நவம்பர் கடைசியில் சென்னை வருவதால் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் நண்பன் ஒருவன் மேற்கு மாம்பலத்தில் வீடு காலி பண்ணி வேறு வீட்டிற்கு செல்வதாக சொன்னான்..நான் அந்த வீட்டை எனக்கு வாடகைக்கு தரும்படி வீட்டு ஓனரிடம் கேட்கச் சொல்லியிருந்தேன்.. அவன் தான் தொலைபேசியில் அழைத்தான்..
“ராசா..எப்படிடா இருக்க..”
“நல்லா இருக்கேன்டா..நீ எப்படி இருக்க..என்ன வீடு விசயமா, வீட்டு ஓனர்கிட்ட பேசினயா?
“வணக்கம் சார்..நான் ஆனந்த் நண்பன் பேசுறேன்..நல்லா இருக்கீங்களா..”
“ஹலோ..ஐ யாம்..பார்த்தசாரதி..ஐ ஆம் பைன்..ஹவ் ஆர் யூ..வாட் ஆர் யூ டூயீங்க்..”
“சார்..நான் சென்னையில ஒரு கம்பெனியில வேலை செய்யுறேன்..வேலை விசயமா அமெரிக்கா வந்திருந்தேன்..நவம்பர் கடைசி சென்னை வர்றேன்..அதுதான் வீடு விசயமா ஆனந்த் கிட்ட பேச சொன்னேன்..”
“யா..ஹீ டோல்டு மீ….ஐ யாம் வொர்கிங்க் அஸ் அக்கௌண்ட் மேனேஜர் இன் ரெபியூட்டட் கம்பெனி..ஐ யாம் பிரம் திருச்சி..”
(உங்ககிட்ட சொல்றதுக்கு என்னண்ணே..எனக்கு அலுவலக வேலை விசயம் தவிர மற்ற நேரங்களில் நம்மவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது பிடிக்காது..ரத்தத்திலே ஊறிக்கிடக்கிற தமிழை விட வேறு என்ன வேண்டும்..பிடிவாதமாக அவர் ஆங்கிலத்திலேயே பேசவே எனக்கு பின்பக்கம் யாரோ நெருப்பு வைத்த மாதிரி கொதித்தது..ஆற்றாமையுடன் அவரிடம் கேட்டே விட்டேன்)
“சார்..திருச்சின்னு சொல்லுறீங்க..தமிழிலிலே பேசலாமே..”
“ஹி..ஹி…அதுவா தம்பி..அப்படியே பழகிடுத்து..எங்களுக்கு நல்ல குடும்பம்தான் முக்கியம்..”
“கண்டிப்பா சார்..என்னால உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது..”
"ஓகே..உங்க பிரண்ட் 7000 வாடகை கொடுத்தார்..நீங்க 10,000 கொடுத்துடுங்கோ..ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்துடுங்கோ..”
“சார்…பத்தாயிரமா...நான் சென்னை வந்து வந்து முதல்ல வாங்கின சம்பளமே 3000 தான் சார்….ரொம்ப அதிகம் சார்..அதுவும் ஒரு லட்சம்….மிகவும் அதிகம் சார்..”
“என்னப்பா தம்பி..எந்த காலத்தில் இருக்கீங்க..சென்னையில இந்த ஏரியாவுல கம்மிங்க..நீங்க இல்லைன்னா, சாப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்குற ஆயிரம் பேர் வர்றாங்க..எல்லாம் பேச்சிலர்ஸ் பசங்க..15,000 ரூபா கொடுக்க கூட தயாரா இருக்கா….”
“நானும் சாப்ட்வேர் கம்பெனியில்தான் சார் இருக்கேன்..வீட்டுல கொஞ்சம் கமிட்மெண்ட் இருக்கு….அதனால தான்..கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாமே..”
“சரி..தம்பி, ஆனந்த் பிரண்டா வேற போயிட்டீங்க..9000 கொடுத்திடுங்கோ..ஓகே..”
எனக்கு இது அதிகப்படியா தெரிந்தாலும் மறுக்க முடியவில்லை..
“சரிங்க சார்..நான் அங்கு வந்து உங்களை நேரா பார்க்குறேன்..”
“ஓகே தம்பி..உங்க பேரைக் கேட்க மறந்துட்டேன்..உங்க பேர் என்ன..?”
பேரைச் சொன்னேன்..பேரைச் சொன்னவுடன் எதிர்பக்கத்தில் கனத்த மௌனம்.. சிறிது நேரம் கழித்து கட் ஆகி விட்டது…ஒரு 10 நிமிடம் கழித்து நண்பனுக்கு போன் பண்ணினேன்..
“டே….ஆனந்த்..ராசா பேசுறேன்..என்னடா கட் ஆகிடுச்சு..ஓனர் ஓகே பண்ணிட்டார்ன்னு நினைக்கிறேன்….மீதியெல்லாம் அங்க வந்து பேசிக்கிறேன்..”
“ராசா..அந்த வீடு வேணான்டா..உனக்கு நல்ல வீடு பார்க்குறேன்..”
“ஆனந்து..என்னடா ஆச்சு..வீட்டு ஓனர் கூட ஓகே சொல்லிட்டாருலடா..அப்புறம் என்ன..”
“இல்லடா..கடைசியா வேணாம்னு சொல்லிட்டார்..”
“டே..ஏண்டா..நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தார்..”
“ப்ச்..வேணான்டா..விட்டுடு…”
“டே..வெண்ணை..இப்ப காரணத்தை சொல்லலே, அங்க வந்து அடிப்பேன்..சொல்லுடா..”
“ராசா..நீ ஏண்டா அவர்கிட்ட உன் பெயரை சொன்ன..உன் பெயரைக் கேட்டதுமே நீ கிறிஸ்டியன்னு தெரிஞ்சு போச்சு..வேற பெயர் சொல்லி இருக்கலாம்ல..”
“டே..வீட்டுக்காக பேரை எப்படிடா மாத்த முடியும்..”
“ராசா..இங்க மாத்திதான் ஆகணும்..இல்லைனா இந்த ஏரியாவுல வீடு கிடைக்காது….”
“டே..நான் என்ன பண்ணினேன்டா..ஏண்டா, நானும் தமிழ்நாட்டுலதானடா பிறந்தேன்..நான் யாருக்கும் எந்த தப்பும் பண்ணலையேடா..”
“ராசா..கொஞ்சம் பிராக்டிகலா திங்க் பண்ணு..உனக்கு இந்த ஏரியாவுலதான் வீடு வேணும்னா இதைத் தவிர வேற வழியில்லை..ஒன்னு பண்ணுவோம்..கொஞ்ச நாள் எங்கயாவது மேன்சனில தங்கு….நான் எனக்குன்னு சொல்லி இந்த ஏரியாவுல வீடு தேடுறேன்..அதுக்கப்புறம் நீ வந்து குடியேறிக்க..ஓனர் கிட்ட சொல்லி அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்..”
எனக்கு மனசு கேட்கவில்லை..ஆனால் வேற வழியும் தெரியவில்லை..
“ம்ம்….சரி..நீ வீடு தேடுறப்ப என்னையும் கூப்பிடு நானும் வர்றேன்..”
“டே..ராசா..வேணான்டா..உன்னைப் பார்த்தா கொஞ்சம் கஷ்டம்..”
“ஏண்டா..”
தயங்கி தயங்கி சொன்னான்..
“இல்லடா..நீ கருப்பா வேற இருக்கியா..அதனால உன்னை ********* ******** ********* ************** “
எனக்கு செருப்பை கழட்டி அடித்த மாதிரி இருந்தது..இதற்கு மேல் அவனிடம் பேச முடியவில்லை..
பல கேள்விகள் என் மனதில் ஓடின..அதைக் கலைத்தாற்போல் தொலைபேசி அழைத்தது..அம்மா தான்..
“அம்மா..எப்படி இருக்கீங்க..”
“நல்லா இருக்கேம்பா..” அம்மா குரலில் சந்தோசம் தெறித்தது..
“ஏம்மா..குரலில ரொம்ப சந்தோசம் தெரியுது..என்ன விஷயம்..”
“இல்லப்பா..பக்கத்து ஐயர் வீட்டு மாமி வந்திருக்காங்க..நீ ஊரில இருந்து வர்றத சொன்னேன்..ரொம்ப சந்தோசப்பட்டாங்க..இந்த நீயும் பேசு..”
மாமியிடம் கொடுத்தார்கள்..
“மாமி..எப்படி இருக்கிங்க..”
“நல்லா இருக்கேன் ராசா..அம்மா விஷயம் சொன்னாங்க..நேக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா..பத்திரமா ஊரில இருந்து வாப்பா..நீ பத்திரமா வரணும்னு நான் பக்கத்துல பெருமாள் கோயிலுல போய் வேண்டிக்கிட்டு பிரசாதம் கொண்டு வந்து அம்மாகிட்ட கொடுத்திருக்கேன்..நீயும், உன் மனைவியும் எங்க வீட்டுல வந்து சாப்பிட்டுதான் போகணும், சொல்லிப்புட்டேன்..அப்புறம் உங்க சர்ச்ல ஏதோ திருவிழாவாம்..அம்மா சொன்னாள்..அம்மாவை வேண்டிக்க சொன்னேன்..நீ எதுவும் கவலைப்படாதே..நான் கும்புடுற பெருமாளும், நீங்க கும்புடுற ஏசு சாமியும் உன்னை பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடும்..நான் வர்றேன்பா..”
அப்போதுதான் அதை உணர்ந்தேன்..இன்னும் மனிதம் செத்து விடவில்லை..சில பேரிடம் தற்காலிகமாக செத்து கிடந்தாலும் பல பேரிடம் உயிரோடுதான் இருக்கிறது..
“என்னங்க..அம்மா பேசினாங்களா..” என் மனைவி..
“ஆமா….பக்கத்து வீட்டு மாமி கூட இருந்தாங்க..அவுங்க கூடயும் பேசினேன்..”
“ஓ..யாரு..நான் கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்கு வந்தப்ப, “நாந்தான் உங்க குழந்தைக்கு பெயர் வைப்பேன்” னு சொல்லி கேலி பண்ணினாங்களே..அந்த மாமியா..”
என் மனைவியின் சந்தோசம் கண்களில் தெரிந்தது..
“ரொம்ப நல்லவங்க..ம்..அதுசரி..நமக்கு குழந்தை பிறந்தா நான் தான் பெயர் வைப்பேன்..” என் மனைவி செல்ல அடம் பிடித்தாள்..
“சரிங்க மேடம்..எங்க ஒரு பெயர் சொல்லுங்க பார்ப்போம்..”
“ம்..நாலு பெயர் யோசித்து வைத்திருக்கேன்..நல்லா இருக்கா பாருங்க..ஜோசப், மாத்யூ, தாமஸ், லெவின்..”
“ஏம்மா..எல்லா கிறிஸ்டியன் பெயரா இருக்கே..வேற ஏதாவது பெயர்….”
அவசரமா குறுக்கிட்டாள்..
“ஏங்க..நாம கிறிஸ்டியன் தானே..”
எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை..
“ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே”
பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் “பாரதி” படத்திலிருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது…
33 comments:
அருமை... அதற்கு மேல் சொல்ல வார்த்தை வரவில்லை
ராசா, வருந்துகிறேன்.
பெருநகரங்களில் வீடு வாடகைக்கு கிடைப்பது பெருங்கஷ்டம். அதுவும் (சாதி, மத) சிறுபான்மையினர் வீடு கேட்டு அருகிலேயே வரக்கூடாது என்கிற நிலை.
நீங்க போன்ல பேசின 'மிஸ்டர் ஹவுஸ் ஓனர்' வாய்ப்பு கிடைக்கும் போது சாதியம் ஒழிய பேசுபவராய்தான் இருப்பார். உங்கள் நண்பர் கூட நிறத்தால் சாதீய வேறுபாடு காண முற்படுகிறாரே.
சாதிகள் இல்லையடி பாப்பா...
பாடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
intha "house owner naayi" kitta neenga Rs.15,000 vadagai tharen sollunga... vizhunthachi veetai vaadaikku tharuvan...
panathaasai pidchia mel jaadhi ena thannai ninaithu kondirikkira mirugangal...
///பக்கத்து ஐயர் வீட்டு மாமி வந்திருக்காங்க..///
ithu thaan thappu... neengale yen jaathi pera solli koopudreenga...
pakkathu veetu maami-nnu sonna pothume..
அருமை ராஜா. பலது அப்படி இருந்தாலும் சிலர் இப்படி இருப்பதால்தான் உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அனானி அண்ணன் சொன்னமாதிரி.,
15000மோ அல்லது அதுக்கும் அதிகமா வாடகை கொடுதீங்கன்னா தங்குவதென்ன வெடிகுண்டே செய்யலாம்.
ஆமா... இனி நகர வீடுகளில் தங்க நினைக்கும் 'தகுதி இல்லாதவர்கள்' இரட்டை வாடகை தர தயாராயிருக்க வேண்டும்.
நிறம் என்னபா நிறம்
அந்த வூட்டுக்காரன் மன்சு அட்ட கருப்பா கீது
நீ கவலைபடாதே நைனா
உன் மன்சு சும்மா தேங்காய் சில்லு கணக்கா கீதுபா
உன் மன்சு கேத்த மேரீ வூடு கெடக்க ஆண்டவன் கைல சொல்றேன்பா
அருமையான பதிவு...! அசத்தல்..!
muslims -kkuthaan intha pirachanai endraal christinaukkumaa?
adak kadavulee....
அருமையான பதிவு. நமக்குள் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை. அல்லக்கை அரசியல்வாதிகள் தான் நமக்குள் பிரிவினையை உண்டாக்கிவிட்டர்கள்.
பதிவு எழுதவும் பின்னூட்டங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால் இந்த தமிழ் பெரியது, தமிழே உயிர் என்பது எல்லாம் நன்றாக இருக்கும்.
இன்றைக்கு சென்னை இளைஞர் இளைஞிகளுக்கு சோறு போடுவதும், வேலை வாய்ப்பு அளிப்பதும் ஆங்கிலமே.
இந்த உண்மையை நாம் வெட்கத்தை விட்டு ஒப்பு கொள்ளத்தான் வேண்டும்.
ஆங்கிலப் புலமை இல்லாவிடில் இன்றைய அலுவலகங்களில் பதவி உயர்வு என்பது எட்டக் கனி.
மீனம்பாக்கத்தை தாண்டிய எல்லா NRI க்கும் தமிழ் உணர்வு பொங்கிடும்,
இந்த ஜாதி பேதத்துக்கு காரணம் நாமதான்னே.
உங்களோட ஜாதி சான்றிதழ் இல்லாமல் மேற்படிப்பிற்கோ, வேலைக்கோ முயன்று வாருங்கள். அப்பறம் அடுத்தவனை திருத்தலாம் அண்ணே. அவனுடைய வாய்ப்பை நீங்க தட்டி பறித்து விட்டு அப்புறம் அவன் உங்களை ஆட்டத்துக்கு செர்த்துக்களைன்னு பொலம்ப கூடாது அண்ணே.
////////////////////////
ஆ.ஞானசேகரன் said...
அருமை... அதற்கு மேல் சொல்ல வார்த்தை வரவில்லை
1 November, 2009 7:14 PM
///////////////////////
நன்றி ஞானசேகரன்..
/////////////////////
er, 2009 7:14 PM
பீர் | Peer said...
ராசா, வருந்துகிறேன்.
பெருநகரங்களில் வீடு வாடகைக்கு கிடைப்பது பெருங்கஷ்டம். அதுவும் (சாதி, மத) சிறுபான்மையினர் வீடு கேட்டு அருகிலேயே வரக்கூடாது என்கிற நிலை.
நீங்க போன்ல பேசின 'மிஸ்டர் ஹவுஸ் ஓனர்' வாய்ப்பு கிடைக்கும் போது சாதியம் ஒழிய பேசுபவராய்தான் இருப்பார். உங்கள் நண்பர் கூட நிறத்தால் சாதீய வேறுபாடு காண முற்படுகிறாரே.
சாதிகள் இல்லையடி பாப்பா...
பாடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
1 November, 2009 7:20 PM
/////////////////
கண்டிப்பாக இந்த நிலை மாறும் பீர்முகம்மது..அதுவரை காத்திருப்போம்..
///////////////////
Anonymous said...
intha "house owner naayi" kitta neenga Rs.15,000 vadagai tharen sollunga... vizhunthachi veetai vaadaikku tharuvan...
panathaasai pidchia mel jaadhi ena thannai ninaithu kondirikkira mirugangal...
1 November, 2009 7:44 PM
///////////////////////
அண்ணே..தப்பா எடுத்துக்காதீங்க..நீங்கள் சொல்ல நினைத்த கருத்தை கொஞ்சம் மெலிவாக சொல்லலாமே..
////////////////////
Anonymous said...
///பக்கத்து ஐயர் வீட்டு மாமி வந்திருக்காங்க..///
ithu thaan thappu... neengale yen jaathi pera solli koopudreenga...
pakkathu veetu maami-nnu sonna pothume..
1 November, 2009 7:45 PM
/////////////////
நண்பா..எனக்கு நடந்ததை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன்..என்னுடைய அம்மா சொல்லியதையே இங்கும் பதிவு செய்திருக்கிறேன்..நான் அவ்வாறு கூறியதாக எந்த இடத்திலும் இல்லை..அம்மா அவ்வாறு கூறியது தவறென்றால், தவறுதான்..மாற்று கருத்து இல்லை..
////////////////////////
வானம்பாடிகள் said...
அருமை ராஜா. பலது அப்படி இருந்தாலும் சிலர் இப்படி இருப்பதால்தான் உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது.
1 November, 2009 8:10 PM
/////////////////////////
நன்றி வானம்பாடிகள்..கண்டிப்பாக இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது..
/////////////////////
er, 2009 8:10 PM
அப்பாவி முரு said...
அனானி அண்ணன் சொன்னமாதிரி.,
15000மோ அல்லது அதுக்கும் அதிகமா வாடகை கொடுதீங்கன்னா தங்குவதென்ன வெடிகுண்டே செய்யலாம்.
1 November, 2009 9:38 PM
பீர் | Peer said...
ஆமா... இனி நகர வீடுகளில் தங்க நினைக்கும் 'தகுதி இல்லாதவர்கள்' இரட்டை வாடகை தர தயாராயிருக்க வேண்டும்.
1 November, 2009 10:13 PM
/////////////////////
முருகன், பீர் அண்ணே..கண்டிப்பாக இந்த நிலை மாறும்..காசில்லாதவங்க நிலைமையே நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே,,.
////////////////////
கருவாச்சி said...
நிறம் என்னபா நிறம்
அந்த வூட்டுக்காரன் மன்சு அட்ட கருப்பா கீது
நீ கவலைபடாதே நைனா
உன் மன்சு சும்மா தேங்காய் சில்லு கணக்கா கீதுபா
உன் மன்சு கேத்த மேரீ வூடு கெடக்க ஆண்டவன் கைல சொல்றேன்பா
2 November, 2009 12:36 AM
////////////////////////
சந்தோசத்துல நிசமாலுமே கண்ணீர் வருதுப்பா..))
//////////////////////
r, 2009 12:36 AM
கலகலப்ரியா said...
அருமையான பதிவு...! அசத்தல்..!
2 November, 2009 12:57 AM
//////////////////////
நன்றி பிரியா..
/////////////////////
sikkandar said...
muslims -kkuthaan intha pirachanai endraal christinaukkumaa?
adak kadavulee....
2 November, 2009 2:29 AM
/////////////////////
சமூகத்தில் மெலிவாக இருக்கும் அனைவருக்கும் இதே நிலைமைதான் நண்பா..((
/////////////////////////
Shabeer said...
அருமையான பதிவு. நமக்குள் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை. அல்லக்கை அரசியல்வாதிகள் தான் நமக்குள் பிரிவினையை உண்டாக்கிவிட்டர்கள்.
2 November, 2009 4:45 AM
//////////////////////////
நன்றி சபீர்..
/////////////////////////
குப்பன்.யாஹூ said...
பதிவு எழுதவும் பின்னூட்டங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால் இந்த தமிழ் பெரியது, தமிழே உயிர் என்பது எல்லாம் நன்றாக இருக்கும்.
இன்றைக்கு சென்னை இளைஞர் இளைஞிகளுக்கு சோறு போடுவதும், வேலை வாய்ப்பு அளிப்பதும் ஆங்கிலமே.
இந்த உண்மையை நாம் வெட்கத்தை விட்டு ஒப்பு கொள்ளத்தான் வேண்டும்.
ஆங்கிலப் புலமை இல்லாவிடில் இன்றைய அலுவலகங்களில் பதவி உயர்வு என்பது எட்டக் கனி.
மீனம்பாக்கத்தை தாண்டிய எல்லா NRI க்கும் தமிழ் உணர்வு பொங்கிடும்,
2 November, 2009 11:43 AM
/////////////////////////
அண்ணே..இரண்டு தமிழர்கள் பேசும்போது மட்டும் ஏன் தாய்மொழியில் பேசிக் கொள்வதில்லை..கண்டிப்பாக மீனம்பாக்கத்தை தாண்டும்போது தமிழுணர்வு வருகிறது..இதற்காக வெட்கம்தான் படவேண்டும், நான் உள்பட..
////////////////////////
இந்த ஜாதி பேதத்துக்கு காரணம் நாமதான்னே.
உங்களோட ஜாதி சான்றிதழ் இல்லாமல் மேற்படிப்பிற்கோ, வேலைக்கோ முயன்று வாருங்கள். அப்பறம் அடுத்தவனை திருத்தலாம் அண்ணே. அவனுடைய வாய்ப்பை நீங்க தட்டி பறித்து விட்டு அப்புறம் அவன் உங்களை ஆட்டத்துக்கு செர்த்துக்களைன்னு பொலம்ப கூடாது அண்ணே.
2 November, 2009 12:24 PM
//////////////////////
முதலில் என்னைப் பற்றி..நான் எங்கும் ஜாதி சான்றிதழ் காண்பித்து வேலைக்கு வரவில்லை..யாருடைய வாய்ப்பையும் யாரும் பறிக்க முடியாதுண்ணே..திறமை உள்ளவன் கண்டிப்பாக முன்னுக்கு வருவான்..
மிக சிறு வயதில் வகுப்பு தோழன் வீடிற்கு சென்றிருந்தேன்...நண்பனின் வீட்டில் பலகாரங்கள் பரிமாறப் பட்டன...எனக்கும் அவனுக்கும்.எவர்சில்வர் கிண்ணங்களில். பின்பு நண்பனின் தாய் என்னுடைய சொந்த ஊர் பற்றி விசாரித்தார்....நான் ஊர் பெயரைச் சொன்னுடன் அவர் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள்...அவரும் அவ்விடத்தில் பிறந்தவராம்...என் நிறத்தைப் பார்த்து நான் அவர் சார்ந்த சமூகத்தைச் சார்ந்தவன் என்று நினைத்து விட்டாரோ என்னவோ.....பின்பு அவ்வூரில் எனது தாத்தாவின் வீடு எங்கு உள்ளது என்று கேட்டார் நான் ஊர் பேரைச் சொன்னதும் அவர் முகம் மாறி விட்டது..! ஊர் பேரோடு சேரி என்ற சொல்லையும் சேர்த்து தான் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார். எனக்கு அந்த சொல் புதிதாக இருந்தது...ஏனென்றால் எனது தந்தை அப்படி சொல்லித் தரவில்லை. பின்பு அத்தாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டபொழுது ஒரு பழைய பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் தந்தார்..குழந்தைப் பருவமென்றாலும் எதோ புரிந்தது போலிருந்தது...அம்மாவிடம் நடந்ததை சொன்ன போது இனிமேல் அவ்வீடிற்கு செல்லவேண்டாம் என்று மட்டும் சொன்னார்.
Victor,
Write up is good...but this is quite old and infact you have stayed in 2 apartment in the past in the same area...and you know more...
Still I will not forget the old roommate which you left to me...where i was forced to vacate...
Rajesh
வாசித்த எஃபெக்ட் ரொம்ப நேரம் இருந்தது! சிந்திக்க வைக்கும், நல்ல நடையில் ஒரு இடுகைக்கு பாராட்டுகள், நன்றி.
/////////////////////
r, 2009 6:27 PM
லெமூரியன் said...

2 November, 2009 8:28 PM
////////////////////////
கலங்கவைத்து விட்டீர்கள் லெமூரியன்..
/////////////////////////
er, 2009 8:28 PM
rajesh said...
Victor,
Write up is good...but this is quite old and infact you have stayed in 2 apartment in the past in the same area...and you know more...
Still I will not forget the old roommate which you left to me...where i was forced to vacate...
Rajesh
////////////////////////
ராஜேஷ்..2 வருடங்களாக அங்கு இருந்ததால்தான் எழுதுகிறேன். மற்றும், நீங்கள் வெளியே போனதற்கு நான் காரணமா..அதிர்ச்சியாக இருக்கிறது..
///////////////////
enRenRum-anbudan.BALA said...
வாசித்த எஃபெக்ட் ரொம்ப நேரம் இருந்தது! சிந்திக்க வைக்கும், நல்ல நடையில் ஒரு இடுகைக்கு பாராட்டுகள், நன்றி.
4 November, 2009 11:14 PM
/////////////////
நன்றி பாலா..
எழுத்து நடை சிறப்பு.
/////////////////
கோவி.கண்ணன் said...
எழுத்து நடை சிறப்பு.
9 November, 2009 9:33 PM
////////////////
நன்றி கண்ணன்..
Post a Comment