Tuesday 22 July, 2014

வேலை இல்லா பட்டதாரி – ஜெயிச்சுட்டான்யா தனுஷ்


“குழந்தைங்க ஏன் வளர்ந்தாங்கன்னு பயமா இருக்கு” என்று வீட்டு சுட்டிபையன் செய்யும் சேட்டைகளைப் பார்த்து, அம்மா சொல்லுவதாக தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வருவதுண்டு. அதே சுட்டிப்பையனை இரண்டு மடங்காக நினைத்து கொள்ளுங்கள், அதோடு கொஞ்சம் பாசம், கொஞ்சம் அழுகை, கொஞ்சம் தூக்கம் இவற்றை கொஞ்சம் தூக்கலாக கலந்து கொண்டால், என் வீட்டு குட்டிப்பையன்..

வயது மூன்றரைதான் இருக்கும்.ஆனால் பண்ணும் அழிச்சாட்டியம் இருக்கிறதே..யப்பே..அவனை கண்காணிப்பதற்கென்றே, தனி “காவலர்” போடலாம் என்று அவ்வப்போது தோன்றுவதென்று. குடும்பம் சகிதமாக, தியேட்டரில் படம்பார்த்து, மூன்றரை வருடங்கள் ஆகிவிட்ட்து, என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..ஒரு படம் பார்க்க விடமாட்டான்..

தியேட்டர்க்கு செல்லும் வரைக்கும் படுஅமைதியாக இருப்பான். அட, தியேட்டரில் விளம்பரம் பார்க்கும் வரைக்கும் கூட படு அமைதி..நியூஸ் ரீல் போடும்போது, கொடுப்பான் பாருங்கள் ஒரு சத்தம்...”வீல்..” ஆப்ரேட்டர் கூட,”அட இந்த விளம்பரத்தை நம்ம போடலியே” என்று சந்தேகம் வந்து எட்டிப்பார்ப்பார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..அப்புறம் என்ன, ஒன்று, என் மனைவி படம் பார்ப்பாள்.. நான், என் மகனை தூக்கி வெளியே வந்து, கேண்டினில் வந்து பாப்கார்ன், ப்ப்ஸ் வேடிக்கை பார்ப்போம்..அல்லது, நான் படம் பார்ப்பேன், என் மனைவி வெளியே வந்து உக்கார்ந்திருப்பாள்.

இதற்கு பயந்தே, குடும்பம் சகிதமாக படம் பார்த்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட்து. சரி, இந்தமுறை ஒரு ரிஸ்க் எடுத்துதான் பார்த்து விடுவோமே என்று ஏ.ஜி.எஸ் அரங்கில் “வேலை இல்லா பட்ட்தாரி” புக் செய்தேன்..வழக்கம்போல், ஸ்கிரீனில் விளம்பரம் போட, அமைதியாக பார்த்தான்..நானும் மனைவியிடம் “ரெடியா இரு..” என்று அலர்ட் செய்தேன், புயலுக்கு முன்பு வரும் அமைதி போல்..

நியூஸ் ரீல் போட்டான்..என்ன ஒரு ஆச்சரியம்..ஒரு சத்தம் கூட காணோம்..”பயபுள்ள தூங்கிட்டானா” என்று எனக்கு ஒரு சந்தேகம்..முழித்து கொண்டுதான் இருந்தான்...அடுத்த நிமிஷம் “வேலை இல்ல்ல்ல்லா பட்ட்தாஆஆரி...” என்று அனிருத் அடி தொண்டையில் கத்த..எனக்கு பயமாக இருந்த்து..அய்யோ அனிருத்தே இந்த கத்து கத்துறானே, நம்ம பையன்...என்ன ஒரு ஆச்சரியம்..என் பையன் கைதட்டுறான்....

வீட்டுக்காரி...”என்ன்ங்க” என்றாள்...
நான், “பொறு..படம் ஆரம்பிக்கட்டும்..நம்ம பையன் படம் அடுத்து இருக்கு” என்றேன்...

படம் செல்ல, செல்ல, ஒரு சத்தம் கூட வரவில்லை..அவ்வளவு இன்வால்மெண்ட்..சில நேரங்களில் கைகூட தட்ட ஆரம்பித்தான் என்றால் என்னாலேயே நம்பமுடியவில்லை..முக்கியமாக தனுஷ் “அமுல்பேபி, ரகுவரனை வில்லனாத்தான பார்த்தருக்க” என்று சொல்லும்போது, என்ன ஒரு அப்ளாஸ்..கைதட்டுவது என் வீட்டு சுட்டிப்பையன்..

என்ன ஒரு பாடலில், தனுஷ், அமலாபால் கொஞ்சம் நெருக்கம் காட்டும்போது, “ஏ.எல்.விஜய்” யை காட்டிலும் நான் நெளிய வேண்டியிருந்த்து..டக்கென்று பையனை பார்த்து...”குட்டி...அங்கபாரு பேன் ஓடுது” என்று டைவர்ட் செய்ய முயற்சித்தேன்..அதற்கு அவன் முறைத்த முறைப்பு, பாட்ஷா பட்த்தில் ரஜினி தம்பியைப் பார்த்து ஒரு முறை, முறைப்பாரே, அதைவிட கொடூரமானது..”எவ்வளவு, இண்டெரஸ்டிங்கா போகுது..ங்கொய்யாலே, மறைக்காதடா தகப்பா” என்று அர்த்தம் நிறைந்த முறைப்பு..இதற்கு மேல் மறைத்தால், இருக்கும் மரியாதையும் காணாமல் போய்விடும் என்ற பயத்தால் திரையை நோக்கி என் பார்வையை செலுத்தினேன்...

என்னது, விமர்சனமா..அதான் சொல்லிவிடேன்..தனுஷூக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் சூப்பர் ஹிட்..முதல் பாதி முழுதும் செம ரகளை...குறிப்பாக “எனக்கு மட்டும் வில்லன் பேரு..இவனுக்கு ஹீரோ பேரா” என்று அலுக்கும்போது அள்ளி கொள்கிறார் பாராட்டுக்களை...

இரண்டாவது பாதி கொஞ்சம் சீரியசாக சென்றாலும், தனுஷின் பஞ்ச் டயலாக்குகள் எதுவும் பயமுறுத்தவில்லை..அனைத்தும் மாஸ், கிளாஸ்..மாஸ், கிளாஸ்..பாதி ஸ்கோர் அனிருத்துக்கு..ஸ்டைலாக பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, அப்படியே ஒரு நடை நடக்கும்போது, தியேட்டரே அதிருகிறது...

படம் முடிந்தபிறகும், என் பையனுக்கு வெளியே வர விருப்பமில்லை..”ரிப்பீட்டு” கேட்டுவிடுவானோ என்ற பயத்துடன் வலுக்கட்டாயமாக வெளியே தூக்கி வந்தேன்...
வெளியே வந்து, வாண்டுவிடம் கேட்டேன்...
“என்ன படம்பா பார்த்தா...”

“ம்ம்....அது...வந்து...வேலை இல்லா பட்டாளி...ரகுவரன்...”

என்று த்த்தி த்த்தி பிஞ்சு குரலில் சொல்ல அவனை அப்படியே அள்ளி கொண்டேன்...


தனுஷ் ஜெயிச்சுட்டான்யா....

4 comments:

செங்கதிரோன் said...

கலக்கல் விமர்சனம் ...ஒரு குழந்தையின் பார்வையில் படத்தினை விமர்சனம் செய்த விதம் அருமை...

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

please provide ''follow by mail facility''
karthik amma

Unknown said...

super movie

Unknown said...

super movie

Post a Comment