்ம ராதிகா அக்கா..இந்த சீரியலுல ஒரு பெரிய பொரியல்..சீ..கூட்டு குடும்பம்ணே..கன்னா பின்னானு அடிச்சுக்கிறாயிங்க….ஏதாவது தப்பு பண்ணினா விளக்காமத்தால..சீ..காய்ச்சலுல வாய் குழறுது பாருங்க..விளக்கு முன்னாடி நிக்க வைக்கிறாயிங்க..இந்த சீரியலுலயும் யாரையாவது யாரோ கொடுமைப்படுத்துக்கிட்டே இருக்காயிங்க..கடைசியில “செல்லமே” அப்படின்னு ஒரு பேக்கிரவுண்டு மியூசிக்கோட நம்ம உசிரை எடுக்குறாயிங்க..ஒரு நிமிசம் இருங்கண்ணே காபி வந்துருச்சு..

ஆசையா எடுத்து காபியை ஒரு மடக்கு குடிக்கிறேன்..காபியெல்லாம் உப்புண்ணே..ராதிகா அழுவுறத கேட்டுட்டே வீட்டுக்காரம்மா சக்கரைக்கு பதிலா உப்பு போட்டுடுச்சு….

“ஆத்தா..இதென்ன உப்பு காபி..”

“அதை விடுங்க..சீரியலுல செல்லம்மாவை என்ன சொல்லி திட்டுனாயிங்க..”

“சீரியல் பாத்தே நாசமா போங்கன்னு திட்டுனாய்ங்க..”

“விளையாடாதீங்க..என்ன சொல்லி திட்டுனாய்ங்க..”

“நீ, எனக்கு சக்கரை காபி போட்டுதா..அப்பதான் சொல்லுவேன்..” எப்படியெல்லாம் யூஸ் பண்ணே வேண்டி இருக்கு..நமக்கு காபி வேணும்ல..

“சரிங்க..இப்ப போட்டு தர்றேன்..அப்படியே “உறவுகள்” சீரியல் போட்டு விடுறீங்களா..கேட்டுக்கிட்டே காபி போட்டு தர்றேன்..”

காலங்காத்தால ஒரு காபிதண்ணி கேட்டது தப்புங்களாண்ணே..

35 comments:

தத்துபித்து said...

thappu thanee, coffe venumna serialuku munnadiye kekka vendiyathu thane.
ungalai van(pen) kodumai sattam kavanikkatum.

அப்பாவி முரு said...

நண்பர் தத்துபித்து கூற விரும்புவது என்னவென்றால்

“தப்புதாண்ணே, காபி வேணும்ன்னா சீரியலுக்கு முன்னாடியே கேக்க வேண்டியது தானே. உங்களை வன்(பெண்) கொடுமை சட்டம் கவனிக்கட்டும்”

என்கிறார்.

Jaleela Kamal said...

ஆசையா எடுத்து காபியை ஒரு மடக்கு குடிக்கிறேன்..காபியெல்லாம் உப்புண்ணே..ராதிகா அழுவுறத கேட்டுட்டே வீட்டுக்காரம்மா சக்கரைக்கு பதிலா உப்பு போட்டுடுச்சு….

“ஆத்தா..இதென்ன உப்பு காபி

சரியான காமடி

லெமூரியன்... said...

ம்ம்ம்...யதார்த்த தமிழ்குடும்பம் இன்னைக்கு இப்டித்தான் நடக்குது. ஒரு சோறு பதம்ங்க..!

vasu balaji said...

இல்லண்ணே. டிஷ் கனெக்‌ஷன் குடுத்தது தான் தப்பு. =)).ஒரு சீன் விடாம பார்த்துட்டு லொல்லு வேற.

Yousufa said...

மெட்டி ஒலி இன்னுமா ஓடிட்டிருக்கு?

என்ன கொடும சார் said...

என்ன கொடுமைங்க இந்த சீரியல் எல்லாம்.. பெண்களை வில்லிகளாக காலப்போக்கில் இவை மாற்றிவிடக்கூடும். நிறைய சந்தேகங்களையும் உருவாக்கிவிடக்கூடும். மொத்தத்தில் குடும்பங்களை பிர்க்கவும் கூடும்.

X files மாதிரி இல்லாட்டியும் ஒரு மர்மதேசம் ரேஞ்சுக்காவது ஒண்ணுமிலையே..

Anonymous said...

Stupid

குப்பத்து ராசா said...

எல்லா வீட்டுலையும் இப்ப சீரியல் தான் என். எம். நம்பியார்

பாலகுமார் said...

ராசா.. இப்பிடி சொல்லிகிட்டே எல்லா சீரியல்யும் பாப்பீங்க போல..

Manjari said...

இதெல்லாம் தேவலை. எங்க வீட்டு பெரியவங்க சீரியல் பார்ப்பாங்க.(பாவம் அவங்களுக்கும் பொழுது போகல. வேறென்ன செய்ய). மூணு வேலை சாப்பாடும் சீரியல் பாத்துகிட்டு தான் சாப்பிடுறோம். கண்டிப்பா தினமும் ஒரு கொலை/தற்கொலை/கற்பழிப்பு இல்லாம இருக்காது. குறைஞ்சது ஒரு மெகா சதிதிட்டமவது இருக்கும். வர வர சாப்பாடு உள்ள இறங்க மாட்டேன்னுது. அதுவும் மதியம் செந்துற பூவே ன்னு ஒரு சீரியல். அதோடு லஞ்ச். தாங்க முடியல.
இது தான் இப்படின்னா டின்னெர் டைம் திருமதி செல்வம். அய்யோ பாவம் நாங்க. எல்லா சீரியல் கதையும் ஒரே சாக்கடை. எல்லாத்தையும் விட பாவம் எங்க வீட்டு குழந்தைங்க. ப்ளீஸ் தாத்தா, பாட்டிகளே நீங்க கதை சொல்லி வளர வேண்டிய பிள்ளைகள், உங்க கூட ஒன்ன நீங்க பார்கற கொலை/கொள்ளை ன்னு எல்லாம் பார்த்து வளருது. உங்களுக்கு ஒரு நிமிஷம் கூட தப்புன்னு தோணலையா?

கடைசியா ஒரு தகவல், மெட்டி ஒழி (கரெக்ட் தானே) இப்போ ரெண்டாவது முறையா போகுது. அப்போ பார்த்த அதே கதை தான். ஆனா இப்போவும் பார்கிறாங்க.
கடைசியா ஒரு திட்டம். டி.வி பெட்டிய இனி பெட் ரூம்க்கு மாத்தலாம்னு.

அன்புடன்-மணிகண்டன் said...

அண்ணே.. ஒரு படத்துல இந்த சீரியல் பத்தி பேசறத உண்மைனு நம்பி வடிவேலு ஆட்டோவ லாரிக்குள்ள எல்லாம் விட்டு ஓட்டிட்டு வருவாரே... அது ஞாபகத்துக்கு வந்தது... :)

Toto said...

லீவ் போட்டுட்டு உங்க‌ளை யாருங்க‌ வீட்ல‌ இருக்க‌ சொன்ன‌து ??!!

-Toto
www.pixmonk.com

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
தத்துபித்து said...
thappu thanee, coffe venumna serialuku munnadiye kekka vendiyathu thane.
ungalai van(pen) kodumai sattam kavanikkatum.
3 November, 2009 8:52 PM
///////////////////////////
வன் கொடுமை சட்டமா..எது., புடிக்காத புருசன், மாமியார், மாமனார், நாத்தனார், நாத்தனார் புருசன், நாத்தானரின் 3 வயசு குழந்தை எல்லாத்தையும் 1 மாசம் ஜெயிலிலே வைப்பாயிங்களே..அதுவாண்ணே…மீ த எஸ்கேப்புண்ணே..)))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
er, 2009 8:52 PM
அப்பாவி முரு said...
நண்பர் தத்துபித்து கூற விரும்புவது என்னவென்றால்

“தப்புதாண்ணே, காபி வேணும்ன்னா சீரியலுக்கு முன்னாடியே கேக்க வேண்டியது தானே. உங்களை வன்(பெண்) கொடுமை சட்டம் கவனிக்கட்டும்”

என்கிறார்.
3 November, 2009 9:33 PM
/////////////////////////
ஆஹா..சட்டத்தை கேட்டவுடனே எனக்கு தொடையெல்லாம் நடுங்குது..இதுல தமிழ் டிரான்ஸ்லேஷன் வேற கொடுக்குறீங்களா..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
November, 2009 9:33 PM
Jaleela said...
ஆசையா எடுத்து காபியை ஒரு மடக்கு குடிக்கிறேன்..காபியெல்லாம் உப்புண்ணே..ராதிகா அழுவுறத கேட்டுட்டே வீட்டுக்காரம்மா சக்கரைக்கு பதிலா உப்பு போட்டுடுச்சு….

“ஆத்தா..இதென்ன உப்பு காபி

சரியான காமடி
3 November, 2009 10:13 PM
/////////////////////
நன்ற் ஜலீலா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
r, 2009 10:13 PM
லெமூரியன் said...
ம்ம்ம்...யதார்த்த தமிழ்குடும்பம் இன்னைக்கு இப்டித்தான் நடக்குது. ஒரு சோறு பதம்ங்க..!
3 November, 2009 11:29 PM
//////////////////////
ஆமாண்ணே,…கொஞ்சம் நகைச்சுவைக்காக சேர்த்திருந்தாலும், சில வீடுகளில் இப்படித்தான் நடக்குதுண்ணே…

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ber, 2009 11:29 PM
வானம்பாடிகள் said...
இல்லண்ணே. டிஷ் கனெக்‌ஷன் குடுத்தது தான் தப்பு. =)).ஒரு சீன் விடாம பார்த்துட்டு லொல்லு வேற.
4 November, 2009 12:00 AM
/////////////////////
அன்னைக்கு கட்டாயப்படுத்தி பார்க்க வைச்சுட்டயிங்கண்ணே..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////
r, 2009 12:00 AM
ஹுஸைனம்மா said...
மெட்டி ஒலி இன்னுமா ஓடிட்டிருக்கு?
4 November, 2009 3:17 AM
/////////////////////
அது இன்னும் பத்து வருசத்துக்கு ஓடும்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
என்ன கொடும சார் said...
என்ன கொடுமைங்க இந்த சீரியல் எல்லாம்.. பெண்களை வில்லிகளாக காலப்போக்கில் இவை மாற்றிவிடக்கூடும். நிறைய சந்தேகங்களையும் உருவாக்கிவிடக்கூடும். மொத்தத்தில் குடும்பங்களை பிர்க்கவும் கூடும்.

X files மாதிரி இல்லாட்டியும் ஒரு மர்மதேசம் ரேஞ்சுக்காவது ஒண்ணுமிலையே..
4 November, 2009 5:05 AM
///////////////////////
இவிங்களுக்கு ஒரு கொசு மருந்து இல்லையாண்ணே..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
r, 2009 5:05 AM
Anonymous said...
Stupid
4 November, 2009 5:10 AM
///////////////////////
யாரைத் திட்டுறீங்கன்னு தெரியலை..ஆனாலும் நன்றி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Kuppathu Raja said...
எல்லா வீட்டுலையும் இப்ப சீரியல் தான் என். எம். நம்பியார்
4 November, 2009 6:16 AM
//////////////////////
ஆமாண்ணே,,,)

அவிய்ங்க ராசா said...

//////////////////////
mber, 2009 6:16 AM
பாலகுமார் said...
ராசா.. இப்பிடி சொல்லிகிட்டே எல்லா சீரியல்யும் பாப்பீங்க போல..
4 November, 2009 7:09 AM
//////////////////////
ஆஹா..எப்படின்னே கண்டுபிடிச்சீங்க..)

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Manchari said...
இதெல்லாம் தேவலை. எங்க வீட்டு பெரியவங்க சீரியல் பார்ப்பாங்க.(பாவம் அவங்களுக்கும் பொழுது போகல. வேறென்ன செய்ய). மூணு வேலை சாப்பாடும் சீரியல் பாத்துகிட்டு தான் சாப்பிடுறோம். கண்டிப்பா தினமும் ஒரு கொலை/தற்கொலை/கற்பழிப்பு இல்லாம இருக்காது. குறைஞ்சது ஒரு மெகா சதிதிட்டமவது இருக்கும். வர வர சாப்பாடு உள்ள இறங்க மாட்டேன்னுது. அதுவும் மதியம் செந்துற பூவே ன்னு ஒரு சீரியல். அதோடு லஞ்ச். தாங்க முடியல.
இது தான் இப்படின்னா டின்னெர் டைம் திருமதி செல்வம். அய்யோ பாவம் நாங்க. எல்லா சீரியல் கதையும் ஒரே சாக்கடை. எல்லாத்தையும் விட பாவம் எங்க வீட்டு குழந்தைங்க. ப்ளீஸ் தாத்தா, பாட்டிகளே நீங்க கதை சொல்லி வளர வேண்டிய பிள்ளைகள், உங்க கூட ஒன்ன நீங்க பார்கற கொலை/கொள்ளை ன்னு எல்லாம் பார்த்து வளருது. உங்களுக்கு ஒரு நிமிஷம் கூட தப்புன்னு தோணலையா?

கடைசியா ஒரு தகவல், மெட்டி ஒழி (கரெக்ட் தானே) இப்போ ரெண்டாவது முறையா போகுது. அப்போ பார்த்த அதே கதை தான். ஆனா இப்போவும் பார்கிறாங்க.
கடைசியா ஒரு திட்டம். டி.வி பெட்டிய இனி பெட் ரூம்க்கு மாத்தலாம்னு.
4 November, 2009 8:38 AM
////////////////////////////
ஆஹா..இதை வைச்சே தனிப்பதிவா போடலாம் போலேயே..))
பொங்கி எழுந்துட்டீங்க போங்க..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
, 2009 8:38 AM
அன்புடன்-மணிகண்டன் said...
அண்ணே.. ஒரு படத்துல இந்த சீரியல் பத்தி பேசறத உண்மைனு நம்பி வடிவேலு ஆட்டோவ லாரிக்குள்ள எல்லாம் விட்டு ஓட்டிட்டு வருவாரே... அது ஞாபகத்துக்கு வந்தது... :)
4 November, 2009 9:36 AM
//////////////////
ஹா..ஹா..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Toto said...
லீவ் போட்டுட்டு உங்க‌ளை யாருங்க‌ வீட்ல‌ இருக்க‌ சொன்ன‌து ??!!

-Toto
www.pixmonk.com
4 November, 2009 10:20 AM
//////////////////////////
ஒருதடவை பட்டாச்சுலே..இனிமே. எஸ்கேப்புதான்..)))

payapulla said...

முடியல ராசாண்ணே...அவ்வ்வ்வ்வ்வ்வ் ........இப்போ ஒடம்புக்கு பரவாஇல்லயாண்ணே? - பயபுள்ள.

Unknown said...

ஒரு சீரியல் விடாம பாத்துட்டு என்ன பொலம்பல்..... போய் கோலங்கள் பாருங்கப்பா..

அவிய்ங்க ராசா said...

//////////////////
paya said...
முடியல ராசாண்ணே...அவ்வ்வ்வ்வ்வ்வ் ........இப்போ ஒடம்புக்கு பரவாஇல்லயாண்ணே? - பயபுள்ள.
5 November, 2009 6:34 AM
பேநா மூடி said...
ஒரு சீரியல் விடாம பாத்துட்டு என்ன பொலம்பல்..... போய் கோலங்கள் பாருங்கப்பா..
6 November, 2009 2:15 AM
///////////////////////
இப்ப நல்லா இருக்கு பயபுள்ள, ஹி..ஹீ..பேனா மூடி..

கோவி.கண்ணன் said...

:) ஆகா கலக்கல் !

நான் கூட ஒரு காலத்துல மெட்டி ஒலி முடிகிற வரை பார்த்திருக்கிறேன்.

அவிய்ங்க ராசா said...

///////////////////
கோவி.கண்ணன் said...
:) ஆகா கலக்கல் !

நான் கூட ஒரு காலத்துல மெட்டி ஒலி முடிகிற வரை பார்த்திருக்கிறேன்.
9 November, 2009 9:29 PM
//////////////////////
அண்ணே..நீங்களுமா..))

Unknown said...

<<<
காலங்காத்தால ஒரு காபிதண்ணி கேட்டது தப்புங்களாண்ணே..
>>>
ஹிஹிஹி... :)... என்ன ராசா காலைய அதுவுமா பொன்னுங்கள கொடும படுத்துகிட்டு... இதுக்கு உங்களுக்கு ஜெயில் தண்டனையே கொடுக்கலாம். :D

அப்பறம் ராசா.... மெட்டி ஒலி எப்பவோ முடுச்சுடுச்சு, சன் டிவில மறுஒளிபரப்பா???

suvaiyaana suvai said...

சரி காமடி!!!

அவிய்ங்க ராசா said...

////////////////
.:: Mãstän ::.. said...
<<<
காலங்காத்தால ஒரு காபிதண்ணி கேட்டது தப்புங்களாண்ணே..
>>>
ஹிஹிஹி... :)... என்ன ராசா காலைய அதுவுமா பொன்னுங்கள கொடும படுத்துகிட்டு... இதுக்கு உங்களுக்கு ஜெயில் தண்டனையே கொடுக்கலாம். :D

அப்பறம் ராசா.... மெட்டி ஒலி எப்பவோ முடுச்சுடுச்சு, சன் டிவில மறுஒளிபரப்பா???

10 November, 2009 7:27 PM
/////////////////
ஆமாண்ணே..மறு ஒலிபரப்பு போட்டு கொல்றாயிங்க..))

அவிய்ங்க ராசா said...

///////////////////
Suvaiyaana Suvai said...
சரி காமடி!!!
17 November, 2009 12:48 PM
//////////////////////
நன்றி சுவை..

Post a Comment